கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 8, 2010

செல்போன்களில் தேவையற்ற அழைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை : தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.இராசா உத்தரவு


செல்போன்களை வைத்திருக்கும் மக் களுக்கு தீராத தொந்தர வாக இருப்பது, `தேவை யற்ற அழைப்புகள்' ஆகும். முக்கியமான வேலையில் இருக்கும்போது இன்சூ ரன்ஸ் வேண்டுமா, கார் வேண்டுமா, நிலம் வாங் குகிறீர்களா என யாரா வது பேசி தொந்தரவு செய்கின்றனர். இது போல, எண்ணற்ற எஸ்.எம்.எஸ். தகவல் களும் வருவது வழக்கம்.

சாதாரண மக்கள் அனைவரும் இதை சகித் துக் கொண்டுள்ளனர். ஆனால், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கே அத்தகைய அனுபவம் ஏற்பட்டது. விலைவாசி பிரச்சினை யால் நாடாளுமன்றம் முடங்கியதால் அது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் திங்கள் கிழமையன்று காலை யில் விவாதித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது, அவரு டைய செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், வீட்டு கடனுதவி வேண்டுமா? என கேட்டார். இத னால், பிரணாப் முகர்ஜி கடுமையாக ஆத்திரம் அடைந்தார். எனினும், `இப்போது முக்கிய கூட் டத்தில் இருக்கிறேன். வேண்டாம்' என தெரி வித்தார். அவருடைய கோபமான தோற்றத்தை பார்த்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நிதி அமைச்சரிடமே வீட்டுக் கடன் வேண்டுமா என கேட்டது போலவே, மத்திய அமைச்சர் அம் பிகா சோனி, பா.ஜனதா மூத்த தலைவர் வெங் கையா நாயுடு, பிஜு ஜனதா தளம் எம்.பி. கலிகேஷ், காங்கிரஸ் எம்.பி. ரஷீத் ஆல்வி என பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் எம்.பி.க்களும் பாதிக்கப் பட்டதாக புகார் தெரி வித்தனர்.

இதையடுத்து, வேண் டாத தொலைப்பேசி அழைப்புகளுக்கு எதி ராக நடவடிக்கை எடுக் குமாறு தொலைத் தொடர்பு செயலாளர் பி.ஜே.தாமசுக்கு மத்திய அமைச்சர் ஆ.இராசா கடிதம் அனுப் பினார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

உற்பத்திப் பொருள் கள் மற்றும் சேவைகள் போன்றவை டெலி மார்க் கெட்டிங் மூலமாக வழங் குவது, தற்போதைய கால கட்டத்தில் அதிகமாக இருக்கிறது. இதன் விளை வாக, தொலைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவும், அசவுகரி யமும் ஏற்படுகிறது. ஒவ் வொரு செல்போன் வாடிக்கையாளருக்கும் தேவையற்ற அழைப்பு கள் வராமல் இருக்க தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கண் காணித்து வருகிறது.

எனினும், இத்தகைய தேவையற்ற அழைப்பு கள் மற்றும் எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்து கொண்டே இருக்கின் றன. எனவே, இது தொடர்பாக அவசர கூட் டத்தை கூட்டி, தேவை யற்ற அழைப்புகளை உட னடியாக தடை செய்வ தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆ. இராசா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment