கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 13, 2010

மக்களவையில் இந்திமொழிக்கு திமுக கடும் எதிர்ப்பு


மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது மின்துறை இணை அமைச்சர் பாரத்சிங் சோலங்கி இந்தியில் பதிலளித்தார். அப்போது திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு இவ்விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இப்பிரச்சனை சரி செய்யப்படாவிட்டால் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக அறிவித்து எழுந்து நடக்க முயன்றார்.

அப்போது குறுக்கிட்ட சோலங்கி, ஆங்கிலத்தில் பதிலளிப்பதாகக் கூறினார். எனினும் இந்தியில்தான் பதிலளிக்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கேள்வியை பாஜக உறுப்பினர் இந்தியில்தான் கேட்டுள்ளார். எனவே இந்தியில்தான் பதிலளிக்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் மீராகுமார் அறிவித்தார். பின்னர் அவை கூடியதும், மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தடங்கல்களுக்காக மீராகுமார் வருத்தம் தெரிவித்தார்.

சில தொழில்நுட்பப் பிரச்சனை காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டுவிட்டது என மீராகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment