சென்னை கோட்டை யில் 2 நாள்கள் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நேற்று மாலை முடிந்தது. மாநாட்டு முடி வில் முதலமைச்சர் கலை ஞர் ஆற்றிய உரை வரு மாறு: இந்த 2 நாள்களில், தமிழ கத்தை மேலும் முன் னேற்றக் கூடிய, வலுப்படுத் தக்கூடிய பல்வேறு பிரச் சினைகளைப் பற்றியெல் லாம் விவாதித்து, ஒவ்வொரு விவாதத்தினுடைய முடிவி லும் சில தீர்க்கமான தீர்மா னங்களை வடித் தெடுத்து அவற்றை நிறை வேற்று கின்ற நிலையில் சங்கல்பம் செய்திருக் கிறோம். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, இந்த ஒரு ஆண்டுக் காலத்தில் இன்னும் ஆட்சி யர்கள் அல்லது காவல் துறை கண்காணிப்பாளர் கள் கூட்டம் ஒன்றோ, இரண்டோ நடைபெறக் கூடும். அதற்குப் பிறகு, பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். ஜன நாயக நாட்டில் அது தவிர்க்க முடியாத ஒன்று. அந்தத் தேர்தலிலே வெற்றி பெற்றாலும், வெற்றி பெறாவிட்டாலும், வெற்றி பெறுபவர்களும், வெற்றி பெறாதவர்களும் இணைந்து நின்று மக்கள் பணியாற்ற தங்களை ஒப் படைத்துக்கொள்வதுதான் ஜனநாயக நெறியாகும். அந்த நெறியைக் காப்பாற்றுகின்ற இயக்கம் என்னைத் தலை வராகக் கொண்டிருக்கிற இந்த இயக்கம். இந்தியா முழுவதும் பாராட்டு! எந்த ஆட்சியாக இருந் தாலும், அது மக்களுக்காக நடைபெறுகின்ற ஆட்சி யாக இருக்க வேண்டும். இந்த ஆட்சியில் மறக்க முடியாத திட்டங்களாக, மறுக்க முடியாத திட்டங் களாக இருக்கின்ற திட்டங் களை இந்த மாநிலத்திலே மாத்திரமல்ல, இந்தியா முழுதும் பாராட்டுகிறார் கள். அது வெற்றி மேல் வெற்றியைத் தந்து கொண் டிருக்கின்ற திட்டங்களாக இன்றைக்கு அமைந் திருக்கிறது. அது தனிப்பட்ட என் ஒருவனால் அல்ல. இந்த அமைச்சரவையில் இருக் கின்ற அமைச்சர்களால் அல்ல. எதிரே அமர்ந்திருக் கின்ற மாவட்ட ஆட்சியர் கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஆங்காங்கு கிராமப் புறங்களிலே இருக்கின்ற ஒவ்வொரு வேர் போன்ற, விழுது போன்ற அத்தனை வட்டாரங்களும் துணை யாக இருக்கின்ற காரணத் தால் தான் இந்த வெற்றி களைப் பெற முடிகிறது. நாடு வாழும் நலிவு தீரும்! நான் வழங்கியிருக்கின்ற திட்டங்களை நானே நெறி முறையோடு நிறைவேற்ற வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டு கோளாகும். இது நான் தீட்டிய திட்டம், நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற எதேச்சாதிகார மனப் பான்மையிலே அல்ல. நா மெல்லாம் சேர்ந்து உருவாக் கிய திட்டம். இந்தத் திட்டத் தை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றினால்தான் நாடு வாழும், நலிவு தீரும் என்ற அந்த நிலைமையிலேதான் இந்தத் திட்டங்களையெல் லாம் நாம் தீட்டியிருக்கின் றோம். குறிப்பாக, இன்றைக்கு நாம் புதிதாக அறிமுகப் படுத்தி, நிறைவேற்றத் தொடங்கியிருக்கின்ற திட்டம் கலைஞர் வீடு வழங்கும் திட்டம். 3 லட்சம் வீடுகளை முதற்கட்டமாக நாம் காங் கிரீட் வீடுகளாக இந்த ஆண்டிற்குள் கட்டுவ தென்ற திட்டத்தைத் தொடங்கி, அடுத்த 6 ஆண்டு காலத்திற்குள் இந்த திட்டத்தைத் நாம் தொ டர்ந்து நிறைவேற்றவிருக் கிறோம். நாம் என்று சொல் வதால், நீயே இருந்து நிறை வேற்றப் போகிறாயா? என்று யாராவது கேட்பார் கள். யார் வந்து நிறைவேற்றி னாலும், ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை யாரும் நிறுத்தமுடியாது, நிறை வேற்றித்தான் ஆக வேண் டும் என்பதற்காக அப்படி சொல்கிறேன். இந்த திட்டம் தொ டர்ந்து நிறைவேறி 21 லட்சம் வீடுகள் ஏழையெளிய மக்களுக்குக் கிடைக்க நாம் பாடுபட வேண்டும். அந்த வகையிலே ஆட்சியர்களி டம் நான் பேசிய வகையில் அந்தத் திட்டத்திற்கான தொடக்கத்தை ஏற்கனவே நாம் ஆரம்பித்து விட் டோம். அதை இன்னும் விரைவுபடுத்த பாடுபட வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்டம் மற்றும் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலா ளர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டம் ஆகிய 2 திட்டங்கள் பற்றி இன்றைக்கு எதிர்க்கட்சி களுடைய பிரசாரம் மும் முரமாக நடைபெறுகிறது. பத்திரிகைகளிலே பார்த் தால் சில தலைவர்கள், பொறுப்பற்ற முறையிலே என்று சொல்ல மாட்டேன், பொறுப்போடுதான் சொல் கிறோம் என்று கருதிக் கொண்டு அறைகூவல் விடுக்கின்றார்கள். அதில், பட்டா கொடுத் தாலும், கொடுக்கா விட்டா லும் இருக்கின்ற இடத்தை எல்லாம் பட்டா போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று மக்களைத் தூண்டி விடுகின்ற மனோபாவம் இன்றைக்கு வளர்ந்திருக் கின்றது. நான் அவர்களுக் காக அல்ல, இந்த அரசு நிதானமாக அதே நேரத்தில் நேர்மையோடு இன்றைய திட்டங்களை நிறைவேற் றும் என்பதற்கு அடை யாளமாக இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 57 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு, விவசாயக் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 11 ஆயிரத்து 356 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியிருக்கிறோம் என்பதை பெருமையோடு, மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் என்று எடுத்துக் கொண்டால், 7 லட்சத்து 44 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் இந்த 4 ஆண்டு காலத்திலே வழங்கப்பட்டிருக்கின்றன. இப்படி வழங்கப்பட்டிருப் பதை உறுதிப்படுத்த அவர் கள் பயன்பெற என்னென்ன தேவையோ அவைகளை யெல்லாம் அந்தந்த வட் டாரத்திலே உள்ள அதிகாரி கள், மாவட்ட ஆட்சியர்கள் செய்து கொடுக்க வேண்டும். பல வாரியங்கள் இந்த அரசால் உருவாக்கப்பட்டி ருக்கின்றன. நேற்றைக்குக் கூட தென்னை விவசாயிகள் நல வாரியம் அறிவிக்கப் பட்டிருக்கின்றது. அந்த வாரியத்திற்கும் உறுப்பினர் கள், தலைவர் மற்றும் நடை முறைகள் பற்றி இரண் டொரு நாளில் இந்த அர சின் மூலமாக வெளியிட விருக்கிறோம். மக்களுக்கு பணம் கொடுத்தோம், இலவச உதவிகளைச் செய் தோம், வீடு கொடுத்தோம் என்பது மாத்திரம் அல்ல. இதை யெல்லாம் விட உயர்ந்தது, நம்முடைய மக்களுக்கு மரியாதை கொடுத்தோம் என்பதுதான் மிகவும் முக்கியம். மரியாதை அந்த மரியாதையைக் கொடுத்தோம் என்பதற்கு அடையாளமாக நான் நம் முடைய தலைமைச் செய லாளரிடம் கேட்டுக் கொண்டேன், அவரும் அது நடை பெற்று வருகிறது, இருந்தாலும் 100 விழுக்காடு அளவுக்கு நடைபெறுவ தற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கி றோம் என்று அவர் என் னிடத்திலே சொன்னார். அவர் சொன்னதை வைத்துக் கொண்டு நான் உங்களுக்குச் சொல்கிறேன். மாவட்ட ஆட்சியர்கள் அவர்களு டைய மாவட்டங்களில் அந்த மரியாதையை மக் களுக்குத் தருகின்ற அந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும். உங்க ளுக்குப் புரியாமல் இருக்க லாம், என்ன மரியாதை? என்று கூட நீங்கள் கேட்க லாம். வாரியங்களிலே பல பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த உறுப் பினர்கள் யாராவது விபத் தில் இறந்து விட்டால் அவர்களுடைய குடும்பத் திற்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம். அந்த ஒரு லட்சம் பெரிதல்ல. அதை விடப் பெரிது, அந்தக் குடும்பத்துக்கு நாம் தரு கின்ற மரியாதை. ஒரு லட்சம் ரூபாயை ஒரு குமாஸ்தா மூலம் அல்லது ஒரு அதி காரி, தபால்காரர் மூலம் அந்த வீட்டிற்கு அனுப்பப் படலாம். ஆனால் கலெக்டரோ அல்லது யாராவது ஒரு தாசில்தார் போன்ற அதி காரியோ அந்த வீட்டிற்குச் சென்று அந்த வாரிய உறுப்பினர் இறந்தவருக்கு மாலை மரியாதை செய்தால், அது நாம் நம்முடைய மக்களை எந்த அளவிற்கு மதிக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கும் என்பதையும், அதை நிறை வேற்ற வேண்டு மென்று நான் கேட்டுக் கொள்கிறேன். வாரிய உறுப்பினர்கள் விபத்திலே இறந்தால் ஒரு லட்சம் ரூபாயும், இயற்கை யாக இறந்தால் ரூ.15 ஆயிரமும் வழங்கிக் கொண் டிருக்கிறோம். இறந்தவர் களுக்கு பணம் மாத்திர மல்ல, அவர்களுக்கு மரியா தையும் நாம் செலுத்த வேண்டும். இப்போது விடுதலை வீரர்கள் இறந்து போனால் அவர்களுடைய வீடு களுக்கு சென்று மரியாதை செலுத்துவது போல, வாரிய உறுப்பினர் களாக இருப் போர் இறந்து போனாலும், அவர்களு டைய வீடு களுக்குச் சென்று மரியாதை செலுத் துவதை ஒரு பழக்க மாக அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். பல்வேறு திட்டங்கள், சாதாரண சாமான்ய மக் களை திருப்திப்படுத்தக் கூடிய வகையில் உங்களால் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அந்த வேண் டுகோளை நிறைவேற்றித் தர வேண்டுமென்று உங்களை யெல்லாம் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அவர் பேசினார். |
About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Sunday, August 29, 2010
இலவச உதவி கொடுத்தோம் என்பதை விட மக்களுக்கு மரியாதை கொடுத்தோம் என்பதே உயர்ந்தது - மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் நிறைவுரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment