இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், நாளை முதல் இலங்கையில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
இதையடுத்து வவுனியா, யாழ்பாணம், திரிகோணமலையில் உள்ள நிவாரணப் முகாமிகளில் நிருபமா ராவ் ஆய்வு நடத்துகிறார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிவாரணப்பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.மேலும் அக்டோபரில் அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கொழும்பு செல்வதற்கான ஏற்பாடுகளையும் அவர் கவனிக்கிறார்.
இந்நிலையில் இன்று மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் திட்டத்துறை இணை அமைச்சர் நாராயணசாம் சென்னையில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ‘’இலங்கைத்தமிழர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைத்தமிழர்கள் வீடு கட்ட 1,500 கோடி வட்டியில்லா கடன் வழங்குகிறது மத்திய அரசு.
இலங்கை தமிழர் பகுதியில் மின்சார உற்பத்திக்காக 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment