தமி ழகத்தில் ரூ.13 ஆயிரம் கோடியில் 3 புதிய ஆலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தங் கள், கோட்டையில் முத லமைச்சர் கலைஞர், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகி யோர் முன்னிலையில் நேற்று 04.08.2010 கையொப்பமா கின. முதலமைச்சர் கலை ஞர், துணை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை யில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவ னம், வீடியோகான் நிறு வனம், ஜே.கே.டயர்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் அமைக் கப்படவுள்ள 3 புதிய தொழில் நிறுவனங் களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை யில் நேற்று கையொப் பமாயின. இது தொடர் பாக வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் அதி கரித்துவரும் எரிவாயுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக, தமிழ் நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து, எண்ணூர் துறைமுகத்துக்கு அருகி லுள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் கையாளும் திரவநிலை எரிவாயு முனையம் ஒன் றினை அமைத்து, அதிலி ருந்து ஏறத்தாழ 20 மில் லியன் கனமீட்டர் எரி வாயுவை குழாய் கட்ட மைப்புகள் மூலம் மின் உற்பத்தி நிறுவனங்களுக் கும், உரத்தொழிற்சாலை களுக்கும், பிற தொழிற் சாலைகளுக்கும், போக் குவரத்து மற்றும் நகர்ப் புற எரிவாயுத் தேவை களுக்கும் விநியோகிப்ப தற்காக புதிய தொழில் நிறுவனம் ஒன்றையும், அதன் ஒரு பகுதியாக மின்உற்பத்தி திட்டத் தையும், ஏறத்தாழ பத்தா யிரம் கோடி ரூபாய் முத லீட்டில் அமைத்திடத் திட்டமிட்டுள்ளன. ஏறத்தாழ ஏழாயிரம் பேருக்கு வேலை வாய்ப் புகளை வழங்கக்கூடிய, ரூ.10 ஆயிரம் கோடி முத லீட்டிலான இத்திட் டத்தை நிறுவுவதற்காக முதலமைச்சர் முன்னி லையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் சார் பில் அதன் தலைவரும், தொழில்துறை முதன் மைச் செயலாளருமாகிய ராஜீவ் ரஞ்சன், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் இயக்குநர் பி.எம். பன்சல் ஆகியோர் கையொப்பமிட்டனர். இந்தியன் ஆயில் நிறு வன செயல் இயக்குநர் கள் ஏ.கே.மர்சன்டா, டி.எஸ்.எல்.பிரசாத், பொது மேலாளர் வி. தாமோதரன் ஆகியோர் உடனிருந்தனர். இரண்டாவதாக, வீடியோகான் நிறுவனம் 5 ஆண்டு காலத்தில் 1500 கோடி ரூபாய் முதலீட் டில் 1000 பேருக்கு நேர டியாக வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் எல்.சி.டி., பிளாஸ்மா தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பல் வகையான மின்னணுப் பொருள்களையும், வீட்டு உபயோகப் பொருள் களையும், அவற்றுக்குரிய உதிரி பாகங்களையும் தயாரிக்கக்கூடிய னிட்டி அப்ளையன்சஸஸ் லிமிடெட் நிறுவனம் புதிய தொழிற்சாலை ஒன்றை மானாமதுரை சிப்காட் தொழிற்சாலைப் பூங்காவில் அமைக்க விருக்கிறது. முதலமைச்சர் கலை ஞரின் முன்னிலையில் நடைபெற்ற இத்தொழிற்சாலைக் கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில் துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், னிட்டி அப்ளை யன்சஸ் நிறுவனத்தின் சார்பாக அதன் இயக்குநர் பிரதீப்குமார் என்.தூத் ஆகியோர் கையொப்ப மிட்டனர். மூன்றாவதாக, டயர் உற்பத்தி யாளர்கள் தர வரிசையில் உலகில் 22வது இடத்தைப் பெற்றுள்ள ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் காஞ் சிபுரம் மாவட்டம் திருப்பெரும் புதூரில் ஜே.கே. டயர்ஸ் அன்ட் இன்டஸ்ட்டிரீஸ் நிறுவனம் என் னும் புதிய டயர் தொழிற்சாலையை அமைத்திட முடிவு செய்துள்ளது. 5 ஆண்டுகால அளவில் 1500 கோடி ரூபாய் முதலீட்டில் ஏறத் தாழ 600 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்புகளை வழங்கவிருக் கும் இந்த புதிய டயர் தொழிற் சாலையை நிறுவுவதற்காக முதல மைச்சர் கலைஞர் முன்னிலையில் நேற்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பாக தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன், ஜே.கே. டயர்ஸ் இன்டஸ்ட்டிரீஸ் நிறு வனத்தின் சார்பாக அதன் நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநர் அருண் கே.பஜோரியா ஆகியோர் கையொப்பமிட்டனர். இந்த மூன்று புரிந்துணர்வு ஒப் பந்தங்களும் நடைபெற்றபொழுது தமிழக அரசின் தலைமைச் செய லாளர் கே.எஸ்.சிறீபதி, சிப்காட் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி அமைப்பின் செயல் துணைத் தலைவர் எம்.வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. |
About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Thursday, August 5, 2010
தமிழகத்தில் ரூ.13 ஆயிரம் கோடியில் புதிய ஆலைகள் கலைஞர், ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment