இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட தொகுப்பு வீடுகளுக்கு மாநில அரசின் பங்குத் தொகையை உயர்த்தியதற்காக முதலமைச்சர் கலைஞருக்கு பாராட்டுத் தெரிவித்து மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் தொகுப்பு வீடுகளுக்கு மாநில அரசின் பங்குத் தொகையான 11 ஆயிரத்து 250 உடன் 15 ஆயிரம் உயர்த்தி, 26 ஆயிரத்து 250 ஆக நிர்ணயம் செய்து இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசின் பங்குத்தொகையுடன் ரூபாய் 60 ஆயிரமாக கடந்த 1.4.2010 முதல் தமிழக முதலமைச்சர் கலைஞர் உயர்த்தி வழங்கினார். தற்போது மேலும், 15 ஆயிரம் உயர்த்தி மாநில அரசின் பங்குத்தொகையாக 41 ஆயிரத்து 250 வழங்கப்படும் என்று அறிவித்து, ஒரு குடியிருப்பு கட்டுவதற்கு மொத்தம் ரூபாய் 75 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக முதலமைச்சர் கலைஞருக்கும், மாநில அரசின் பங்குத் தொகையினை உயர்த்தியதற்கு உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் முன்மொழிந்தார். மேலும் இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களான மகாத்மா காந்தி தேசி ஊரக வேலை உறுதி திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், பொன்விழா சுய வேலை வாய்ப்புத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம்,
இத்தீர்மானம் மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
முழு சுகாதார இயக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை தமிழகத்தில் திறம்பட செயல்படுத்தியமைக்காக உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்ததற்காகவும், அகில இந்திய அளவில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதற்காகவும் இக்கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment