கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 23, 2010

உலகளாவிய கவிதை போட்டி 8 பேருக்கு ஸீ2.75 லட்சம் பரிசு


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, உலகளாவிய கவிதைப் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற 8 பேருக்கு முதல்வர் கருணாநிதி ஸீ2.75 லட்சம் பரிசு வழங்கினார்.
கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, ‘சங்கத் தமிழ் அனைத்தும் தா’ என்ற தலைப்பில் ‘உலகளாவிய கவிதைப் போட்டி’ நடத்தப்பட்டது. போட்டியின் முடிவுகள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இதில், புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பா.ரவிகுமார் முதல் பரிசும், திருச்சி அண்ணா பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் கண்மணி 2வது பரிசும், குமரி மாவட்டம் தக்கலை எச்.ஜி.ரசூல் 3வது பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி பரிசுகளை 17.08.2010 அன்று வழங்கினார். முதல் பரிசு பெற்ற ரவிகுமாருக்கு ஸீ1 லட்சம் மற்றும் தங்கப் பதக்கம், 2ம் பரிசு பெற்ற கண்மணிக்கு ஸீ75,000 மற்றும் தங்கப் பதக்கம், 3ம் பரிசு பெற்ற ரசூலுக்கு ஸீ50,000 மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசு பெற்ற துரைமுருகு (திண்டுக்கல்), குடந்தையான் (பூந்தமல்லி), பாலகிருட்டினன் (சென்னை), தமிழ்மணி கதிரேசன் (மலேசியா), அமுதா சுதாகர் (பெரம்பலூர்) ஆகியோருக்கு தலா ஸீ10,000 வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித் துறை செயலர் கணேசன், உலகத் தமிழ் மாநாடு தனி அதிகாரி அலாவுதீன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment