தமிழக அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கி வருகிறது. இதை எதிர்த்து கடந்த 2008ம் ஆண்டு, சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக, வாக்கு வங்கியை குறி வைத்து இலவசமாக வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படுகின்றன. இது தேர்தல் முறைகேடுக்கு வழி வகுக்கும். ஆகவே தமிழக அரசு இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்க தடை விதிக்க வேண்டும்'' என்று அவர் வழக்கில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் அந்தி அர்ஜபுனா ஆஜராகி வாதாடினார்.
இலவச டி.வி. திட்டம் நடைமுறையில் உள்ளதாகவும், முடிவடையும் கட்டத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அரசியல் காரணங்களுக்காக இவ்வழக்கு போடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
அப்போது இடைமறித்த நீதிபதிகள், கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டும், மக்களின் அறிவை வளர்க்கவும், தரத்தை உயர்த்தவும் இலவச டி.வி. வழங்கப்படுகிறது. இதில் என்ன தவறு?' என்று கேட்டனர். பிறகு, வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment