மத்திய அரசு நிறுவனத்தின் ஓராண்டு ஆதாய பங்கு தொகை
க்ஷீ56
கோடி 13 லட்சத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் அந்த நிறுவன தலைவர் வழங்கினார்.
உரம் மற்றும் ரசாயனம் தயாரிப்பு பொதுத்துறை நிறுவனம் “ஆர்.சி.எப்.“ இந்த நிறுவனம் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு ஓராண்டில் (2009&2010) அதிக பட்ச லாபமாக
க்ஷீ
234 கோடி 87 லட்சம் ஈட்டி உள்ளது. முந்திய நிதி ஆண்டில்
க்ஷீ
211 கோடி 58 லட்சம் லாபம் ஈட்டியது. ஓராண்டில் லாபம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
எனவே 2009& 2010&ம் ஆண்டுக்கான ஆதாய பங்கு தொகையாக
க்ஷீ
56 கோடி 13 லட்சத்திற்கான காசோலையை அந்த நிறுவனத்தின் தலைவர் கொகரேஸ்வரன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியிடம் வழங்கினார். துறையின் இணை அமைச்சர் ஸ்ரீகாந்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த நிறுவனத்திற்கு மராட்டியத்தில் 2 தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இதில் ஆர்.சி.எப். டிராம்பே சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.
ஆர்.சி.எப்.நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு ஆண்டுக்கு ஆண்டு அதிக லாபம் ஈட்டி வருவதற்கும், ஆதாய பங்கு தொகை
க்ஷீ
56 கோடி 13 லட்சம் அளித்ததற்கும் அந்த நிறுவன தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பாராட்டு தெரிவித்தார்.
அமைச்சர் மு.க.அழகிரியிடம்
நிறுவன தலைவர் வழங்கினார்
No comments:
Post a Comment