தமிழ்நாடு முழு வதும் டாஸ்மாக் கடைகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவ்வூழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பல சலுகைகளை வழங்க முத லமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள் ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது: 2006ஆம் ஆண்டு இந்த அரசு பதவியேற்றபின் டாஸ்மாக் நிறுவனத் தின் சில்லரை விற்பனைப் பிரிவு பணியாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது.
இவர்களுக்கு 2007 ஜூலை மாதம் மற்றும் 2009 ஆகஸ்டு மாதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இவ்விரு ஊதிய உயர்வுகள் மூலம் மாதம் ஒன்றுக்கு ஏற்கெனவே பெற்று வந்ததை விட மேற்பார்வையாளர்கள் ரூபாய் 1,000, விற்பனையாளர்கள் ரூபாய் 800 மற்றும் மதுக்கூட உதவியாளர்கள் ரூபாய் 600 கூடுதலாகப் பெற்று வரு கிறார்கள்.
முந்தைய ஆட்சி காலத்தில் 10 சதவிகிதமாக வழங்கப்பட்ட போனஸ் மற்றும் கருணைத்தொகையை இந்த அரசு 20 சதவிகிதமாக உயர்த்தி கடந்த மூன்று வருடங்களாக வழங்கி வரு கிறது. பணியாளர்களிடமிருந்து பெறப் பட்ட காப்புத்தொகைக்கு முந்தைய ஆட்சியில் வட்டி ஏதும் வழங்கப்பட வில்லை. இந்த அரசால் 3.5 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
முந்தைய ஆட்சி காலத்தில் நடை முறையிலிருந்த ஊக்கத்தொகை திட் டம், இந்தஆட்சியில் அனைத்து பணி யாளர்களும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த ஆட்சியில்தான் முதல் முறையாக மேற்பார்வையாளர் களுக்கு மாதாந்திர பயணப்படி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு செயல்படுத்தப்பட்டு வரு கிறது.
மேலும், இந்த ஆட்சி காலத்தில் தான் பணியாளர் இறக்க நேரிட் டால் குடும்ப நல நிதியிலிருந்து வழங்கப்படும் தொகை ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. சம்பள உயர்வு தொழிலாளர் நலனில் என்றென்றும் அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் கலை ஞர், டாஸ்மாக் பணியாளர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக பல சலுகை களை தானாகவே முன்வந்து வழங் கியதைப்போல, பின்வரும் சலுகை களை தற்போது வழங்கி ஆணை யிட்டுள்ளார். அவை வருமாறு:
மேற்பார்வையாளர்களின் மாத தொகுப்பு ஊதியம் ரூ.4,000 லிருந்து, 4,500 ஆகவும், விற்பனையாளர் களின் தொகுப்பு ஊதியம் ரூபாய் 2,800 லிருந்து 3,200 ஆகவும், மதுக் கூட உதவியாளர்களின் தொகுப்பு ஊதியம் ரூபாய் 2,100 லிருந்து 2,400 ஆகவும் உயர்த்தப்படும். இதனால் 30 ஆயிரம் பணியாளர்கள் பயன் பெறுவர்.
டாஸ்மாக் பணியாளர்களின் காப்புத்தொகைக்கான வட்டி 3.5 சதவிகிதத்திலிருந்து6 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் வருடம் ஒன்றிற்கு மேற்பார்வை யாளர்கள் ரூபாய் 1,250, விற்பனை யாளர்கள் ரூபாய் 375, மதுக்கூட உதவியாளர்கள் ரூபாய் 250 கூடுதலாகப் பெற்று பயனடைவர்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை 1.5 சதவிகிதத்திலிருந்து 1.75 சத விகிதமாக உயர்த்தி வழங்கப்படும். காலி அட்டைப்பெட்டி சேதத்துக் கான இழப்பை பணியாளர்கள் மீது திணிப்பதற்கு பதிலாக நிருவாகமே ஏற்கும். காலி அட்டைப்பெட்டிகள் மதுபான விற்பனைக்குப்பின் கடை களில் தேங்கும் காலி அட்டைப் பெட்டிகள் பணியாளர்களால் ஒப் பந்ததாரர்களுக்கு விற்கப்படுகிறது. இந்த அட்டைப்பெட்டிகளில் ஏற்படும் சேதம் சுமார் 2.5 சதவிகிதம் என கணக்கிடப்பட்டுள்ளது.
அது தற்போது பணியாளர்களின் ஊதி யத்திலிருந்து பிடிக்கப்படுகிறது. இனி அட்டைப்பெட்டிகள் சேதத் தினால் ஏற்படும் இழப்பை நிரு வாகமே ஏற்றுக்கொள்ளும். இச் சலுகைகள் 1.9.2010 முதல் நடை முறைக்கு வரும். தூண்டுவோருக்கு துணையாக நிற்காமல், இந்த அரசின் தூய நோக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, தொடர்ந்து பணியாற்றிவரும் டாஸ்மாக் பணி யாளர்களுக்கு இந்த அரசு உரிய நேரத்தில் சலுகைகளையும், உரிமை களையும் அளிக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment