தமி ழக முதல்வர் கலைஞர் தனது வீட்டையே கொடை யாகக் கொடுத்தபிறகு, ஆக்கிரமிப்பு எதற்கு செய்யப் போகிறார் என எதிர்க்கட்சிகளுக்கு சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
கிண்டியில் உள்ள அய். டி.சி. நிறுவனத்திடமி ருந்து பதினான்கரை கிரவுண்டு திறந்தவெளி நிலத்தை கையகப்படுத்தி மேயர் மா.சுப்பிர மணியன் கேள்வி கிண்டி யில் உள்ள அய்.டி.சி. நிறுவனம் சென்னை மாந கராட்சிக்கு வழங்கிய திறந்தவெளி நிலத்தினை நேற்று (28.8.10) மேயர் மா.சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை யில் சென்னை மாநக ராட்சி கையகப்படுத்தி, மாநகராட்சிக்கு சொந்த மான இந்த இடம் திறந்த வெளி நிலம் என்று பெயர்ப்பலகை வைக்கப் பட்டு, புல்டோசர்கள் மூலம் தேவையற்ற கழி வுகள் அகற்றப்பட்டது.
இந்த இடத்தினை மேயர் மா.சுப்பிர மணி யன்ஆய்வு செய்து கூறு கையில், தமிழக முதல் வர் கலைஞரின் உத்தர வுப்படியும், துணை முத லமைச்சர் மு.க. ஸ்டா லின் அவர்களின் அறி வுரைப்படியும் சென்னை மாநகராட்சி கடந்த 4 ஆண்டுகளாக திறந்த வெளி நிலங்களை கைய கப்படுத்தும் நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. அய்.டி.சி. நிறு வனம் வழங்கிய பதினான் கரை கிரவுண்டு நிலம் பெருநகர வளர்ச்சிக் குழு மத்தால் நேற்று முன்தினம் முறைப்படி சென்னை மாநகராட்சிக்கு ஒப்ப டைக்கப் பட்டது.
அதன்படி, சென்னை மாநகராட்சி இந்த இடத் தினை கையகப்படுத்தி, மாநகராட்சிக்கு சொந்த மான நிலம் என்று பெயர்ப்பலகை வைக்கப் பட்டுள்ளது. வடசென் னையில் பெரம்பூரில் சென்னை மாநகராட்சி மூலம் கட்டப்பட்டு வரும் முரசொலி மாறன் பூங் காவைப் போன்று இந்த இடத்திலும் அழகிய பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சி மூலம் கடந்த 4 வருடங் களில் மாடம்பாக்கத்தில் சுமார் ரூபாய் 600 கோடி மதிப்பிலான 30 ஏக்கர் நிலமும், கோயம்பேடு பேருந்து நிலையம் எதி ரில் மாநகராட்சிக்கு சொந் தமான ரூபாய் 200 கோடி மதிப்பிலான நிலமும், அண்ணாநகர், செனாய் நகரில் ரூபாய் 200 கோடி மதிப்பிலான நிலமும், வி.பி. ஹால் அருகில் 44 கிரவுண்டு சுமார் ரூபாய் 200 கோடி மதிப்பிலும் என பல் வேறு இடங்களில் ரூபாய் 3000 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு, சென்னை மாநகராட் சியால் கையகப்படுத்தப் பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காக்கள் உருவாக் கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் கலைஞர் தான் குடியிருக் கும் வீட்டையே ஏழை, எளிய மக்கள் பயன் பெறுவதற்காக மருத் துவ சேவைக்காக நாட் டுக்கே ஒப்படைத்து உள்ளார்கள். அந்த வீட்டை ஒட்டி பின்பகுதியில் உள்ள ஒரு சிறிய சந்து ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதா கூறு வது கேலிக்குரியதாகும். அந்த இடம் எந்தவித ஆக்கிரமிப்பும் கிடை யாது.
முதல்வரின் பாது காப்பு அலுவலர்கள் பயன் படுத்தி வருகின்றனர். அதே போன்று, அண்ணா அறிவாலயம் எதிரிலும் எந்த வித ஆக்கிரமிப்பு கிடையாது. அந்தப்பகுதி யில் பூங்கா அமைக்கப் பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு விஷயங்களுக்காக அ.தி.மு.க. ஆர்ப் பாட்டம் நடத்து வது வேடிக்கையானது. வீட்டையே நாட்டிற் காக முதல்வர் கொடை யாகக் கொடுத்த பிறகு, எதற் காக ஆக்கிரமிப்பு செய் யப் போகிறார்கள்.
போராட்டம் நடத் துபவர்கள் அந்த இரண்டு இடங்களுக்கும் சென்று பார்த்து விட்டு போராட் டம் நடத்தட்டும். கண் இருந்தும் குருடர்கள் என்பதை விட கருத்துக் குருடர்கள் என்று இவர் களை கூறலாம் என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment