About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Thursday, August 12, 2010
திருச்சியில் பொதுக்கூட்டம்: கலைஞர் பங்கேற்பு
திருச்சிக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 8ஆம் தேதி முதல்வர் கருணாநிதி செல்கிறார். திருச்சியில் ரூ.12 1/2 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
அதன்பிறகு திருச்சி மாநகராட்சி சார்பில் நடந்து வரும் ரூ.169 கோடி மதிப்பிலான, புதிய ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டத்தையும், வெள்ள தடுப்பு பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
8ஆம் தேதி காலை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். அன்று மாலை திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள கலைஞர் அறிவாலயம் அருகே நிறுவப்படும் அன்பில் தர்மலிங்கம் சிலையை திறந்து வைக்கிறார்.
பிறகு அன்று திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். முதல்வர் கருணாநிதியுடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.
முதல்வர் கருணாநிதி, வருகையையொட்டி கலெக்டர் அலுவலக கட்டிடப் பணிகள், தாசில்தார் அலுவலக கட்டிட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது. அன்பில் தர்மலிங்கம் சிலை நிறுவும் பணியையும் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு தொடங்கி வைத்து உள்ளார். பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment