கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 31, 2010

அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வன்முறையை கட்டவிழ்க்க கம்யூனிஸ்ட்கள் திட்டம்


முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிட இயக்கம், தி.க.வாக போராட்டங்களில் ஈடுபட்ட போதும் சரி, தி.மு.க என்ற நிலையில் போராட்டங்களில் ஈடுபட்ட போதும் அமைதியான முறையில், அறவழியில் நடத்தின.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்த போதுகூட, 1938ம் ஆண்டுவாக்கில் சென்னை, தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளி வாசலில் அறப்போர் வீரர்கள் அணிவகுத்து நின்று முதல் அணியிலே யார் யார் என்று பெயர் குறிப்பிடப்பட்டு, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட பள்ளியின் வாசலில், குறிப்பிட்ட தோழர்கள் மாத்திரம் அமைதியான முறையில் மறியல் செய்து கைதாகியிருக்கிறார்களே தவிர, மொழிப் போராட்ட வீரர்கள், பள்ளியை முற்றுகையிடுவார்கள் என்றோ அல்லது இந்தியைக் கட்டாயப்படுத்திய அன்றைய ஆட்சியாளர்களுடைய கோட்டையை முற்றுகையிடுவார்கள் என்றோ கட்சித் தலைமையினால் அறிவிக்கப்படவுமில்லை. அப்படியொரு போராட்டத்தில் ஈடுபடவும் இல்லை.
ஆனால், கம்யூனிஸ்ட்கள் நடத்துகின்ற கிளர்ச்சி எதுவாயினும், அதற்கு ஒரு போர்க்கள முத்திரையை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள், அடுத்து, கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள், அதற்கடுத்து, மறியல் என்பார்கள், அதைத் தொடர்ந்து தலைமைச்செயலகம் முற்றுகை என்பார்கள்.
அரசு இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு, அவர்கள் அணிவகுத்து வரும் படைக்கு முரசு கொட்டி வரவேண்டும் என்றும், முற்றுகைப் போராட்டத் தளபதிகளுக்கு முகமன் கூறி வரவேற்பு வழங்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பார்கள்.
இப்படித்தான் கம்யூனிஸ்ட்களுடைய கிளர்ச்சிகள் கோரிக்கைப் பேரணிகளாக மாறி கோட்டை முற்றுகை என்ற அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. அவர்கள் வைத்த கொள்ளிதான், இந்தியாவில் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதல், அராஜகம், உயிர் பலிகள் என்ற அளவுக்கு கொழுந்துவிட்டு எரிகிற காட்சியைக் காணுகிறோம்.
தமிழகத்திலும் அத்தகைய அராஜகங்களை, வன்முறைச் சேட்டைகளை, கொலை வெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட வேண்டுமென்று திட்டமிட்டு, தி.மு.க அரசுக்கு ஒரு சிறு களங்கமாவது ஏற்படுத்தினால்தான் அதை வைத்துக் கொண்டு தேர்தலில் தாங்கள் நிற்கவோ அல்லது தங்கள் கூட்டணித் தலைவி வெற்றி வாகை சூடி மீண்டும் கோலோச்சவோ முடியும் என்ற எதிர்பார்ப்போடு, திட்டங்களைத் தீட்டுகின்றனர், தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர்.
கடந்த 27 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை. தொகுப்பூதியத்தில் இருப்பவர்களை, பகுதி நேர ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக ஆக்குவதற்கு எந்த அரசாவது ஏன் மேற்கு வங்கம், கேரளா போன்ற கம்யூனிஸ்ட் அரசுகளாவது முன் வந்தது உண்டா?
ஆனால், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற கதையாக தமிழ்நாட்டில் மாத்திரம் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவோம் என்றும், அதற்கு கோட்டையை முற்றுகையிடுவோம் என்றும், அதைக் காவலர்கள் தடுத்தால், அங்கே ஏற்படுகிற தகராறை பெரிதுபடுத்தி, தமிழக அரசின் உச்சகட்ட அராஜகம் என்று ஊருக்கு ஊர் சொல்லுவோம் என்று பேசுவதும், எழுதுவதும் எந்த வகை ஜனநாயகம் என்று எனக்கு தெரியவில்லை.
சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஒருமுறை கூட ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் அவர்களுக்கு 3 முறை ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி, மற்றும் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர், சமையல் உதவியாளர், மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியத்திற்குப் பதிலாக சிறப்பு கால முறை ஊதியம் வழங்க இந்த ஆட்சிக்காலத்தில்தான் முடிவு செய்யப்பட்டது. முதல் முறையாக வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, பண்டிகைக் கால முன்பணம், ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
திமுக ஆட்சியில்தான் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியிலேதான் இவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம், சிறப்பு சேமநல நிதித் திட்டம், குடும்ப நலத் திட்டம், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மகப்பேறு காலத்தில் விடுப்பு, கோடை விடுமுறை காலத்தில் ஊதியம், பயணப்படி ஆகிய அனைத்தும் வழங்கப்படுகின்றன.
சத்துணவு அமைப்பாளர்கள், மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் தமிழகத்தில் தற்போது பெற்று வரும் ஊதியத்தின் அளவு, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிகம். இந்நிலையில் அவர்கள் முற்றுகைப் போராட்டம் என்று சொல்வது நியாயம்தானா?
கோட்டையை முற்றுகையிட வேண்டிய அளவிற்கு என்ன நடந்து விட்டது? அ.தி.மு.க. ஆட்சியில் எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் கொண்டுவரப்பட்டதைப் போல தற்போது கொண்டு வரப்பட்டுள்ளதா? அந்த ஆட்சியில் இரவோடு இரவாக அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்றே தெரியாத அளவிற்கு நிலைமை இருந்ததே, அது போல இப்போது நடக்கிறதா?
எதற்காக முற்றுகை போராட்டம்? கடந்த ஆண்டு 21&11&2009ல் சத்துணவு பணியாளர்களின் பல்வேறு சங்கங்களின் சார்பில் எம்.பழனிநாதன், வரதராசன் போன்றவர்கள் எல்லாம் வள்ளுவர் கோட்டத்திலே பல்லாயிரக்கணக்கான சத்துணவு பணியாளர்கள் திரண்டிருந்து எனக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடத்தினார்களே, அந்த அலுவலர்கள் எல்லாம் உண்மையை அறிய மாட்டார்களா?
அவர்கள் மத்தியில் நான் அடுக்கடுக்காக ஒன்றன்பின் ஒன்றாக பதினைந்து சலுகைகளை அறிவித்த போது அந்த மண்டபமே எதிரொலிக்கின்ற அளவுக்கு அவர்கள் கையொலி செய்யவில்லையா? அந்த விழாவிலே பேசியது மாத்திரமல்லாமல், அந்தச் சலுகைகளுக்காக நன்றி தெரிவித்து, பழனிநாதனும், சூரியமூர்த்தியும் அறிக்கைகள் விட்டார்களே?
ஏன், சத்துணவு பணியாளர்களுக்காக 2006ம் ஆண்டு தி.மு.க அரசு பொறுப் பேற்ற சில மாதங்களில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டபோது சட்டப் பேரவையிலேயே 2 கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், காங்கிரஸ், பா.ம.க. கட்சியினரும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துப் பேசினார்களே.
உண்மையிலே சொல்லப்போனால், சத்துணவுப் பணியாளர்கள் அனைவரும் நல்ல மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். ஆனால், ஒரு சில சங்கத்தினர் மட்டும், அவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாகவும், ஒரு சில கோவில்களைப் பார்த்துவரலாம் என்று கூறி ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வர முற்படுகிறார்களே தவிர வேறல்ல.
வேறு எந்த ஆட்சிக் காலத்திலாவது அல்லது வேறு எந்த மாநிலத்திலாவது இதுபோன்ற சலுகைகள் கிடைத்துள்ளதா என்பதைசத்துணவு ஊழியர்கள் எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment