கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 29, 2010

சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள்


மக்கள் நலனுக்காக சிறப்பாக பணி யாற்றிய மாவட்ட ஆட்சியர் களுக்கு முதல் அமைச்சர் கலை ஞர் விருதுகள் வழங்கினார்.

சென்னை கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளி கையில் கடந்த 2 நாள்களாக மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நேற்று நடந்து முடிந்தது. மாநாட்டின் இறுதியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப் பட்டது. அப்போது, மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய ஆட் சியர்களுக்கு தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்பட்டன.

விருது பெற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் பெ. அமுதா, தேனி மாவட்ட ஆட் சியர் பூ.முத்துவீரன், விருது நகர் மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் ஆகியோரை தலைமை செயலாளர் கே.எஸ். சிறீபதி மேடைக்கு அழைத் தார். அவர்கள் வந்து முதல் அமைச்சர் கலைஞரிடம் விரு துகளை பெற்றுக்கொண்டனர். அவர்களின் சிறப்பான சேவையை முதல் அமைச்சர் கலைஞர் பாராட்டினார்.

அதுபோல், முதல் அமைச் சர் தனிப் பிரிவில் இருந்து 1.8.2009 முதல் 31.7.2010 வரை பெறப்பட்ட மக்களின் மனுக் களில், அதிகப்படியான மனுக் களுக்கு சிறந்த முறையில் நட வடிக்கை எடுத்த தேனி மாவட்ட ஆட்சியர் பூ.முத்து வீரன், நெல்லை மாவட்ட ஆட்சியர் மு.ஜெயராமன், கன் னியாகுமரி மாவட்ட ஆட் சியர் ராஜேந்திர ரத்னூ ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்களுக் கும் முதல் அமைச்சர் கலை ஞர் விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விழாவின் இறுதியில் தலை மைச் செயலாளர் கே.எஸ். சிறீபதி பேசியதாவது: இந்த மாநாட்டில் பல் வேறு திட்டங்களைப் பற்றி ஆய்வு செய்தோம். அதிலுள்ள நிறை, குறைகளைப் பற்றி விவா தித்து, இன்னும் சிறப்பாக செயல்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது. திட்டங் களை நிறைவேற்றுவதில் தமி ழகம் ஏற்கெனவே முன்னோடி மாநிலமாக உள்ளது. இன்னும் முன்னேற்றம் பெறுவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

யார் யாருக்கெல்லாம் திட் டங்கள் சென்று சேர வேண் டுமோ, அவர்களிடம் அவற்றை கொண்டு சேர்ப்பதற்கு நல்ல முறையில் களப்பணிகள் நடந் துள்ளன. கடந்த ஆட்சியர் மாநாட்டுடன் ஒப்பிட்டால் வெகுவான முன்னேற்றம் காணப் பட்டன. இந்த மாநாட்டில் குற்றம், குறைகளை தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டிய திருந்தது. அந்த அளவுக்கு களப்பணிகள் இருந்தன. முழு மனதுடன் நீங்கள் பணியாற் றியது தெரிய வந்தது. நம்மை அந்த அளவுக்கு இயக்கிய முதல் அமைச்சர் பாராட்டுக்கு உரியவர்.

அடுத்து வரும் சில மாதங் களில் நாம் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென் றால் 4 ஆண்டுகள் முடிந்து அய்ந்தாவது ஆண்டில் இந்த ஆட்சி வீறுநடை போடுகிறது. அதனால் இன்னும் முனைப் புடன் அரசு திட்டங்களை குற் றச்சாற்றுகளுக்கு ஆளாகாத நிலையில் செயல்படுத்த வேண் டும். மாநாட்டின் போது சில மாவட்டங்களில் உள்ள குறை களையும் சுட்டிக் காட்டி னேன். ஒரு குறையும் இல்லா மல் இருக்க வேண்டும் என் பதுதான் என் எண்ணம்.

இவ்வாறு அவர் பேசினார். இறுதியில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களிலும் இளையவ ரான கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அருண்ராய் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment