

ஆந்திர மாநிலம் அய்தராபாத்தில் பெரியார் திரைப்படம் (தெலுங்குமொழி) தொடக்க விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 9.8.2010 அன்று ஆற்றிய உரை வருமாறு: பகுத்தறிவு பகலவன், சுயமரியாதைச் சுடர், மூட நம்பிக்கைகள் ஒழிப்பு, பெண்ணுரிமை, அடக்கப் பட்ட சமுதாயத்திற்கான சமூக நீதி, இவற்றிற்காக தனது இறுதி மூச்சு வரை, அயராது உழைத்த சமூக புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறிய திரைப்படத்திற்குள் அடக்க முடியாது என்பதே உண்மையாகும். என்றாலும், தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகரமான சமூக சீர்திருத்தக் கருத்துகள் எந்த வொரு குறிப்பிட்ட மாநிலத்திற்கோ, மக்களுக்கோ சொந்தமானதல்ல. அது இந்திய நாட்டில் வாழும் அனைவருக்கும் பொதுவானது. சாதிய அடிப்படை யிலும், மத ரீதியிலும், தாழ்த்தப் பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அடக்கி வைக்கப் பட்ட, சுரண்டப்பட்ட, மக்களுக்காக, காலம் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். மதத்தின் பெயரால், புராண இதிகாசங்களின் பெயரால், மூடநம்பிக்கைகள் உருவாகி, சமுதாயத்தில் உயர்ந்த வன், தாழ்ந்தவன், தீண்டத்தகாதவன் என்ற கொடு மைகள் எல்லாம் நிலவுவதை எதிர்த்து போராடியவர் தந்தை பெரியார். ஒவ்வொரு மனிதனுக்கும் பகுத் தறிவு உள்ளது, அதை கொண்டு, நல்லது எது, கெட்டது எது என்பதை உணர வேண்டும். மூடப் பழக்க வழக்கங்களை கைவிட வேண்டும். தன் மானத்தோடும், சுயமரியாதையோடும் வாழ வேண் டும் என்று அறிவுறுத்தினார். பெண்களை, அடக்கி வைக்கின்ற போக்கினை சாடினார். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும், உரிமை உண்டு, திறமை உண்டு என்று உணர்த்தினார். அவருடைய போராட் டத்தை, அவர் மேற்கொண்ட கடும் பணியை இந்த திரைப்படம் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. என்.ஏ.ஜி. நிறுவனம், இந்த பெரியார் திரைப்படத்தை தெலுங்கு மொழியில் ஆந்திர மாநிலம் முழுவதும் வெளியிடுகின்றது. அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சியாக இந்த விழா அமைந்துள்ளது. திராவிடர் கழக தலைவர் அய்யா வீரமணி அவர்கள் பேசும்பொழுது, தந்தை பெரியார் அவர்களுடைய சிலையை இங்கு நிறுவ வேண்டும். அதற்கு தமிழக அரசு, தேவையான உதவிகளை செய்ய வேண்டு மென்ற வேண்டுகோளை முன் வைத்தார். தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களது தலைமை யில் இயங்குகின்ற தமிழக அரசு, தந்தை பெரியார் அவர்கள் கனவு கண்ட சாதிமத பேதமற்ற, சமத்துவ, சமதர்ம, சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடெங்கும் சமத்துவபுரங் களை உருவாக்கி வருகின்றது. அந்த சமத்துவபுரங் களில் எல்லாம் தந்தை பெரியார் அவர்களின் உருவ சிலை நிறுவப்பட்டு வருகின்றது. அதேபோல், ஆந்திர மாநிலத்திலும், தந்தை பெரியார் அவர்களின் புகழ் பரவும் வண்ணம், சிலைகளை அமைத்திட, தேவையான உதவிகளை தமிழக முதல்வர் அவர்கள் நிச்சயம் செய்வார்கள் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கின்றேன். திராவிட இனத்தைச் சேர்ந்த, தெலுங்கு மொழி பேசுகின்ற மக்கள் வாழும், ஆந்திர மாநிலத்தில், இத்திரைப்படத்தை வெளியிடும் விழாவில் கலந்து கொண்டு, திரைப்படத்தை தொடங்கி வைக்கும் வாய்ப்பினை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இந்த திரைப்படம், ஆந்திர மாநிலம் முழுவதும் திரையிடப்பட வேண்டும், தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள், கொள் கைகள், தமிழகத்தில் ஏற்படுத்திய மறுமலர்ச்சி, ஆந்திராவிலும் ஏற்பட வேண்டுமென்ற என்னுடைய விருப்பத்தை தெரிவித்து கொள்கிறேன். ஆங்கிலம் தொடர்ந்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் வருமாறு: தந்தை பெரியார் ஒவ்வொருவரும் சுய கவுரவத் துடனும், சுய மரியாதையுடனும் வாழ வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். ஒவ்வொரு மதசார்பான, மூடப்பழக்க நம்பிக்கையையும் நமது பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அவர் பெண்களின் சமத்துவத்துக்காகவும், சமவாய்ப்புகளுக்காகவும் வாதிட்டுப் போராடினார். உரிமை மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு அரசியல் மற்றும் சமூக அதிகாரம் பெற்றுத்தர அவர் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித் தார். அவரது வாழ்க்கையே ஒரு செய்தியாகும். அவர் மற்றவர்களுக்குப் பிரச்சாரம் செய்த கொள்கைகள், இலட்சியங்களின் படி வாழ்ந்தார். பெரியார் மிகப்பெரும் மனிதநேயர், அவரது இலட்சியங்கள் மனித குலம் முழுமைக்கும் பொருத்தமானவை ஆகும். இங்கு கூடியுள்ள ஆந்திர மாநிலத்தின் பல்வேறு முற்போக்கு, சீர்திருத்த இயக்கங்களைச் சார்ந்த தலைவர்கள், பிரமுகர்கள் அனைவரும் ஆந்திராவில் உள்ள மக்களின் பெரும்பான்மையினர் பெரியார் திரைபடத்தின் தெலுங்கு ஆக்கத்தைப் பார்ப்பதை உறுதி செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரின் கொள்கைகளை மேலும் தெரிந்து கொள்ள உணர்வும், உந்துதலும் பெறு வார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். பெரியார் படத்தின் தெலுங்கு ஆக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இந்தக் காவியத் திரைப்படத்தைத் தயாரிக்க தமிழக முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசு ரூ. 95 லட்சம் வழங்கியது. ஆந்திர அரசு இப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கும் என்று நம்புகிறேன். மாபெரும் சீர்திருத்தவாதி, புரட்சிகர சிந்தனை யாளர், நமது காலத்தின் மாபெரும் மனிதர் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைகளை இளைய சமுதாயத்தினர் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் திரைப்படத்தைக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசினார்.. |
No comments:
Post a Comment