பிரபல சினிமா கலை இயக்குநர் அங்கமுத்து கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு 3.8.2010 அன்று அதிகாலை இயற்கை எய்தினார். அங்கமுத்துவின் உடல் நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த அங்கமுத்து முதல்வர் கருணாநிதியின் வசனத்தில் வெளிவந்த அவன் பித்தனா, தங்கத் தம்பி ஆகிய திரைப்படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர். எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், நினைத்ததை முடிப்பவன் உள்பட 250 படங்களுக்கு அரங்கம் அமைத்துள்ளார்.
மேலும் அங்கமுத்து தமிழக சட்டமேலவை உறுப்பினராகவும், திரைப்பட தொழிலாளர் சம்மேளத்தின் பொருளாளராகவும் பதவி வகித்தவர்.
10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள அங்கமுத்து, அதிமுக கொடியை வடிவமைத்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் கருணாநிதியின் சார்பில், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (4.8.2010) சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள மறைந்த அங்கமுத்து இல்லத்திற்கு நேரில் சென்று அன்னாரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கமுத்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

No comments:
Post a Comment