கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 30, 2010

மூப்பனாரின் 9வது ஆண்டு நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் அஞ்சலி


மறைந்த ஜி.கே. மூப்பனாரின் 9வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இன்று (30.08.2010) பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தவைர் தங்கபாலு, திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இசையமைப்பாளர் தேவா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


ஜி.கே. மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி 'மூப்பனாரின் வாழ்க்கை வரலாறு' எனும் புத்தகத்தை திரைப்பட பாடலாசிரியர் வாலி வெளியிட்டார்.


முன்னதாக மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி தீப்பந்தம் ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முடிவில் தீப்பந்தத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.


No comments:

Post a Comment