கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 17, 2010

தமிழகம் முழுவதும் 121 பாலங்கள் கட்ட முடிவு


தமிழகம் முழுவதும் ரூ.250 கோடி செலவில் 121 பாலங்கள் கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், புதிய வழித்தடங்களை உருவாக்கவும், ஆறுகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே சாலைகள் அமைப்பது குறித்து திட்டம் வகுக்கப்பட்டது.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், தமிழகம் முழுவதும் 121 இடங்களில் புதிய மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
அந்த அறிக்கையை பரிசீலித்த முதல்வர் கருணாநிதி, தமிழகம் முழுவதும் பல இடங்களில் பாலங்கள் கட்ட உத்தரவிட்டார். இதன் படி, ரூ.250 கோடி செலவில் 121 பாலங்கள் கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த பாலங்கள் கட்ட நிதி உதவி அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் நபார்டு வங்கிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நபார்டு வங்கியும், அதை ஆய்வு செய்து, இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
அதன்படி, 121 பாலங்கள் கட்ட தேவையான நிதியில் 80 சதவீதம் அதாவது ரூ.200 கோடி நபார்டு வங்கி கடனாக அளிக்கும். மீதம் உள்ள 20 சதவீத தொகையான ரூ.50 கோடியை தமிழக அரசின் பங்காக அளிக்கும்.
இந்த திட்டத்தை உரிய வரைமுறைகளின்படி தரமாகவும், உறுதியாகவும் செயல்படுத்தும்படியும், அதை கண்காணிக்கும்படியும் கோட்டப் பொறியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் புதிய பாலங்கள் கட்டுவதற்காக பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக, தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாலங்கள் கட்டுப்படும் முக்கிய இடங்கள்:
ஆண்டிமடம்: பொன்பரப்பி & திட்டக்குடி சாலையில் ஆணைவாரி ஓடை குறுக்கே ரூ.2.75 கோடியில் பாலம். பல்லடம்: கரவல்லி மாதாப்பூர் & செங்கதுரை குமாரபாளையம் சாலையில் ரூ.2.30 கோடியில் பாலம். தொண்டாமுத்தூர்: துடியலூர் & சின்னதடாகம் சாலையில் ரூ.2.05 கோடியில் பாலம்.
மொரப்பூர்:
ஈச்சம்பாடி &மல்லமாபுரம் சாலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.5.80 கோடியில் பாலம். திண்டுக்கல்: லட்சுமணப்பட்டி & அய்யம்பாளையம் சாலையில் ரூ.3.40 கோடியில் பாலம். பவானிசாகர்: புளியம்பட்டி & பவானிசாகர் பண்ணாரி சாலையில் ரூ.2 கோடியில் பாலம். திருவட்டார்: திக்குறிச்சி & கடவு சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூ.8 கோடியில் பாலம்.
கிருஷ்ணகிரி:
கே.ஆர்.பி.டேம் அணுகு சாலைக்கும் கால்வேஹெள்ளி சாலைக்கும் இடையே தென்பென்னை ஆற்றின் குறுக்கே ரூ.5.80 கோடியில் பாலம். ஆலங்குடி: திருவரங்கம் ஊராட்சியில் இசுகுபட்டியில் ரூ.2.62 கோடியில் பாலம்.
திருவாடானை:
அனுமந்தங்குடி & நல்லாங்குடி சாலையில் ரூ.3.87 கோடியில் வட்டானம் சாலையை இணைக்கும் பாலம்.
காரைக்குடி:
தஞ்சாவூர் & சாயல்குடி சாலையில் ரூ.5.10 கோடியில் பாலம். திருப்பத்தூர்(சிவகங்கை): மருதிப்பட்டி & எஸ்.எஸ்.கோட்டை சாலையில் ரூ3.57 கோடியில் பாலம். வெள்ளக்கோயில்: பெரமியம் செல்லப்பிள்ளை கவுண்டம்புதூர் சாலையில் அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுதல் மற்றும் மேம்பாடு செய்தல் ரூ4.90 கோடி ஒதுக்கீடு. உடுமலைப்பேட்டை: பொன்னம்மன் சாலையில் காழியார் ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடியில் பாலம்.
கும்மிடிப்பூண்டி:
ஏனாம்பக்கம் & தொலவேடு சாலையில் ஆரணி ஆற்றின் குறுக்கே ரூ.5.20 கோடியில் பாலம். பள்ளிப்பட்டு: சித்தூர் & திருத்தணி சாலையில் ரூ.3 கோடியில் பாலம். செய்யார்: பிரம்மதேசம் & ஒச்சேரி சாலையில் ரூ.9.60 கோடியில் பாலம். ஆரணி: கண்ணமங்கலம் & ஆரணி சாலையில் ரூ4.25 கோடியில் பாலம். நன்னிலம்: மயிலாடுதுறை & திருத்துறைப்பூண்டி சாலையில் திருமலைராஜன் ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் பாலம்.
திருவெறும்பூர்:
அண்ணாநகரில் ரூ.2.84 கோடியில் பாலம். காட்பாடி: காங்கேயநல்லூர் & சத்துவாச்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே ரூ.7.50 கோடியில் பாலம். பேர்ணாம்பட்டு: ஆம்பூர் & சாத்கர் சாலையில் ரூ.6.40 கோடியில் பாலம். ஆற்காடு: கலவை & வாழைப்பந்தல் சாலையில் ரூ.5 கோடியில் பாலம். வாணியம்பாடி: பெரியம்பட்டி & தேவஸ்தானம் ஆகிய கிராமங்களை இணைக்க பாலாற்றின் குறுக்கே ரூ.3.90 கோடியில் பாலம்.
ராணிப்பேட்டை:
தென்கால் & மெல்விஷாரம் ஆகிய கிராமங்களை இணைக்க பாலாற்றின் குறுக்கே ரூ.21.80 கோடியில் பாலம். உளூந்தூர்பேட்டை: தியாகதுருகம் & அடரி சாலையில் ரூ.3 கோடியில் பாலம். கண்டமங்கலம்: வானூர் & கண்டமங்கலம் சாலையில் சக்கராபரணி ஆற்றில் ரூ.13.47 கோடியில் பாலம், வானூர் & கண்டமங்கலம் சாலையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.10.75 கோடியில் இன்னொரு பாலம் என்று மொத்தம் 121 பாலங்கள் ரூ.250 கோடியில் கட்டப்படுகிறது.

No comments:

Post a Comment