மதுரை விமான நிலை யத்தின் ஓடுதளம் 6 ஆயி ரம் அடி நீளமும், 45 மீட் டர் அகலமும் கொண்டு அமைந்திருந்தது. விமா னம் நிறுத்தும் இடம் 145 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ்320 விமானம் நிறுத்தி வைக்கும் வகை யில் அமைந்திருந்தது. தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, மக் கள் தொகை பெருக்கம், பொருளாதார வளர்ச்சி இவற்றை கணக்கில் கொண்டு விமான நிலையத்தை விரிவுபடுத்தி பன்னாட் டுத் தரத்திற்கு உயர்த்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஓடுதளம் 7 ஆயிரத்து 500 அடி நீள மாக நீட்டிக்கப்பட்டது. அகலம் 45 மீட்டர் இருந் தது 60 மீட்டராக மாற்றி அமைக்கப்பட்டது. விமானம் நிறுத்தும் இட மும் 261 மீட்டர் நீளமும், 115 மீட்டர் அகலமும் கொண்டதாக விரிவாக் கம் அடைந்துள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 145 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ்320 விமானங்கள் 2ம், 180 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ்300 விமானம் ஒன்றும் நிறுத் தலாம். சிறிய விமானங் கள் என்றால் 5 விமா னங்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். இது தவிர விமானங் களை நிரந்தரமாக நிறுத்தி வைக்க தனியாக தளம் அமைந்துள்ளது. தற்போது சென்னை மதுரை இடையே இந் தியன் விமானம் தவிர, காலை, மாலை, இரவு ஆகிய 3 நேரங்களில் ஜெட் ஏர்வேஸ் விமானமும், மாலையில் கிங்பிஷர் விமானமும் இயக்கப்படு கின்றன. மாலையில் மதுரைபெங்களூர் இடையே கிங்பிஷர் விமான போக்குவரத்தும் உள்ளது. இது தவிர மதுரைசென்னை இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் புதிதாக காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் இயக்கப் பட உள்ளது. விமானங் களின் எண் ணிக்கை அதிகரித்து வருவதால் மதுரை விமான நிலை யத்தில் அதிநவீன வசதிக ளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த டெர்மினல் கட்டடம் கட்டப்பட் டுள்ளது. 17 ஆயிரத்து 536 சதுர மீட்டர் பரப்பள வில் கட்டடம் கம்பீர மாக எழுப் பப்பட்டுள் ளது. ஒரு மாடியுடன் இந்த கட்டடம் உரு வாகிறது. கட்டடத்தின் கீழ்பகுதியில் 500 பயணி கள் ஒரே நேரத்தில் அம ரும் வகையில் இருக் கைகள் அமைக்கப்பட உள்ளன. கட்டடத்தின் உள்பகுதி முழுவதும் குளு, குளு வசதி (ஏர்கண்டிஷன்) செய்யப் பட்டிருக்கிறது. வெளிப் புறம் முழுவதும் கண் ணாடி பொருத்தப்பட் டுள்ளது. நவீன பரிசோ தனை கருவிகள், பயணி கள் கொண்டு செல் லும் பொருள்களை பரிசோ திக்கும் அதிநவீன ஸ்கே னர் கருவிகள் அமைக் கப்படுகின்றன. இந்த டெர்மினல் கட்டடத்தில் ஏரோ பிரிட்ஜ் எனப் படும் நகரும் படிக்கட் டுகளில் ஏறினால் நேராக தாங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானத்துக்கு செல்லவும், விமானத்தில் இருந்து இறங்கிட வகை செய்யப்பட்டுள்ளது. அதற்காக 3 ஏரோ பிரிட்ஜ்கள் பல கோடி ரூபாய் செலவில் அமைக் கப்பட உள்ளன. கட்ட டத்தின் பல்வேறு பகுதி களில் நவீன கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு டெலிவிஷன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. 7 இடங்களில் லிஃப்ட் வசதி செய்யப் பட்டுள்ளது. ஆனாலும் மதுரை விமான நிலை யம், பன்னாட்டு விமான நிலைய தகுதியைப்பெற, பன்னாட்டு விமானங்கள் இங்கு இறங்கிச் செல்ல வேண்டுமானால் விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் 9 ஆயிரம் அடியாக நீட்டிக்கப்பட வேண்டும். அதற்கான ஆயத்த பணி களும் தொடங்கி விட் டன. அதிகப்படியான இந்த விரி வாக்கப் பணிக்காக 150 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கான நில ஆர்ஜித பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விரி வாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய பணிகள் முழுமை அடைந்து திறப்பு விழா காண உள்ளது. இதுகுறித்து, மு.க. அழ கிரி கூறி இருப் பதாவது: மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய டெர்மினல் கட்டடம் ரூ.128 கோடிசெலவில் அமைக்கபட்டுள்ளது. 14 ஆயிரத்து 400 சதுர மீட்டர் பரப்பில் தளம் அமைக்கப்பட்டு இருக் கிறது. கட்டடம் முழு வதும் குளிரூட்டப்பட் டுள்ளது. பன்னாட்டு விமானங்கள் வந்து செல்ல வகை செய்யப் பட்டுள் ளது. அதிநவீன வடிவ மைப்புடன் கூடிய மதுரை விமானநிலைய திறப்பு விழா வருகிற 12 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடக்க உள்ளது.'' இவ்வாறு மு.க. அழகிரி கூறியுள்ளார். |
About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Sunday, August 29, 2010
மதுரை விமான நிலையம் 12ஆம் தேதி திறப்பு - மத்திய அமைச்சர் மு.க.அழகிரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment