கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 8, 2010

பசி இல்லாத நிலையை உருவாக்குவதே லட்சியம் - முதல்வர் கருணாநிதி பேச்சு


வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பசி, வறுமை ஒழிப்பு சர்வதேச ஆய்வுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் முக்கியத்துவம், உணவுப் பொருட்கள் விலை உயர்வு பற்றிய 3 நாள் சர்வதேச மாநாடு நந்தனம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. முதல்வர் கருணாநிதி மாநாட்டில் தொடக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது:
பசி மற்றும் வறுமையை ஒழிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பரிசீலனை செய்யவும், பசியில்லா உலகம் அடையும் வழிமுறைகளைத் தயாரிக்கவும் இங்கு கூடியுள்ளீர்கள். பழங்காலங்களிலிருந்தே தமிழ்நாடு உழவர்களுக்கும், உழவுக்கும், உணவுக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது.சமீபத்தில்தான் வெற்றிகரமாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தி முடித்துள்ளோம். தமிழ் இலக்கியத்தில் வேளாண் சுற்றுச்சூழல் அணுகுமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி எம்.எஸ்..சுவாமிநாதனுடன் இணைந்து 5 மரபுசார் பாரம்பரியப் பூங்காக்கள் உருவாக்கப்படும். வேளாண் சுற்றுச்சூழியல் மண்டலங்களில் விளையும் உணவு மற்றும் மருத்துவத் தாவரங்கள், உழவு கால்நடைகள், எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும். அவை சங்க இலக்கியங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரபுசார் பூங்காக்கள் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றிலிருந்து உருவாகும் சவால்களைச் சந்திக்க மரபணுக்களின் ஆதாரங்களாக பயன்படும்.
உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் அதிகமான, சராசரி, குறைந்த வெப்பநிலை, மழை பெய்வதில் மோசமான மாற்றம், கடல் மட்ட உயர்வு போன்ற சவால்களைச் சந்திக்க உயிரி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேளாண் யுக்தியை தயாரித்து வருகிறோம்.
தமிழ்நாடு ஒரு மழைமறை மாநிலமாகும். 43.9 % மக்கள் தொகையுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிகமாக நகர்மயமான மாநிலமாகும். நமது நாடு முழுவதும் நிலத்தடி நீர் அளவுக்கு மீறி பயன்படுத்தப்படுகிறது. ஏரிகளின் சமுதாயப் பராமரிப்பு மற்றும் நிர்வாகம் போன்ற முந்தைய நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏரிப்பாசன விவசாயத்துக்கான முனைப்புத் திட்டம் தொடங்கப்படும். மனித ஆற்றல் வளர்ச்சி மற்றும் ஆண் பெண் வளர்ச்சிக் குறியீடுகள் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இது குறைவான பிறப்பு இறப்பு விகிதங்கள் கொண்ட மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு தாக்குபிடிக்கக்கூடிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வது மாநில அரசின் கொள்கை.
தமிழகத்தின் உணவுக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்பு விநியோகத் திட்டம் முக்கிய பங்கை வகிக்கிறது. பள்ளிகள் அனைத்திலும் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் தமிழ்நாடு முன்னோடியாகும். இதனால் பள்ளிப்படிப்பு விடுபட்டுப் போவது குறைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நீளமான கடற்கரை உள்ளது. எனவே ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தை தொடங்குகிறோம் சென்னையில் மகளிர் உயிரி தொழில்நுட்பப் பூங்காவை அமைத்துள்ளோம். இது இந்தியாவில் ஒரே ஒரு நிறுவனமாகும். மாநிலத்தில் பொறியியல், மருத்துவம் மற்றும் இதர தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. மோட்டார் வாகனத் தொழிலிலும் தமிழ்நாடு தலைமை இடமாகும். என்னுடைய நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையில், எந்தக் குழந்தையும், பெண்ணும், ஆணும் பசியுடன் படுக்கைக்குப் போகாத நிலையை உருவாக்குவதுதான் எனது விருப்பமும், லட்சியமுமாகும். இதில் ஏற்கனவே நாங்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம் இருந்தாலும் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறு கருணாநிதி பேசினார். மாநாட்டுக்கு வந்தவர்களை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அஜய் பரிமா வரவேற்றார். ஆந்திர முதல்வர் ரோசையா, கேரி பவ்லர் (ரோம்), சிபிலி சூட்டர் (சுவிஸ்) உமாலேலே உள்ளிட்டோர் பேசினார்கள். சவுமியா சுவாமிநாதன் நன்றி கூறினார். முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் ரோசையா ஆகியோருக்கு எம்.எஸ். சுவாமிநாதன் நெல்லினால் தயாரித்த மாலைகளை அணிவித்தார். ஆராய்ச்சி நிறுவன அறிக்கையை முதல்வர் கருணாநிதி வெளியிட மாலத்தீவு அமைச்சர் இப்ராகிம் திதி பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment