கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 23, 2010

மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு முறையை தமிழகத்தில் ஏற்க முடியாது - மத்திய அரசிடம் முதல்வர் விளக்கம்


முதல்வர் கருணாநிதி அறிக்கை:
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு, அடுத்த கல்வி ஆண்டு முதல் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாக 14ம் தேதி செய்தி வெளியானது.
மத்திய அரசின் அந்த முடிவு காரணமாக தமிழகத்தின் ஏழை கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை விளக்கி, மறுநாளே பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதினேன். நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மூலமாகவும் தெரிவித்துள்ளேன்.
அந்த கடிதத்தில், Òஇந்திய மருத்துவக் குழுமம் அளித்துள்ள பரிந்துரையின் பேரில் 2011&2012ம் ஆண்டு முதல் அகில இந்திய அளவில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று, தொழில் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை 2007&2008ம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது. இதனால், சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள முடிவு மாநிலங்களின் கல்வி முறையை நிர்வகிப்பதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாக கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசு 69% இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது. புதிய முறையினால் இதை செயல்படுத்த இயலாத நிலை ஏற்படும். எனவே, பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க இயலாதுÓ என்று எழுதியுள்ளேன்.
நான் எழுதியதற்கு பிறகு, ஜெயலலிதா திடீரென்று விழித்துக் கொண்டு, நீண்ட அறிக்கையை எழுதச் செய்து, அதில் பெரும்பாலும் என்னைக் குற்றஞ்சாட்டுவதிலும், தேவையில்லாமல் விமர்சிப்பதிலும் நேரத்தினை செலவிட்டுள்ளார்.
கடிதம் எழுதினால் போதுமா, முதல் அமைச்சர் நேரிலேயே சென்றிருக்க வேண்டாமா என்றெல்லாம் அறிக்கையிலே கேட்டுள்ளார். ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு முதல் அமைச்சர் டெல்லிக்கு சென்று பிரதமரையும், துறையின் அமைச்சரையும் நாடாளுமன்றத் தொடர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமேயானால், சரக்கு மற்றும் சேவை வரி முறையை அமல்படுத்திட அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட உள்ள உத்தேச வரைவுத் திருத்தம் குறித்த செய்தி வந்ததும், 29&7&2010 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். நகலை மத்திய நிதி அமைச்சருக்கும் அனுப்பினேன். அதைத் தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் நிதியமைச்சர் அன்பழகன், வணிக வரித் துறை அமைச்சர் உபயதுல்லா ஆகியோர் நமது நிலையை வலியுறுத்தி யிருக்கிறார்கள். அந்த பிரச்னையின் முக்கியத்துவம் கருதி, மீண்டும் கடந்த 17ம் தேதி பிரதமருக்கும், நிதித் துறை அமைச்சருக்கும் நானே கடிதம் எழுதியதோடு, நேற்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனை அனுப்பி பேசச் செய்திருக்கிறேன்.
அதுபோலவே சாதிவாரி கணக்கெடுப்பில் பயோ&மெட்ரிக் முறையைக் கொண்டு வரப்போவதாக செய்தி வந்ததும், கடந்த 14ம் தேதி பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். எனவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னை வரும்போதும் முதலமைச்சர் டெல்லிக்கு சென்றிட முடியாது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரச்னையைப் பற்றி அறிக்கை எழுதவே 4 நாட்களாகி இருக்கிறது. அந்த அறிக்கையிலும் பிரச்னையைப் பற்றி எழுதுவதற்குப் பதிலாக என்னைப் பற்றியே எழுதுகிறார் என்றால், அவருக்கு பிரச்னையிலே உள்ள அக்கறையை விட இந்த அரசை எதிர்த்து எழுத வேண்டும் என்பதிலேதான் கவனம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மேலும், ஜெயலலிதா தனது அறிக்கையில், தமிழகத்திலே நுழைவுத் தேர்வை அவர் தான் ரத்து செய்ததை போல விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், அவரது ஆட்சிக் காலத்தில் பொது நுழைவுத் தேர்வு முறையை முறையாக சட்டவிதிகளின்படி நீக்காமல், 9&6&2005 அன்று அவசர அவசரமாக ஒரு அரசாணையைப் பிறப்பித்தனர். அந்த ஆணை 27&6&2005 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் செல்லுபடியாகாது என்று தீர்ப்பு கூறப்பட்டு விட்டது.
மீண்டும் 18&2&2006ல் அவர் ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணையும், 27&2&2006ல் உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால், 2006ம் ஆண்டு மே மாதம், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகுதான், பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு 7&7&2006 அன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரைகளை பரிசீலித்து, பொது நுழைவுத் தேர்வு முறையை அறவே நீக்குவதற்கான சட்டமாக்கப்பட்டு 7&3&2007 அன்று முதல் அமலில் இருந்து வருகிறது.
தற்போதைய பிரச்னையிலே கூட, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், ஒரு வாதியாகச் சேர்த்துக் கொள்ளக் கோரி, தமிழக அரசின் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த மாதம் 10ம் தேதியன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்தச் செய்தியும் ஏடுகளிலும் வந்துள்ளது. தொலைக்காட்சிகளிலும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த அளவிற்கு இந்த பிரச்னையிலே தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் அதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு, எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர், அரசின் நடவடிக்கைகளுக்கெல்லாம் எதிராக எந்த அளவிற்கு செயல்பட்டு வருகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment