கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 31, 2010

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குபவர் முதல்வர் கலைஞர் - துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


துணை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர் கள் நேற்று (30.8.2010) தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக் கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது :

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு உரையாற்றிய திருப்பூர் அல்தாப் அவர் கள் ஒன்றை நினைவுக் கூறினார். தலைவர் கலை ஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும், இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தவறு வதில்லை என்று கூறி னார்.

எப்போதும், சிறு பான்மை மக்களின் பாது காப்பு அரணாக விளங்கு பவர் தலைவர் கலைஞர். நானும் 31 ஆண்டுகளாக தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன். என்னுடைய கனிவான கோரிக்கை என்ன வென்றால், ஒவ்வொரு முறையும் அழைப்பி தழில் என்னுடைய பெயரை சிறப்பு விருந்தி னர் என்று குறிப்பிடுகின் றீர்கள். நான் சிறப்பு விருந்தினர் அல்ல.

நான் உங்களில் ஒருவன் நான் உங்களின் ஒரு வனாக இருந்து இந்த வாய்ப்பை பெற்று வருகி றேன். எனவே, அடுத்த ஆண்டாவது உங்களில் ஒருவனாக என்னை கருதி பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண் டும்.இங்கு பேசிய பேராசி ரியர் காதர் மொய்தீன் அவர்களும், தம்பி தயாநிதி மாறன் அவர் களும் ஒன்றை குறிப்பிட் டனர்.

தலைவர் கலைஞர் ஆட்சி உங்களால் உரு வாக்கப்பட்ட ஆட்சி என்றும், உங்களுக்காக நடக்கும் ஆட்சி என்றும் குறிப்பிட்டார்கள். எதிர் கட்சித் தலைவர் நம் முடைய ஆட்சியைப் பற்றி கூறும் போது மைனாரிட்டி ஆட்சி என்று கூறுவார்கள். அதற்கு தலைவர் கலை ஞர் அவர்கள் இது மைனாரிட்டி ஆட்சி தான். இஸ்லாமிய பெரு மக்கள் போன்ற மைனா ரிட்டி மக்களுக்கான ஆட்சி என்று தொடர்ந்து பதில் கூறுவார்.

சாதனைப்பட்டியல்

கலைஞர் அவர்கள் எத்தனையோ சிறப்பான திட்டங்களை சிறு பான்மை மக்களுக்காக வகுத்து நிறைவேற்றி வருகிறார். தலைவர் கலை ஞர் அவர்கள் எப்போ தெல்லாம் ஆட்சிக்கு வரு கிறாரோ, அப்போதெல் லாம் பல சாதனைகளை செய்து வருகிறார். அந்த சாதனை குறிப்புகளை பார்க்கும் போது, அது ஒரு பெரும் பட்டியலாக உள்ளது.

1969ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான், மீலாது நபிக்கு முதன் முதலாக அரசு விடுமுறை அளிக் கப்பட்டது. அதனை கடந்த அ.தி.மு.க. அரசு 2001 இல் ரத்து செய்தது. 15.11.2006 முதல் மீலாது நபி நாளை அரசு விடு முறை நாளாக மீண்டும் அறிவித்தது தலைவர் கலைஞர் அவர்களின் கழக ஆட்சியில் தான். 1973 ஆம் ஆண்டு உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் கலைஞர் தான்.

1974ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசி னர் மகளிர் கல்லுரிக்கு கண்ணியம் மிக்க காயிதே மில்லத் அவர்களின் பெயரை சூட்டியதும் தலைவர் கலைஞர்தான்.

1989ஆம் ஆண்டு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை சமுதாய மக்கள் பெரும்பயன் எய் தும் வகையில் சிறுபான் மையினர் நல ஆணையம் உருவாக்கப்பட்டது.

1998 இல் ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என் பது 2200 ஆக உயர்த்தப் பட்டு, 2008 இல் 2400 ஆகவும் உயர்த்தப்பட் டது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். 1999ஆம் ஆண்டு வரை ஹஜ் புனிதப் பயணத்திற்கு குலுக்கல் முறையில் ஆண்டிற்கு 1800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப் பப்பட்ட முறையை கை விட்டு, 1999 முதல் விண் ணப்பிக்கும் அனைவ ருக்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கியதும் தலைவர் கலைஞர்தான்.

1999ஆம் ஆண்டு பிற் படுத்தப்பட்டோர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தை, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் தனியே பிரித்து தமிழ் நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தை 1.7.1999 அன்று உருவாக் கியவர் கலைஞர். ஆனால், செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு 2003இல் சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தை பிற் படுத்தப்பட்டோர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்துடன் இணைத்துவிட்டது. 2006இல் ஆட்சிப் பொறுப் பிற்கு வந்த கலை ஞர் மீண்டும் சிறுபான் மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை தனியே செயல்படச் செய்து, அதன் மூலம், சிறுபான்மைச் சமுதாய மக்களுக்குத் தி.மு.க. அரசு தொடர்ந்து உதவி வருகின்றது.

2000 ஆம் ஆண்டு இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப் பட்டு 21.7.2000 அன்று உருது அகாடமி தொடங் கப்பட்டது. பிற்படுத்தப் பட்டோருக்கான 30 விழுக்காடு இடஒதுக் கீட்டில் இஸ்லாமியர்க ளுக்கு, 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டினை 15.9.2007இல் அண்ணா அவர்க ளின் 99ஆவது ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கியதும் தலைவர் கலைஞர் அவர்களே.

2008 இல் சீறாப் புராணம் பாடிய உமறுப் புலவருக்கு எட்டய புரத் தில் அமுதகவி உமறுப் புலவர் மணிமண்டபம் ஏற்படுத்தியதும் தலைவர் கலைஞர்தான். உலமாக் கள் நல வாரியம் 24.8.2009 அன்று ஏற்படுத் தப்பட்டது. தமிழக மேலவையிலும், டில்லி மேலவையிலும் முஸ்லிம் பிரதிநிதிகளை இடம் பெறச் செய்ததும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

2006 ஆம் ஆண்டு 5 ஆம் முறையாக முதல் வராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர் கள் எப்போதும் இல் லாத அளவிற்கு இரண்டு இஸ்லாமியர்களை தமிழக அமைச்சர்களாக அமர்த்தி அழகு பார்த் தவரும் கலைஞர் தான். தொடர்ந்து முஸ்லிம் பெருமக்களுக்கு பாடு பட்டு, சிறுபான்மை மக் களின் பாதுகாப்பு அர ணாக விளங்கும் தலைவர் கலைஞருக்கும், கழக ஆட்சிக்கும் பக்க பல மாக இருந்து துணை புரிய நீங்கள் எல்லாம் உறுதி ஏற்க வேண்டும் என்று உங்களை எல் லாம் நான் அன்போடு கேட்டு கொள்கிறேன்.

சிறப்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த திருப்பூர் அல்தாப் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம். இவ் வாறு துணை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment