கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 23, 2010

சமூகநீதியைப்பற்றி நான் பேசக் கூடாதென்றால் வேறு யார்தான் பேசத் தகுதி படைத்தவர்கள்? - முதலமைச்சர் கலைஞர் கேள்வி


உடன் பிறப்புகளுக்கு கலைஞர் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக் கீட்டுக்கென நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றத் திலே 1994ஆம் ஆண்டு தனியார் ஒருவரால் வழக்கு தொடுக்கப்பட்டு ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1372010 அன்றுதான் உச்சநீதிமன்றம் ஒரு இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அந்த இடைக்காலத் தீர்ப்பில், “It has been laid down that if a State wants to exceed 50 percent reservation, then it is required to base its decision on the quantifiable data. In the present case, this exercise has not been done. Therefore, keeping in mind the said parameter, we direct the State to place the quantifiable data before the Tamil Nadu State Backward Classes Commission and, on the basis of such quantifiable data amongst other things, the Commission will decide the quantum of Reservation” என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாநிலம் 50 சதவிகித இட ஒதுக்கீட்டு அளவை விஞ்ச வேண்டுமானால், அதனை நியாயப்படுத்துவதற்குத் தேவையான புள்ளி விவரங்களின் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்படவேண்டும். இந்த நிகழ் வில் புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை. எனவே, ஏற்கெ னவே சொல்லப் பட்டுள்ள அளவுகோலை மனதிலே கொண்டு, மாநில அரசு தேவை யான புள்ளி விவரங்களைச் சேகரித்து, தமிழ் நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் ஒப்படைக்கவேண்டு மென்றும், சாதிவாரியான புள்ளி விவரங் களின் அடிப்படையில் அந்த ஆணையம் இட ஒதுக்கீடு எவ்வளவு என்ற அளவை நிர் ணயம் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிடு கிறோம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புள்ளி விவரங்களை தமிழக அரசின் சார்பில் தனியாக சேகரிக்க வேண்டு மென்றால், அதற்கு நமக்கு சாதிவாரியான மக்கள் தொகை விவரங்கள் வேண்டும். அதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு (CasteBased Census) மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் இந்தச் சாதிவாரிக் கணக் கெடுப்பை நடத்த வேண்டு மென்றால் அதற்கு சுமார் 400 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறலாம் என்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணை யம் கருத்து தெரிவித்திருக்கிறது. இது பற்றி தமிழக அரசு ஆலோசித்துக் கொண்டிருக் கும் நிலையில்தான் அகில இந்திய அளவி லேயே சாதிவாரி கணக் கெடுப்பு நடத்துவது பற்றி மத்திய அரசில் பரிசீலிக்கப்பட்டு, அதை ஏற்கலாம் என்ற அளவிற்கு முடிவுகள் வந் துள்ளன. அவ்வாறு மத்திய அரசின் சார்பி லேயே ஒரு கணக்கெடுப்பு சாதிவாரியாக எடுக்கும்போது, தமிழ்நாடு அளவில் தானாக ஒரு கணக் கெடுப்பை நடத்த வேண்டுமா, அல்லது மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப் பில் தமிழகத்தின் கணக்கெடுப்பும் எடுக்கப்பட்டு விடாதா என்றும் யோசிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பை பயோமெட்ரிக் சென்சஸ் அடிப்படையிலே எடுப்பதா அல்லது சாதி வாரியாக கணக்கெடுப்பு நடப்பதா என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

இதிலே கூட பயோமெட்ரிக் சென்சஸ் முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கலாம் என்று முதல் அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார் என்று பா.ம.க. நிறுவனர் ஒரு விழாவில் பேசி இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ளது. எந்த அடிப்படையில் அவர் அந்தக் கருத் தைத் தெரிவித்திருக்கிறார் என்று தெரிய வில்லை. ஆனால் நம்மைப் பொறுத்தவரை யில், இந்தப் பிரச்சினை எழுந்ததும் 1482010 அன்றே இந்தியப் பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தில் “I firmly believe that castebased census will certainly go a long way in ensuring that the fruits of the various developmental schemes implemented by the Union Government and the State Government fully percolate down to the lower strata of the Society. Hence the urgent need of the hour is to incorporate the Castebased details in the ongoing Census 2011 itself without postponing it to biometric stage. I am given to understand that a few changes in the existing census format by the experts concerned will be sufficient to achieve the object of castebased census and accomplish the task early” என்று யாரும் என்னைக் கேட்டுக்கொள்ளாத நேரத்திலேயே சமூக நீதிக்காக எனக்கு முன்பே குரல் கொடுத்ததாக கூறிக் கொள்வோர் ஆர்ப் பாட்டம் செய்வோம், போராட்டம் நடத்து வோம் என்றெல்லாம் அறிவிக்காத நிலையி லேயே நான் கடிதம் எழுதியிருக்கிறேன். அதாவது மாநில அரசும், மத்திய அரசும் நிறைவேற்றிவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் பலன்கள் கடைக்கோடிப் பிரிவினருக்கும் முழுமையாகச் சென்றடைய வேண்டுமென்றால், சாதிவாரிக் கணக் கெடுப்பு மிகவும் அவசியமானதென்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பிலேயே சாதிவாரிக் கணக்கெடுப்பையும் இணைத்து மேற்கொள்வதும் பயோமெட்ரிக் கணக் கெடுப்பு என்று சொல்லி சாதிவாரிக் கணக் கெடுப்பை ஒத்திப் போடாமல் இருப்பதும் தற்போது அவசியத் தேவையாகும். தற்போது உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கான படிவத்திலேயே ஒருசில மாறுதல்களைச் செய்து சாதிவாரிக் கணக் கெடுப்புக்கான விவரங்களை சேகரித்திட முடியும் என நான் அறிகிறேன் என்று தெளிவாக சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியத்தையும், அவசரத் தையும் வலியுறுத்தி நான் கடிதம் அனுப்பி யிருக்கிறேன். தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவராக உள்ள நீதிபதி எம்.என். ராவ் அவர்கள் கூட, சாதிகளால் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளை சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் மட்டுமே போக்க முடியும். சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தினால் சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆன பிறகும் பல சமூகங்கள் முன்னேறவில்லை என்பது புள்ளி விவரங் களுடன் தெரிய வரும். அவ்வாறு தெரிய வந்தால் அந்தச் சமூகத்தினர் மேலும் சலுகைகளைக் கோரு வார்கள் என்பதாலேயே சாதிவாரிக் கணக்கெடுப் புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்று சொல்லியிருப்பதையும் நாம் மனதிலே கொள்ளலாம்.

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை சென்சஸ் அமைப்பிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்பதையும், பயோ மெட்ரிக் நடை முறையுடன் இணைத்து மேற்கொள்ளக்கூடாது என்பதையும் வலியுறுத்தி அண்மையில் பெங்களூரு வில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அறிஞர்கள் விளக்கங்கள் வழங்கியுள்ளனர். அந்த விளக்கங்களின் அடிப்படையில் அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பயோ மெட்ரிக் நடைமுறையில் வெளி அமைப்புகள் பங்கேற்று ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், அந்த அமைப்புகள் சாதிவாரி மக்கள் தொகைக் கணக் கெடுப்புப் பணியில் சமரசம் செய்துகொள்ளும் வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். பயோமெட்ரிக் புள்ளி விவரங்களைத் தொகுக்கும் மிகப்பெரிய பணி அந்த அமைப்புகளுக்கு அளிக்கப் பட்டிருப்பதே அதன் காரணம். சாதிவாரியான மக்கள் தொகை புள்ளி விவரங்கள் தொகுக்கப்படும் பணி சமரசம் செய்து கொள்ளப்பட்டால், இந்தப் புள்ளி விவரங்கள் தொகுக்கப்படும் நோக்கத்தை நிச்சயமாகத் தோற் கடித்துவிடும். மார்ச் 2011 உடன் இக்கணக்கெடுப்பின் அனைத்துப் பணிகளும் முடிந்து போய்விடும். ஆனால் பயோ மெட்ரிக் புள்ளி விவரங்கள் தொகுக் கும் பணி மட்டும் மேலும் சிறிது காலத்திற்குத் தொடரும் வாய்ப்பு உள்ளது. எனவே, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மேற் கொள்வதற்கான சரியான அமைப்பு தேசிய சென்சஸ் அமைப்புதான் என்றும், 2011 பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வீடு வீடாக மேற் கொள்ளப்படவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கிடும் பணி மேற்கொள்வதற்கான சரியான நேரம். சோதித்து அறியப்பட்ட, நம்பகத் தன்மை உள்ள சென்சஸ் அமைப்பிடமே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பையும் ஒப்படைக்கவேண் டும். பயோமெட்ரிக் புள்ளி விவரங்கள் பெறும் நடைமுறையுடன் அதனை இணைப்பதால் ஏற்படும் பேராபத்துகள் தவிர்க்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மத்திய அரசாங்கப் பணிகளில் வன்னியர்களுக்கு இரண்டு சதவிகித இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரிக்கை வைத்த டாக்டர் ராமதாஸ் அவர்கள் அவரது மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது நாடாளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவைக் கூட்டத்திலோ அது குறித்து எப்போதாவது வாய் திறந்தது உண்டா?

சமூக நீதியைப் பற்றி கருணாநிதி பேசலாமா? என்றும், சமூக நீதியைப் பற்றி முதல்வர் கருணா நிதியோ, வேறு திராவிடக் கட்சித் தலைவர்களோ பேசலாமா? என்றும், வன்னியர் சங்கம் தொடங்கி, பெரும் போராட்டங்களை நடத்தி, 30 உயிர்களை பலி கொடுத்த பிறகுதான் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு 20 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாக ஏடுகளில் செய்தி வெளிவந்துள்ளது. அந்த இருபது சதவிகித ஒதுக்கீடு வேண்டுமென்று அவர் போராடியிருக் கலாம். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப் பட்ட அந்தப் போராட்டத்திற்கு கழகம் ஆட்சிக்கு வந்ததும் மதிப்பு அளித்து, அவரையும் அழைத்துப் பேசி, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கென்று தனியாக 20 சதவிகிதம் வழங்கப் பட்டது என்ற வரலாற்றை டாக்டர் ராமதாஸ் மறைத்த போதிலும், அந்தப் போராட்டத்தில் உயிரிழந்த அந்த 30 உயிர்களுக்கும் குடும்ப நிதி ஒதுக்கீடு அளித்து, மாதந்தோறும் ஓய்வூதியமும் வழங்கச் செய்து, அந்த இருபது சதவிகித இட ஒதுக் கீட்டின் பலனை அனுபவித்து வரும் ஒவ்வொரு வரும் மறக்க மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம்.

சமூக நீதியைப் பற்றி திராவிடக் கட்சித் தலைவர்கள் பேசலாமா என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுமானால் கேட்கலாம். ஆனால் சமூக நீதிக்காகவே தோன்றிய கட்சிதான்; நீதிக் கட்சி எனும் திராவிட இயக்கங்களின் வேர்க் கட்சியாகும். நீதிக்கட்சி ஆட்சியிலேதான் முதன் முதலாக 1921ஆம் ஆண்டில் முதல் கம்யூனல் ஜி.ஓ. எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க இட ஒதுக்கீட்டு ஆணையே வழங்கப்பட்டது. சமூக நீதியைப் பற்றி நானோ, அல்லது தமிழர் தலைவர் வீரமணி அவர்களோ, மற்ற திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ பேசக் கூடாது என்றால் வேறு யார்தான் பேசுவதற்குத் தகுதி படைத்தவர்கள் என்பதை டாக்டர் ராமதாஸ் அவர்களே யோசித்துப் பேசியிருப்பாரானால் உணர்ந்து கொண்டிருக்க முடியும்.

நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, என்னை விழுப்புரத்திற்கு அழைத்துச் சென்று தனியாக நாற்காலி ஒன்றையே போட்டு, கலைஞர் முதல் அமைச்சராக வந்தால் தான் சமூக நீதியைக் காப்பாற்ற முடியுமென்று முழக்கமிட்ட டாக்டர் ராமதாஸ், தற்போது சமூக நீதியைப் பற்றி கருணாநிதி பேசலாமா என்று கேட்கிறார் என்றால் எல்லாம் காலத்தின் கோலம்தான்!

இவ்வாறு கலைஞர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment