

தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் மூன்று மாணவியர் கொல்லப்பட்ட வழக் கில், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி யது. வழக்கில் சம்பந்தப் பட்ட 3 முக்கிய குற்ற வாளிகளுக்கும் வழங் கப்பட்ட தூக்குத் தண் டனையை உச்சநீதிமன் றம் உறுதி செய்து இன்று (30.8.2010) தீர்ப்பு வழங்கியது. கொடைக்கானல், பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த வழக் கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீதி மன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, 2000 ஆம் ஆண்டு பிப்ர வரி 2 ஆம் தேதி தீர்ப்பு கூறியது. இதனால், அ.தி. மு.க., தொண்டர்கள் வன்முறையில் இறங்கி னர். கோவை வேளாண் பல்கலைக் கழக மாண வியர், தருமபுரி அருகே உள்ள இலக்கியம்பட் டியில் பேருந்தில் சென்ற போது, அ.தி.மு.க., தொண்டர்கள் பேருந்தை தீ வைத்துக் கொளுத்தினர். மேல்முறையீடு இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்ற மூன்று மாணவியர் தீயில் கருகி பலியாயினர். இந்த வழக்கில் சேலம் நீதி மன்றம், 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் முனியப்பன், நெடுஞ் செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு மரண தண்டனையும், 25 பேருக்கு தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்ட னையும் அளித்து தீர்ப்பு கூறியது. இதே ஆண்டு டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றமும் இந்த தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட் டது. சாட்சியங்களை மொழி மாற்றம் செய் வதில் காலதாமதமானது. இதற்கிடையே இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகி யோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அரசு தரப் பில் அல்டாப் அகமது ஆஜரானார். குற்றவாளி களுக்கு விதிக்கப்பட் டுள்ள தூக்குத் தண்டனையை ஆதரித்து அல்டாப் அகமது வாதாடினார். அரசியல் தலைவ ருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தொண்டர்கள் உணர்ச்சி வயப்படுவது இயல்பு தான். ஆனால், பேருந்தை எரித் ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. பிறர் சொல்லக்கேட்டு இவர் கள் மீது குற்றச்சாற்று பதிவு செய்யப்பட்டுள் ளது. எனவே, இவர்கள் மீதான தண்டனை ரத்து செய்ய வேண்டும்' என, குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தூக்குத் தண்ட னையை உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி யுள்ளது. நீதிபதிகள் தீர்ப்பு அரசியல் காரணங்களுக்காக 3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்டு உள்ளனர். நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் இந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை சமூகத்துக்கு எதிரானது. காட்டுமிராண்டித்தனமானது. மிகவும் கொடுமையான செயல். உச்சநீதிமன்றம் மிகவும் அரிதான வழக்கில்தான் தூக்குத் தண்டனை வழங்கி வருகிறது. இதுவும் ஓர் அரிதான வழக்கு. எனவே 3 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மாணவிகள் வந்த சுற்றுலா பேருந்துக்கு தீ வைக்கப்பட்டபோது காவல்துறையினர் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் மேலும் தண்டனை பெற்ற 25 பேரும் உயர்நீதிமன்றம் அறிவித்தபடி தண்டனையை அனுபவித்து இருந்தால் அவர்களை விடுதலை செய்யலாம். இவ்வாறு கூறியுள்ளனர். பலியான மாணவிகளின் பெற்றோர் கருத்து பேருந்து எரிப்பு சம்பவத்தில் பலியான கோகிலவாணியின் தந்தை தற்போது, நாமக்கல்லில் கோழிப் பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து வீராச்சாமி கூறியதாவது, தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் சம்பவம் நடந்தது கடந்த 2000ம் ஆண்டு. தீர்ப்பு 2010ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. காலம் தாழ்த்தப்பட்ட தீர்ப்பாக இருக்கிறது. பட்டப்பகலில் பலர் முன்னிலையில் கண்கூடாக நடந்த சம்பவத்துக்கு இவ்வளவு காலம் கழித்து தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர் என்றார்.
தீர்ப்பு குறித்து ஹேமலதாவின் தாயார் காசியம்மாள் கூறுகையில், வழக்கின் தீர்ப்பு தாமதமாக வந்தாலும் நான் சந்தோஷம் அடைகிறேன். என்னைப் போல பெற்றோர்கள் இனி இதுபோன்ற சம்பவங்களை சந்திக்க கூடாது. இந்த தண்டனையை நிறைவேற்றினால் ஓரளவாது இனி குற்றங்கள் குறையும்.
காயந்திரியின் தந்தை வெங்கடேஷ் கூறுகையில், இன்று காலையில் இருந்தே பதட்டத்துடனும், வேதனையுடனும் இருந்தோம். இந்த தீர்ப்பு மனநிறைவை அளிக்கிறது. இது சரியான தீர்ப்பு. சேலத்தில் கொடுத்த தீர்ப்பு நிலைநாட்டப்பட வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வழக்குக்காக உழைத்த வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். வீரமணி, இல.கணேசன் கருத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது, வளர வேண்டிய பிள்ளைகள் தீயில் கருகியதை நினைக்கும்போது, அவர்கள் பெற்றோர்கள், உடன் இருந்த மாணவிகளுன் மனநிலையை பார்க்கும்போது, நிச்சயமாக இந்த தண்டனை ஒரு சமூக விரோதத்துக்கு எதிரானக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கட்சிக் கண்ணோட்டமோ, ஜாதி மத கண்ணோட்டத்துக்கோ இடமே இல்லை. சட்டக் கண்ணோட்டம் மட்டும் அல்ல. இது நியாயக் கண்ணோட்டம் என்றார்.
|
No comments:
Post a Comment