மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரும், தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி இன்று மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி செல்லும் வழியில் மாவட்ட தி.மு.க. சார்பில் எட்டயபுரத்தில் காலை 9 30 மணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனும், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனும் இந்த பிரமாண்ட வரவேற்பை ஏற்பாடு செய்திருந்தனர். வரவேற்பில் பேசிய மு.க.அழகிரி, இந்த பிரமாண்ட வரவேற்பை பார்த்தால் திமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் கைப்பற்றும். இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் திமுகவின் கைவசம் வரும். தூத்துக்குடி திமுகவின் கோட்டை. இன்று இந்த வரவேற்பில் கலந்து கொண்ட திமுகவினர் அனைவரும், தேர்தல் வரை ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.
எம்.ஜி.ஆரும், கலைஞ ரும் 40 ஆண்டு கால நண்பர்கள். அவர் ஒரு முறையாவது முதல்அமைச்சரை பெயரைக் கூறி அழைத்து இருப் பாரா? ஆனால் இந்த ஜெயலலிதா எப்போதும் கலைஞரை பெயரைக் கூறி அழைக்கிறார். ஆண்டிப்பட்டியில் மருத்துவ முகாம் நடத்தினோம். அந்த மருத்துவ முகாமில் 200 கிராம் எடை கொண்ட ஹார்லிக்ஸ் டப்பா கொடுத்தோம். அதனை சோழவந்தான் அருகே லாரியை நிறுத்தி பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலை திருடி கொடுத்தோம் என்று ஜெயலலிதா கூறி உள்ளார். நாங்கள் தேனி யில் உள்ள பாலகிருஷ் ணன் என்பவருடைய கடையில் இருந்து 200 கிராம் டப்பா வாங்கித் தான் கொடுத்தோம். இதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. சொன்ன பொய்யை ஜெயலலிதா நிரூபிக்க முடியுமா? மேடையில் நேருக்கு நேர் சந்திக்க தயாரா? ஜெயலலிதாவை கட்சியினரே சந்திக்க முடியாது. ஆனால் முதல மைச்சர் கலைஞர் தின மும் அறிவாலயத்துக்கு செல்கிறார். கட்சி நிருவா கிகளை சந்திக்கிறார். ஜெயலலிதா ஒரு நாளா வது தலைமை கழகத் துக்கு சென்று இருப் பாரா? அப்படி சென் றால் அதனை விளம்பரப் படுத்துகிறார்கள். திருச்செந்தூர் சென்றுள்ள மத்திய அமைச்சர் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்பிக் உரத் தொழிற்சாலை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மீண்டும் செயல்பட துவங்கும் என்றும், இத்தகவலை ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா, தன்னை டெல்லியில் சந்தித்துக் கூறியதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே வருமா என்ற கேள்விக்கு, இதுகுறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்கும் என்றார்.
மாலை 5 மணிக்கு காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் உடன்குடி, திருச்செந்தூர் உள்பட 12 புதிய வழித்தடங்களில் பஸ்களை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொடங்கி வைத்தார் . 6 மணிக்கு திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் முதல் அமைச்சர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளையொட்டி நடைபெறும் கல்வி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார். மாநிலத்தில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாணவன் பாண்டியனுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 87 கிராம் தங்கசங்கிலி அணிவித்தார்
இந்நிகழ்ச்சிகளில் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், சமூகநலத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
தமிழகத்தில் முன் கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. மேலும் எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தி.மு.க., கூட்டணி தயாராக இருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment