அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் வாய்தா வாங்கி தாமதப்படுத்தும் போக்கை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரையில் மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் தல்லாகுளம் நேரு சிலை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேன், ஆட்டோகளில் தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தி.மு.க. செயலா ளர் தளபதி, மேடையில் நின்றபடி ஒலிபெருக்கியில் எழுப்பிய கோஷத்தை, அனைவரும் முழங்கினர். ஜெயலலிதா, சசிகலா அதிக அளவு தங்க நகைகளுடன் கூடிய படங்கள், வாசகங்கள் அடங்கிய பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் காட்சி அளித்தன.
ஆர்ப்பாட்டத்தில் முன் னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மாவட்ட முன்னாள் செயலாளர் வேலுசாமி, மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன், கவுஸ்பாட்சா எம்.எல்.ஏ., முன்னாள் மேயர்கள் குழந்தைவேலு, பட்டுராஜன், மாவட்ட நிர்வாகிகள் இசக்கிமுத்து, உதயகுமார், மிசா.பாண்டி, சின்னம்மாள், சிவகுமார், வேளாண் வாரிய தலைவர் கணேசன், மண்டல தலைவர்கள் குருசாமி, நாகராஜன், தர்மலிங்கம், கவுன்சிலர்கள் நீலமேகம், பொன்.சேது, அருண்குமார், பகுதி செயலாளர்கள் கோபிநாதன், ரவீந்திரன் உள்பட பலர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வேன், கார், ஆட்டோக்களில் வந்தவர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை முதல் அழகர்கோயில் சாலையிலுள்ள அம்பேத்கர் சிலை வரையிலும் காந்திமியூசியம் பகுதி வரை நின்றதால், பஸ்போக்கு வரத்து மாற்றி விடப்பட்டது. நகர் முழுவதும் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
No comments:
Post a Comment