கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 8, 2010

10 நாட்கள் பொதுக்கூட்டம்: கலைஞர் அறிவிப்பு
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி தலைமையில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளரும் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், கொள்கை பரப்புச் செயலாளர்கள் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி எம்பி, துணை பொதுச் செயலாளர்கள் பரிதி இளம்வழுதி, சற்குண பாண்டியன் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


நடிகை குஷ்பு, நடிகர் கே.பாக்யராஜ் உட்பட தமிழகம் முழுவதுமிருந்து திமுகவால் அங்கீகரிக்கப்பட்ட தலைமை கழக பேச்சாளர்கள் அனைவரும் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், விமர்சனங்கள் போன்றவற்றை எப்படி எதிர்கொள் வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஜெயலலிதா குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும்போது அரசியல் ரீதியான விமர்சனங்கள் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும், யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசக்கூடாது என்றும், காங்கிரஸ் கட்சி குறித்து யாரும் பேசக்கூடாது என இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் அதனை எதிர்கொள்ளும் வகையில் திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டு சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றும் பொதுக்கூட்டங்கள் மட்டுமின்றி தெரு முனை பிரச்சாரங்களையும், திமுக பேச்சாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டத்தில் அறிவுத்தப்பட்டதாக தெரிகிறது.

முதல்வர் கருணாநிதி, திமுக இளைஞர் அணி சார்பில் வருகிற 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 10 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment