கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 16, 2010

விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார் - சுதந்திர தின விழாவில் முதல்வர் கருணாநிதி அறிவிப்பு


சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் கருணாநிதி நேற்று தேசியக் கொடி ஏற்றி வைத்து சுதந்திரதின உரையாற்றினார்.
முதல்வர் கருணாநிதி உரை வருமாறு:

அருமைத் தாய்மார்களே!
அன்புப் பெரியோர்களே!
மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவர் அவர்களே!
உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களே!
நீதியரசர்களே!
அமைச்சர் பெருமக்களே!
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே!
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களே!
அரசின் உயர் அதிகாரிகளே!
வெளிநாட்டுத் தூதர்களே!
அலுவலர்களே!
என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே!


அனைவருக்கும் எனது இனிய வணக்கத்தையும், சுதந்திர தின வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்திய நாட்டுக்கானச் சுதந்திரப் போரில் - விடுதலை முழக்கமிட்ட நமது தியாகசீலர்கள் பலரை அன்னிய அரசு சித்திரவதை செய்து சீரழித்தது; அந்த ஆட்சியை, அண்ணல் காந்தியடிகளின் அறப் போராயுதமாகிய, “அகிம்சை” - “சத்தியாக்கிரகம்” எனும் பிறருக்குத் துன்பம் தராது, தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அகற்றி; நமது இந்தியத் திருநாடு 1947, ஆகஸ்டு 15இல் சுதந்திரத் திருநாடாக மலர்ந்தது.


இன்று நம் இந்திய திருநாட்டின் 64ம் சுதந்திர திருநாள். சுதந்திரத்தை நிலைநாட்ட இன்னுயிரை ஈந்த மாவீரர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றிப் பெருக்குடன் வீரவணக்கம் செலுத்துகிறேன். சுதந்திர திருநாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றி வைத்திடும் உரிமையை 1974ம் ஆண்டு தமிழகத்தின் சார்பில் நான் வலியுறுத்தியபோது, அதை வழங்கிய அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு இதய நன்றியை வழங்கி பெருமிதம் கொள்கிறேன். சுதந்திரம் என்பது தேசியக் கொடியை ஏற்றி வைப்பதற்கு மட்டும் பயன்படுவதல்ல!
நாட்டு மக்கள் நல்வாழ்வு நலவாழ்வு வள வாழ்வு பெறத்தக்க திட்டங்களை தீட்டி அவற்றை முறையாக செயல்படுத்தி அரசியல் கல்வி சமூக சமதர்ம பொருளாதார நிலைகளில் உயர்ந்து எல்லோருக்கும் எல்லாப் பயனும் கிடைக்கத்தக்க வகையில் செயல்பட வேண்டியது சுதந்திர நாட்டு அரசின் தலையாய கடமை.

2006 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் அய்ந் தாவது முறை, தமிழக முதலமைச்சராகப் பொறுப் பேற்ற நான், அந்த விழா மேடையிலேயே தேர்தல் அறிக்கையில் தந்த வாக் குறுதிகளை நிறைவேற் றத் தொடங்கினேன். நான்கு ஆண்டுகள் முடி வடைந்து, அய்ந்தாவது ஆண்டு ஆட்சி நடை பெறும் இந்த வேளை யில், இதுவரை ஆற்றிய பணிகள் அனைத்தையும் நினைவு கூர்வதற்கு காலம் இடம் தராது என்பதால்; ஒருசிலவற்றை மாத்திரம் சுட்டிக்காட்டிட விரும்பு கிறேன். ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம்;

*குறைந்த விலை யில் பாமாயில், துவரம் பருப்பு, முதலிய பொருள்கள்;

*மானிய விலை யில் 25 ரூபாய்க்கு 10 மளிகைச் சாமான்கள்;

என்ற இத்திட்டங் களின் மூலம் தமிழகத் தில் அனைத்துத் தரப்பி னருக்கும் உணவுப் பாது காப்பு உன்னதமான வகையில் உறுதி செய் யப்பட்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறியி ருப்பதைச் சுட்டிக் காட்டி ஏடுகள் பாராட்டியிருக் கின்றன!

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தி லேயும் இல்லாத வகை யில்; பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களி லிருந்து தொழிற்பட்டப் படிப்புகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ள முதல் தலைமுறையைச் சேர்ந்த ஏறத்தாழ 70 ஆயிரம் இளைஞர்க ளுக்கு முதல்முறையாகக் கல்விக் கட்டணம் ரத்து;

பள்ளிக் கல்வித் துறைக்கு தமிழக வரலாற் றிலேயே முதல்முறையாக இந்த ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

அரசின் சார்பில் புதிதாக 5 அண்ணா தொழில் நுட்பப் பல் கலைக் கழகங்கள்; 6 மருத்துவக் கல்லூரிகள், 11 பொறியியல் கல்லூரி கள், 14 கலை அறிவியல் கல்லூரிகள் என உயர் கல்விக்கான வாய்ப்புகள் பெருமளவுக்கு உருவாக் கப்பட்டுள்ளன.

கோவையில் 2010 ஜூன் திங்கள் 23 முதல் 27 வரை 5 நாட்களுக்கு தமிழக அரசின் சார்பில் மிகுந்த எழுச்சியோடும் ஏற்றத்தோடும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான ஆய்வறிஞர்களும், லட்சோப லட்சம் தமிழ் மக்களும் கலந்து கொண்டு, தமிழ் மொழியின் ஆக் கத்திற்கும் மேம்பாட் டிற்கும் தேவையான பல் வேறு முடிவுகள் எடுக் கப்பட்டன.

அதுபோலவே, உலகப் புகழ் குவித் துள்ள மாமன்னர் இராஜரா ஜனின் தஞ்சைப் பெரிய கோவில் கட்டி முடிக் கப்பட்ட ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை செப்டம்பர் 25, 26 தேதிகளில் மிகச் சிறப் புடன் கொண்டாட ஏற் பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இடஒதுக்கீடு

இஸ்லாமியர்க்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு; அருந்ததியர்க்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு, நலிந்த சமுதாயங்களைச் சேர்ந்த அவர்கள் உயர்கல்வியி லும், வேலை வாய்ப்பு களிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இதுவரை, அரசுத் துறை களில் 4 லட்சத்து 65 ஆயிரம் இளைஞர் கள் நிரந்தர வேலைவாய்ப்பு களைப் பெற்றுள்ளனர். *வருமுன் காப் போம் திட்டம்;

*இளம் சிறார் இரு தயப் பாதுகாப்புத் திட் டம்;

*பள்ளிச்சிறார் இருதயப் பாதுகாப்புத் திட்டம்;

*பள்ளிச்சிறார் கண் ணொளித் திட்டம்;

*அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் இயங் கும் திட்டம்;

*அவசரகால மருத் துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்;

*அரசு ஊழியர்க்கான புதிய காப்பீட்டு திட்டம்; *உயிர் காக்கும் உயர் சிகிச்சைக் கான கலைஞர் காப் பீட்டுத் திட்டம்;

போன்ற பல்வேறு மருத்துவ திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, லட்சக்கணக்கான ஏழை எளியோர் தரமான மருத்துவ வசதிகளை இலவசமாகப் பெற்று வருவதால், பொது சுகாதாரம் பேணுவதில் தமிழகம் முன்னணி மாநிலமென அனைவ ராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நோபல் பரிசு பெற்ற மறைந்த அன்னை தெரசா அவர்கள் பிறந்த நூற்றாண்டு 2010 ஆகஸ்ட் 26 அன்று தொடங்கு வதையொட்டி தமிழக அரசின் சார்பில் அவரது நினைவைப் போற்றும் வகையில் சிறப்பாக அத னைக் கொண்டாடுவ தென்று முடிவு செய்யப் பட்டுள் ளது.

குடிநீர்த் திட்டங்கள்

கழக அரசு பொறுப் பேற்ற பிறகு இராமநாத புரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை 630 கோடி ரூபாய் செலவில் நிறை வேற்றி முடித்தி ருக்கி றோம். தற்போது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 1,929 கோடி ரூபாய் செலவில் வேகமாகச் செயல்படுத் தப்பட்டு வருகிறது. மேலும் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் விரை வில் நிறைவேற்றப்பட வுள்ளது. இவைகளைத் தொடர்ந்து 1,712 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை, கோவை, நாகை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூர் ஆகிய மாவட் டங்களில் அய்ந்து கூட்டுக் குடிநீர் திட்டங்களையும், ஒரு குடிநீர் மேம் பாட்டுத் திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு நிரு வாக ஒப்புதலும் அளிக் கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் 14,600 கோடி ரூபாய்ச் செலவில் மெட்ரோ ரயில் திட்டம் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏழை எளியோர் பயன் பெறுகின்ற மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைத் தமிழக அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி, இந்தியா வின் முன்னோடி மாநில மாகத் திகழ்கிறது. அத னால், தமிழகம் உச்சநீதி மன்றத்தின் பாராட் டுகளைப் பெற்றுள்ளது.

இத்திட்டத்தில் பயனா ளிகளுக்கு வழங்கப்பட்ட 80 ரூபாய் தினக்கூலி, இந்த அரசு மேற் கொண்ட சீரிய முயற்சி களின் பயனாக, 1.1.2010 முதல் 100 ரூபாயாக உயர்த்தி வழங்கிட, மத்திய அரசு முன்வந் துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுவதோடு அதற்காக மத்திய அர சுக்கு நன்றியும் தெரி வித்துக் கொள்கிறேன். இவைபோன்ற பல்வேறு திட்டங்களின் வரிசை யில் மேலும் ஒருசில புதிய திட்டங்களைத் தொடங்குவது குறித்து, இந்தச் சுதந்திர தின விழாவில் குறிப்பிட விரும்புகிறேன்.

குடிசை வீடுகளே தமிழகத்தில் இல்லை எனும் புதிய வரலாற்றைப் படைப்ப தற்காகத் தமிழகத்தின் ஊராட்சிப் பகுதிகளி லுள்ள 21 லட்சம் குடிசை வீடுகளையும், தமிழ்நாடு அரசின் முழு நிதியுதவி யுடன், 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் எனும் புதிய புரட்சிகரமான திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், முதல்கட்டமாக நடப் பாண்டில் 3 இலட்சம் குடிசைகளுக்குப் பதில், புதிய கான்கிரீட் வீடு களைக் கட்டுவதற்காக, வீடு ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வீதம், 1800 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி தெரிவு செய்யப் பட்டுள்ள 3 லட்சம் பயனாளிக ளுக்கும் இன்று முதல் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்படு கின்றன. இந்தத் திட்டத் தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு கான்கிரீட் வீட்டிற்காகவும் அரசின் சார்பில் 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படு மென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்; திருச்சி மாநகரில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவின்போது என் னிடம் தெரிவிக்கப்பட்ட கோரிக்கையினையேற்று, மேலும் 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக்கி, ஒவ்வொரு வீட்டிற்கும் 75 ஆயிரம் ரூபாய் வீதம் மானியமாக வழங்கிட இந்த அரசு முடிவு செய் துள்ளது என்ற மகிழ்ச்சி கரமான அறிவிப்பையும் இந்த நேரத்தில் தெரி வித்துக் கொள்கிறேன்.

ஓட்டைக்குடிசை

ஓட்டைக் குடிசை யிலே ஒன்றரைச் சாண் பாயிலே கொட்டும் மழையிலும், கொளுத் தும் வெயிலிலும் வாடிக்கிடந்த மக்க ளுக்கு வாழ்வில் விடி வளிக்கும் இத்திட் டத்தை இன்று தொடங்கி வைப்பதில் உள்ளம் எல்லாம் இன்ப வெள் ளம் நிறைந்தது போன்ற உணர்வைப் பெறுகி றேன்.

ஒவ்வொரு மாவட் டத்திலிருந்தும் ஒருவர் வீதம், இங்கு வந்துள்ள 31 பேருக்கு, இன்று பணி ஆணைகள் வழங்கப் பட்டு; இந்த மகத்தான வீடு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படு கிறது என்ற செய்தியை தெரிவிப்பதில் நான் மெத்த மகிழ்ச்சியடை கிறேன். எந்த மாநில அர சும் இதுவரை மேற் கொள்ளாத மிகப்பெரிய திட்டமாக அனைத்துக் கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டம் தமி ழகத்தில் செயல்படுத் தப்படுகிறது. இத்திட் டத்தின்கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 10 ஆயி ரத்து 104 கிராம ஊராட் சிகளில், 2 ஆயிரத்து 41 கோடி ரூபாய் செலவில், அனைத்து அடிப்படை வசதிகளும் உருவாக்கப் பட்டுள்ளன.

உலக இளைஞர்கள் ஆண்டு

அய்க்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண் டினை உலக இளை ஞர்கள் ஆண்டு என அறிவித்திருப்பதை யொட்டி; வேலை வாய்ப் பில்லாத இளைஞர் களுக்கு புதிய திட்டம் ஒன்றும் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப் பட உள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த இளைஞர் கள் பொறி யியல், இளங்கலை முது கலைப் பட்டம் பெற் றுள்ள இளைஞர்கள் ஆகியோ ருக்கு வேலை வாய்ப்புக் கான திறன் வளர்ப்புப் பயிற்சி இத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

பயிற்சி பெற்ற இளைஞர் கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் உரிய வேலை வாய்ப்பு களைப் பெற இத்திட்டம் வழி வகுக்கும். நடப்பு ஆண் டில் ஒரு இலட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவிருக்கும் இத்திட் டத்தைச் செயல் படுத்த முதற் கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான அரசு ஆணை இந் நன்னாளில் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் மாநகராட் சிகள், நகராட்சிகள் மற் றும் பேரூராட்சி களில், கடந்த நான்காண்டு களில் மட்டும் 3 ஆயி ரத்து 465 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. மேலும் சாலைகளை நேர்த்தி யான முறையில் சீரமைத் திட, இந்த ஆண்டில் சிறப்பு நிதியாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித் துக் கொள்கிறேன்.

தமிழகம் முழு வதிலும் பயன்படுத்தப் பட்டுவரும் பல விவசாய பம்பு செட்டுகள், திறன் குறைந்தவையாக இருப் பதால், மின்சாரம் அதி கம் செலவாகிறது. இது வும் மின் பற்றாக் குறைக்கு ஓரளவு கார ணமாகும். இத்தகைய பம்பு செட்டுகளுக்கு பதில், திறன்மிக்க புதிய பம்பு செட்டுகளைப் பொருத்துவதன்மூலம், 20 சதவிகித அளவுக்கு மின் சாரத்தைச் சேமித்திட முடியும். சிறு, குறு விவ சாயிகளின் பம்பு செட் டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கிவிட்டு, அவற்றிற்குப் பதிலாக, புதிய மின் மோட்டார்கள் அரசின் சார்பாக இலவசமாகப் பொருத்தித் தரப்படும். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்துடன், புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும். இப்படி

தமிழகம் வளம் பெற்று மக்களின் வாழ்க்கைத் தரம் உயர ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மெய் வருத்தம் பாராமல் கண் துஞ்சாமல் பசிநோக் காமல் சிலரால் அள்ளி வீசப்படும் அவதூறுக் கணைகளை அலட்சி யப்படுத்தி;

ஆக்க பூர்வமான பணிகளால், நமது தாய்த் தமிழகத்தின் புகழ் தரணியெங்கும் பரவி நிலைபெற வேண்டும் எனும் ஒரே நோக் கத்துடன்; காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது எனும் முது மொழிக்கொப்ப, ஒவ் வொரு நொடியும் தமிழக மக்களுக்குப் பயன் தரவேண்டும் எனும் எண்ணத்தோடு உழைத் துவரும் நிலையில்; உங் கள் அனைவருக்கும் மீண் டும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறு கிறேன்! நன்றி; வணக் கம்! இவ்வாறு முதல மைச்சர் கலைஞர் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment