கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 8, 2010

கலைஞர் வீடு வழங்கும் திட்டம் தமிழக அரசு நிதியில்தான் செயல்படுத்தப்படுகிறது : கலைஞர்


முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:
ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது, காங்கிரீட் வீடு கட்டித் தரும் திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி ரூ.45 ஆயிரம். மாநில அரசு வழங்குவது ரூ.15 ஆயிரம்தான். ஆனால் இந்த திட்டத்துக்கு கருணாநிதி பெயரை சூட்டியுள்ளனர். இது என்ன நியாயம் என்று கேட்டிருக்கிறாரே?
அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர். அவர் சொல்லுகிற திட்டம் வேறு. தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம் வேறு. இரண்டையும் புரியாமல் குழப்பிக் கொண்டு இருக்கிறார். காங்கிரீட் வீடு கட்டித் தரும் திட்டம் என்று அவர் கூறுவது ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு அங்கமாக இருந்த இந்திரா நினைவு குடியிருப்பு திட்டமாகும்.
இந்த திட்டம் 1997& 98ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வீடில்லாத ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஆதிதிராவிடர்கள் அல்லாத ஊரக ஏழை மக்கள் ஆகியோருக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.
இந்த திட்டத்திற்கு 75:25 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டம் இந்திராகாந்தி பெயரில் உள்ள திட்டம். இதற்கும் இப்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
இந்த திட்டம் பற்றி ஆளுநர் உரையில், “இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மட்டும் நமது மாநில அளவில் குடிசைகளை நிரந்தர இல்லங்களாக மாற்ற வேண்டும் என்றால், அதற்கு இன்னும் 30 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையை நெஞ்சில் நிறுத்தி முதல் கட்டமாக ஊரகப் பகுதிகளில் 21 லட்சம் வீடுகளில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த வீடுகள் அனைத்தையும் காங்கிரீட் கூரை கொண்ட நிரந்தர இல்லங்களாக தமிழக அரசின் நிதியை கொண்டே மாற்றி அமைத்து அவற்றை இலவசமாக அளிக்கும் மாபெரும் திட்டம் ஒன்றை இந்த அரசு வகுத்துள்ளது.
2010& 2011ம் ஆண்டு தொடங்கி இந்த திட்டத்தின் கீழ் 6 ஆண்டு காலத்தில் மண் சுவர்களால் ஆன 21 லட்சம் கூரை வீடுகளுக்குப் பதிலாக நிரந்தர வீடுகள் இந்த அரசால் கட்டித் தரப்படும். இந்த திட்டத்தின் முதல் ஆண்டான வரும் நிதி ஆண்டில் 3 லட்சம் நிரந்தர வீடுகள் ரூ.1800 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். கிராமப் பகுதிகளில் கூரை வீடுகளே இல்லாத நிலையை உருவாக்கும் இந்த உன்னத திட்டம் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்று அழைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அறிவிப்போடு இல்லாமல் நிதிநிலை அறிக்கையிலும் கூறப்பட்டு நடைமுறைக்கும் வந்துள்ளது.
இந்த 2 திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் மத்திய அரசின் நிதி உதவியோடு செய்யப்படும் திட்டத்திற்கு கலைஞர் பெயரா? அது என்ன நியாயம் என்றெல்லாம் இளங்கோவன் கேட்பது கூட்டணியை வலுப்படுத்துகிற செயல் அல்ல. வலிப்படுத்துகிற காரியமாகும்.

No comments:

Post a Comment