கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, August 4, 2010

திமுகவை வளர்க்க என் பிள்ளைகளை பலிகொடுக்கத்தயார் :கலைஞர்



02.08.2010 அன்று கோவை வ.உ.சி. பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:

வ.உ.சி திடல் அளவுக்கு மீறி நிரம்பி வழிகின்ற அளவிற்கு கூட் டம், இங்கு நிரம்பி வழிந்து பக் கத்திலே உள்ள சாலைகளிளெல் லாம் மக்கள் அணி அணியாக வருகின்ற காட்சியை பார்க்கும் போது மீண்டும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு நடை பெறுகிறதோ என்று நானே சந் தேகப்படுகின்ற அளவிற்கு நீங்கள் பெருவெள்ளமாக குழுமியிருக்கின்றீர்கள். இந்தக் கூட்டத்தில் நம்முடைய துணை முதலமைச்சர் அவர்களும், மற்றும் கழகத்தினுடைய முன்னணி வீரர்களும் ஆற்றிய உரைகளையெல்லாம் நீங்கள் கேட்டீர்கள். அனல் பறந்தது, தணல் ததும்பியது, புனல் பாயுமா என்று நான் எதிர்பார்த்த நேரத்தில், இல்லை - பாய்ந்த புனலும், கொதிநீராகத்தான் பாய்ந்தது. நான் தம்பி ஸ்டாலினுடைய பேச் சைத்தான் குறிப்பிடுகி றேன்.

இவ்வளவு கோபம், சினம் இந்த அளவிற்கு ஆத்திரம், பேசிய நண்பர் களுக்கெல்லாம் ஏற்பட என்ன காரணம் என்று நான் சிந்தித்தேன். நான் சிந்தித்ததைவிட இந்த கூட்டத்திலே கலந்து கொண்டிருக்கின்ற நீங்களும் சிந்தித்து உண்மையை உணர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். முன்பு இங்கே நம்முடைய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு போட்டியாக ஒரு கூட்டம் நடைபெற்றதாகவும், அதிலே என்னையும் உங்களால் கட்டிக் காக்கப்படுகின்ற கழகத்தையும், கார சாரமாக; வாயில் வந்தவாறெல்லாம் பேசினார்கள். அவைகளை பத்திரிகை தர்மத்தை உணர்ந்ததாக சொல்லிக் கொள்கின்ற எந்தப் பத்திரிகையும் வெளியிட்டு கண்டிக்கவில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள், நானும் அறிவேன்.

செம்மொழி மாநாடு நடைபெற்ற போது மாநாட்டுப் பணிகளை கவனிப்பதற்காக இரண்டு மூன்று தடவைக்கு மேல் நான் கோவைக்கு வந்தேன். நம்முடைய தம்பி ஸ்டாலினும் மற்றும் இங்கே உள்ள நண்பர்களும் வந்து சென்றார்கள். நான் மாநாட்டிற்கு ஒரு பத்து நாளைக்கு முன்பு இங்கே வந்தேன். வந்தபொழுது எல்லாக் கம்பங்களிலும் கழகத்தினு டைய இரு வண்ணக் கொடிகளும், கழகத் தலைவர்களுடைய படங்களும் அமைக்கப்பட்டு, அதிலே மாநாட்டு விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததும் எனக்கு ஒரு உணர்வு.

இந்த மாநாடு உலகத்திலே இருக்கின்ற எல்லாத் தமிழர்களையும் அழைத்து, தமிழர்களுடைய மாநாடாக நடத்தப் படவேண்டிய ஒன்றல்லவா? இதிலே கட்சிப் பிரச்சினைக்கு இடம் தரலாமா? என்ற அந்த கேள்வி உள்ளத்திலே எழுந்து சென்னைக்குச் சென்றதும் ஒரு அறிக்கை தந்தேன். கோவையிலே மாநாடு நடை பெறுகின்ற இடத்தை வீதிகளை, தெருக் களை, பக்கத்திலே உள்ள பகுதிகளை யெல்லாம் பார்த்தேன். பல இடங்களிலே நம்முடைய கொடிகளும், கழகத் தலை வர்களுடைய படங்களும், இன்னும் சொல்லப்போனால் அந்தந்த வட்டா ரத்திலே உள்ள தலைவர்களுடைய படங் களும் இருக்கின்ற காட்சியைக் கண் டேன்.

இது கட்சி சார்பற்ற மாநாடு என்ற அடையாளத்தை தெரிவிப்பது அல்ல. ஆகவே நம்முடைய கழகத் தோழர்கள் தயவு செய்து மாவட்டக் கழகச் செய லாளரானாலும், வட்டக்கழக, ஒன்றியக் கழக, கிளைக்கழகத்தினுடைய தம்பி மார்களானாலும் இந்த மாநாட்டை கட்சி சார்பற்ற நிலையில் தமிழ்த்தாயை வணங்குகிற, தமிழ்த் தாயை போற்று கின்ற, தமிழுக்கு ஆக்கமும், ஊக்கமும் தேடுகின்ற மாநாடாக நடத்த வேண்டும்,

இதற்கு உலகத்திலே உள்ள பல்வேறு நாடுகளிலே உள்ள அறிஞர் பெருமக்க ளெல்லாம் தமிழ் வல்லுநர்கள் எல்லாம் வரவிருக்கின்றார்கள், ஆகவே நாம் தமி ழின்பால் கொண்டுள்ள அன்பையும், பற்றையும் வெளிப்படுத்துகின்ற வகை யிலேதான் இந்த மாநாட்டை எல்லாக் கட்சிக்காரர்களும் கலந்து கொள்ளு கின்ற கட்சி சார்பற்ற மாநாடாக நடத்த வேண்டும் என்று நான் சொன்னேன்.

ஏனென்றால் அந்த மாநாட்டிற்கு தி.மு.கழகத்தினர் மாத்திரமல்ல, காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாத் திரமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந் தவர்கள் மாத்திரமல்ல, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாத்திரமல்ல, முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாத்திரமல்ல, இவர்கள் எல்லாம் அழைக் கப்பட்டிருந்தாலும்கூட யாருடைய தலைமையிலும் அந்த மாநாட்டில் கட் சிப் பிரச்சாரம் நடைபெற போவதில்லை.

ஆகவே வருகின்ற அத்தனைபேரும் சொற்பொழிவாளர்களானாலும், கவி ஞர்களானாலும், புலவர்களானாலும், தமிழைப்பற்றி ஆய்வு செய்து தமிழ் வல்லமையை, தமிழ் வளத்தை, தமிழின் அழகை, தமிழை வாழ்த்தவேண்டிய, வளர்க்க வேண்டிய பொறுப்பை எப்படி நிறைவேற்றுவது என்பதைப் பற்றித்தான் கவலை கொண்டு பணியாற்ற வேண்டு மேயல்லாமல் கழகக் கொடியை எங்கே நடலாம் என்று ஆலோசித்து நம்மு டைய கொடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வகையில் நீங்கள் மாநாடு நடத்தினால் நான் மிகவும் வருந்துவேன் என்று அறிக்கை விடுத்தேன். அறிக்கை விடுத்தது மாத்திரமல்ல, நம்முடைய கழகத் தம்பிமார்களை, செயல்வீரர் களை யெல்லாம் கேட்டுக் கொண்டேன்.

எனது வேண்டுகோளை கட்டளையாக ஏற்று

என்னுடைய வேண்டுகோளை கட்ட ளையாக ஏற்றுக் கொள்கின்ற என்னு டைய தம்பிமார்கள், அடுத்து ஒரு வாரம் கழித்து இங்கே வந்து பார்த்தால் ஒரு கம்பத்திலே கூட நம்முடைய கழகக் கொடி இல்லை. (பலத்த கைதட்டல்) இன்னும் சொல்லப்போனால் என்னு டைய படத்தைக் கூட எடுத்துவிட்டார் கள். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் வெளிநாட்டிலே உள்ள புலவர் பெருமக்கள், அறிஞர் பெரு மக் கள், ஆய்வாளர்கள், ஆற்றல்மிகு மொழி யாளர்கள் இவர்கள் எல்லாம் வருகின்ற ஒரு மாநாட்டில் அவர்கள் இந்த கொடி களைப் பார்த்து, ஓகோ கட்சியை வளர்ப் பதற்காகத்தான் இவர்கள் மாநாடு நடத் துகிறார்கள் போலும், தமிழை வளர்ப் பதற்காக இல்லை என்று எண்ணினால் அந்த சிறுமனத்தாங்கல்கூட நம்முடைய மாநாட்டினுடைய நோக்கத்தைக் கெடுத்து விடும்.

ஆகவே தயவு செய்து கொடிகளை நடாதீர்கள், கொடிகளை கட்டாதீர்கள். இரு வண்ணத் தோரணங்களை எங்கும் மாட்டாதீர்கள் என்றெல்லாம் வேண்டு கோள் விடுத்தேன். எல்லோரும் நான் சொன்னதைக் கேட்கிறார்களா என்பதை பார்க்க மாநாட்டிற்கு ஓரிரு நாட்கள் முன்பாக வந்து பார்த்தால், தேடிப் பார்த்தால்கூட ஒரு கொடியில்லை. நானும் தம்பி ஸ்டாலினும் வந்தோம், நானும் பேராசிரியரும் வந்தோம் ஆச் சரியப்பட்டோம். பேராசிரியரிடத்திலே சொன்னேன் பார்த்தீர்களா நம்முடைய கழக கண்மணிகள்! வேண்டுகோளைக் கூட கட்டளையாக ஏற்று எப்படி பொறுப் போடு நடந்து கொள்கிறார்கள் பார்த் தீர்களா என்று சொன்னேன்.

கழகக் கொடியைக் கட்டாதே என்று சொன்னது யார்? கழகக் கொடி ஏந்தி கட்சி வளர்த்த கருணாநிதி. கழகத் தோரணங்களை தொங்க விடாதே என்று சொன்னது யார்? கழகத் தோர ணங்களைத் தொங்கவிட்டு கட்சியை தஞ்சை மாவட்டத்திலே, தமிழகத்திலே வானுயர வளர்த்த கருணாநிதி தோரணங் களைத் தொங்க விடாதே என்று சொன்னான்.

அப்படி சொன்னதற்கு கோவை மாவட்டத்திலே உள்ள தமிழ கத்திலே உள்ள கழகக் கண்மணிகளே என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நம்முடைய கொடியை, நமது கழகக் கொடியை கட்டாதே என்று தலைவரே சொல்வதா! என்று ஒரு கணம் நீங்கள் மனத்திற்குள் கேள்வி கேட்டிருப்பீர்கள், மனம் புண் அடைந்திருப்பீர்கள், அப் படி ஒருக்கணம் உங்களுடைய மனதை புண்ணாக்கியதற்கு நான் உங்களிடத் திலே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் (கைதட்டல்).

ஆனால் அந்த மன்னிப்பை எந்த வடிவத்திலே இப்பொழுது கேட்டுக் கொள்கிறேன் என்றால் தாராளமாக கொடிகளைக் கட்டுங்கள். ஏராளமாக தோரணங்களை தொங்க விடுங்கள். எங்கு பார்த்தாலும் பெரியார் படமும், அண்ணா படமும், கழகத் தலைவர் களின் படங்களும் ஒட்டப்பட்டிருக் கட்டும்! செய்யுங்கள். ஏனென்றால் நாம் நம்மை யாரோ வீழ்த்துவதற்கு இடம் கொடுக்கப் போகிறவர்கள் அல்ல.

சமுதாய இயக்கமான தி.மு.கழகத்தை யாராலும் வீழ்த்த முடியாது

யாராலும் நம்மை வீழ்த்த முடியாது. நாம் வீழ்த்தப் பட்டாலும் மீண்டும் எழக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள். திரா விட முன்னேற்றக் கழகம் என்பது ஓர் அரசியல் இயக்கம் மாத்திரமல்ல. அது ஒரு சமுதாய இயக்கம். திராவிட முன் னேற்றக் கழகம் நடத்துவது அரசியல் நிகழ்ச்சிகள் மாத்திரமல்ல. சரித்திரச் சுவடுகள், வரலாற்று ஏடுகள். அந்த வரலாற்று ஏடுகளிலே தான் கடந்த மாதம் - அந்த மாதம் அந்த ஏடு செம் மொழி ஏடாக இங்கே வெளி வந்தது. இன்று அந்த ஏடு மீண்டும், அரசியல் ஏடாக, திராவிடத்தைத் தட்டியெழுப்பு கின்ற ஏடாக இன்றைக்கு உங்களுக்கு படிப்பதற்குக் கொடுக்கப்பட்டிருக்கின் றது.

அந்த மாநாட்டைக் கண்டு மனம் மகிழ்ந்தவர்கள், மலேசியாவில், சிங்கப் பூரில், கலிபோர்னியாவில், கடல் கடந்த நாடுகளில் எல்லாம் ஏராளமானவர்கள் உண்டு. அந்த மாநாட்டில் உங்களுக்கு ஒன்றைச் சொல்லுகிறேன். இலட்சக் கணக்கிலே மக்கள் கூடிய அந்த மாநாட் டில் ஒரு வெளிநாட்டுப் புலவருக்கு, பேராசிரியர் அஸ்கோ பர்போலா, பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் - அவருக்கு ஒரு விருது வழங்கப்பட்டது .

அந்த விருதுக்கு கருணாநிதி விருது என்று பெயர். ஏன் அந்தப் பெயரிலே விருது கொடுத்தார்கள் என்றால், உங் களுக்குத் தெரியும் - எனக்கு, என்னு டைய வீட்டில், உள்ள சொத்துக்கள், என்னுடைய ஸ்தாபனங்களிலே உள்ள உடைமைகள் எல்லாம் பங்கு பிரிக்கப் பட்ட போது - என்னுடைய மனைவி மார்களுக்கு - இரு மகள்களுக்கும் இவ் வளவு ரூபாய், அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, முத்து இவர்களுக்கெல்லாம் இவ்வளவு ரூபாய் என்று ஒவ்வொரு வருக்கும் கொடுத்தது போக மிச்சமாக நான் வைத்திருந்தது ஒரேயொரு வீடு தான். கோபாலபுரத்திலே உள்ள வீடு. அந்த வீட்டையும் எனக்குப் பிறகு மருத்துவ மனைக்குக் கொடுத்து விடுங்கள் என்று ஓர் அறக்கட்டளையை நியமித்து, அந்த அறக்கட்டளைக்கு எழுதி வைத்து விட்டேன்.

இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், அந்த வீடு வாசல் சொத்து இவைகளைப் பற்றியெல்லாம் நான் என்றைக்கும் கவலைப்படுவதில்லை. நான் சொத்தாக நினைப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி தான். நான் சொத் தாக மதிப்பது - நான் ஆபரணமாக அணிவது - மிசா காலத்திலே சென்னை சிறைச்சாலையிலே ஸ்டாலினை அடித்து உதைத்து உடம்புகள் எல்லாம் தழும்பு களாக - ரத்தக் காயங்களாக இருந்ததே - அதைப் பார்த்து ரசித்தேனே - அதைத் தான் நான் நகைகளாக, ஆபரணங்களாக கருதி ரசிப்பவன்.

அதைப் போல அழ கிரிக்கோ, முத்துவுக்கோ, ஸ்டாலி னுக்கோ, தமிழரசுவுக்கோ இவர்களையெல்லாம் நான் பலியாக்கி விட்டுத் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை - தமிழகத்தை வளர்க்க வேண்டுமென்றால் - இரண் டிலே எதைச் செய்வாய் என்று கேட் டால் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்க்க முற்படுவேனே யல் லாமல், நான் இவர்களைக் காப்பாற்ற, இவர்களை வாழவைக்க முற்படுகிறவன் அல்ல.

என்னைப் பார்த்து உங்களைப் போன்றவர்களை யெல்லாம் கூட்டி வைத்துக் கொண்டு இந்தக் கோவை நகரத்தில் எந்தக் கோவை நகரத்தில் 1947ஆம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்சில் எந்த எம்.ஜி.ஆரோடு சேர்ந்து, அவர் அர்ஜுனனாக நடித்த படத்தில், அபிமன்யூ படத்திற்கு வசனம் எழுதி னேனோ அந்த ஜூபிடர் பிக்சர்ஸ் இருக்கின்ற கோவை நகரத்தில் எந்த ஜூபிடரில் ஏ.எஸ்.ஏ. சாமி அவர்களி டத்திலே துணை இயக்குநராக சேர்ந்து ஒவ்வொரு நாளும் 12 மணிக்கு, 1 மணிக்கென்று கோவை ராமநாதபுரம் ஜூபிடர் பிக்சர்சில் இருந்து சிங்கா நல்லூரில் இருந்த என்னுடைய வீட் டிற்கு சென்று என்னுடைய எழுத்துப் பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தேனோ எந்தச் சிங்கநல்லூரிலிருந்து பகல் நேரத்திலே, இரவு நேரத்திலே வெளியே வந்தால், சில தீவிரவாதிகள் அங்கே சூழ்ந்து கொண்டு உயிருக்கே ஆபத்து விளைவிப்பார்கள் என்று அண்ணா சாமி என்ற நண்பரும், தம்பி ராமநா தனும், மறைந்த ராஜமாணிக்கமும் இவர்கள் எல்லாம் அறிவுரை கூறியதற் கேற்ப அதைக் கேட்டு அப்பொழுதும் உயிர் போனால் பரவாயில்லை என்று கட்சிப் பணிகளை ஆற்றிக் கொண்டி ருந்தவன் கருணாநிதி.

அந்தக் கருணா நிதியைப் பார்த்து இங்கே ஒருவர் மைனாரிட்டி அரசு நடத்து கின்ற கருணாநிதி என்று சொன்னதாக பூமிக் கும் ஆகாயத்துக்குமாக பொன்முடி இங்கே குதித்தார். எப்படி அவர் சொல் லலாம் என்று நம்முடைய தம்பி ராஜா இங்கே குதித்தார். இது நியாயமா என்று தம்பி ஸ்டாலின் கேட்டார். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வில்லை.

இது மைனாரிட்டி அரசு என்று அம்மையார் ஜெயலலிதா சொல்கிறார். நான் அவரை அம்மையார் என்று தான் அழைப்பேன். அவர் வேண்டுமானால் என்னை கருணாநிதி என்று சொல் லட்டும். நான் அண்ணாவிடம் பண்பாடு கற்றவன். பெரியாரிடம் அரசியல் நாகரி கம் கற்றவன். அதனால் கருணாநிதி, கருணாநிதி என்று சொல்லட்டும். கலைஞர் என்று சொன்னால் அல்லது முதலமைச்சர் என்று சொன்னால் ஒரு வேளை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களோ என்பதற்காக கருணா நிதி என்று சொன்னால் தான் உங் களுக்குப் புரியும் என்று சொன்னார் என்று நான் நினைத்துக் கொள்கிறேன்.

கருணாநிதி என்பது ஒன்றும் தவறான வார்த்தை அல்ல. கருணை மிகுந்த நிதி (கைதட்டல்) என்று எடுத்துக் கொள் கிறேன். எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும். அண்ணா, அண்ணா என்று அண்ணாவை அழைத்துக் கொண் டிருந்த ஈ.வி.கே. சம்பத் அண்ணாவிட மிருந்து கோபித்துக் கொண்டு பிரிந்த பிறகு திருவாளர் அண்ணாதுரை என்று சொல்லவில்லையா? நாவலர் நெடுஞ் செழியனும், பேராசிரியர் அன்பழகனும், நானும், மதியழகனும், ப.உ. சண்முகமும், நம்முடைய பொன்முடி போன்றவர் களும் அத்தனை பேரும் அதைக் கேட் டுக் கொதிக்கவில்லையா?

அண்ணா, அண்ணா என்று உங்களை அழைத்த சம்பத் இன்றைக்கு திருவாளர் அண்ணா துரை என்று அழைக்கிறாரே, இதை நாங்கள் எப்படி கேட்டுக் கொண்டி ருப்பது என்று சொன்ன போது அண்ணா என்ன சொன்னார் தெரியுமா? பத்திரிகையிலே எழுதினார். எனக்கொரு கவலை விட்டது. என்ன கவலை என்றால், எங்கே என்னை அண்ணா, அண்ணா என்று சொல்லி, பிறகு தன்னுடைய வாதங்களை எடுத்து வைத்து கழகத் தோழர்களிடத்திலே தனக்கு ஆதரவு தேடிக் கொள் வாரோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

நல்ல வேளை, என்னை அண்ணாதுரை என்று அழைத்து, அவர் யார், நாம் யார் என்று காட்டிக் கொண்டு விட்டார், ஆகவே நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அண்ணா எழுதினார். அந்தப் பொறுமையின் பொக்கிஷமான அண்ணாவிடம் பயின்றவர்கள் நாங்கள். ஆகவே கருணாநிதியின் மைனாரிட்டி அரசு என்று சொன்னால் நான் இன் னொரு காரணத்திற்காகவும் மகிழ்ச்சி அடைவேன்.

நாங்கள் மைனாரிட்டிகளுக்காக நடத்துகின்ற அரசு இது. தமிழ் நாட்டில் மைனாரிட்டிகள் உண்டா இல்லையா? தமிழ்நாட்டிலே கிறித்தவர்கள் மைனா ரிட்டிகள் இஸ்லாமியர்கள் மைனா ரிட்டிகள் அந்த மைனாரிட்டிகளைப் பற்றி நம்முடைய காங்கிரஸ் ஏடு தேசிய முரசு பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. நண்பர் கோபண்ணா அவர்கள் நடத்துகின்ற ஏடு அது.

அதிலே அவர் சொல்லுகிறார் மைனா ரிட்டிகளுக்காக இன்னமும் நாங்கள் போராட வேண்டியிருக்கிறது. எப்படி யென்றால் இன்று நேற்றல்ல காலம் காலமாக நாங்கள் மைனாரிட்டி களோடு தான் இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் திருவாரூ ரிலே விஜயபுரத்திலே அண்ணாவையும், பேராசிரியர் அன்பழகனையும் நான் சந்தித்ததே ஒரு மைனாரிட்டி மக்கள் நடத்திய சிக்கந்தர் விழாவிலேதான். அந்த விழாவிலேதான் நான் அண்ணா வையும் பேராசிரிய ரையும் சந்தித்தேன்.

1944-45 ஆம் ஆண்டுகளில். எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால் அந்தக் காலத்திலிருந்து மைனாரிட் டிகளான கிறித்தவர்களுக்கும், இஸ்லா மியர்களுக்கும் பாடுபடக் கூடிய இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். (கைதட்டல்) அதனால் எங் களை மைனாரிட்டிகள் என்று சொல்வ தால் எங்களுக்கு ஒன்றும் கூச்சம் இல்லை, வெட்கம் இல்லை, கோபம் இல்லை, வருத்தம் இல்லை. மைனா ரிட்டிகள் என்று தாராளமாகச் சொல் லுங்கள்.

மைனர் மைனாரிட்டி மைனர் என்றால் வயதைச் சொல்லும்போது சொல்வார்கள். குறைவான ஒரு கூட் டத்தை, மைனாரிட்டி கூட்டம் என் பார்கள். ஒரு சமுதாயம், மைனாரிட்டி சமுதாயம் இஸ்லாமிய சமுதாயத்தை குறிப்பிட்டு மைனாரிட்டி சமுதாயம் என்றால், நான் ஏற்றுக் கொள்ளுகின் றேன் அந்தச் சமுதாயத்திற்காக தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இயக் கம் தந்தை பெரியாரால் பேரறிஞர் அண்ணாவால் வளர்க்கப்பட்டு எங் களால் இன்று தொடரப்படுகின்ற இயக் கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

இன்றைக்குக் கூட நான் சொன்னேனே அந்தப் பத்திரிகை தேசிய முரசு காங்கிரஸ் ஏடு அதிலே ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. எங்களுக் கும் காங்கிரசுக்கும் உள்ள கூட்டணியின் காரணமாக அந்தக் கருத்து, மிகச் சிலாக்கியமான கருத்து என்று எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் கோபண்ணா, காங்கிரஸ் கட்சியிலே இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் கூட் டணியிலே இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அந்த ஏட்டில் சொல்லு கிறார்கள் உலகிலேயே இந்தோனேசியா விற்கு அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியா.

இந்தியாவில் சுமார் 15 கோடி முஸ்லிம்கள் உள்ளார்கள். இந் தியாவில் அரசு தனியார் துறைகளில், பணி செய்வோரில் முஸ்லிம்களின் சத விகிதம் மிகக் குறைவாக இருப்பதற்குக் காரணம், இஸ்லாமியர்களுக்கு படிப் பறிவு அதிகமாக இல்லாதது தான். படிப் பறிவு இல்லாததால் அவர்களுக்கு பணி கள் அதிகம் கிடைக்கவில்லை என்று வாதத்தைத் தொடங்கி மொத்தம் உள்ள 15 கோடி முஸ்லிம்கள், 100 கோடி இந்தியர்களில் 15 கோடி முஸ்லிம்களில் 4 கோடி பேர் மட்டுமே படித் திருக் கிறார்கள்.

6 வயது முதல் 14 வயது வரை உள்ள முஸ்லீம் சிறுவர்களில் 25 விழுக் காடு பள்ளிக் கூடமே போகாமல் உள் ளனர். முஸ்லிம்கள் அதிகம் வாழும் 12 மாநிலங்களில் எல்லா நிலைகளிலும் சேர்ந்து அரசுப் பணிகளில் 6 விழுக்காடு முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர். அய்.ஏ.எஸ். பதவியில் உள்ளோர் மொத்தம் இந்தியாவில் 4790 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் முஸ்லிம்கள் வெறும் 108 பேர் தான் இருக்கிறார்கள் என்று தேசிய முரசு எழுதியிருக்கிறது.

நான் இப்போது சொல்கிறேன் முஸ்லிம்கள் 4000 பேர் இருக்கிற இடத்தில் ஆயிரம் பேர் கூட இல்லாமல் 108 பேர் தான் இருக்கிறார்கள் என்றால் நான் மைனாரிட்டி சமுதாயத்திற்காக குரல் கொடுக்க வேண்டுமா, வேண்டாமா?

எங்கே குரல் கொடுத்து விடப் போகிறானோ என்று மைனாரிட்டி அரசு என்று இப்போதே ஜெயலலிதா அம்மையார் அவர்கள் வசை பாடி வருகிறார். நான் மைனாரிட்டியோ, மெஜாரிட்டியோ நாங்கள், நாங்கள் தான். திராவிட நாட்டுக் கொள்கைக்கு திராவிட சமுதாயத்தின் கொள்கைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைக்கு இவர் சொல்வது போல மைனாரிட்டியோ, மெஜாரிட்டியோ நாங்கள் தான் இந்தக் கொள்கைக்கு அத்தாரிட்டி என்பதை மாத்திரம் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீ நான் என்று ஒருமையிலே பேசுவ தாகக் கருதிக் கொள்ள வேண்டாம். ஏன் என்றால் இவர் வயது என்ன? என் வயது என்ன? எனக்கு 87 வயது. இவருக்கு 57 வயது கூட இல்லை. அதை விடக் குறைவு தான். மரியாதைக் குறைவாகப் பேசுவதாக எண்ணிக் கொள்ளாமல், சிறு வயதிலிருந்தே தெரியும் என்ற காரணத்தினால் அந்த உரிமையோடு பேசுவதாக எண்ணிக் கொள்.

அவர் வயதுக்கு 87 வயதான ஒரு முதியவனைப் பார்த்து, நான் பெரிய படிப்பாளியாக இல்லாமல் இருக்கலாம் அவரைப் போல பெரிய அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம். வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா? நான் மரியா தையைத் தேடி அலைவதாக யாரும் கருதிக் கொள்ளாதீர்.

நான் பிறந்து வளர்ந்ததே சுயமரியாதை இயக்கத்திலே தான். (கைதட்டல்) நான் என்னுடைய பிள்ளைப் பிராயத்தில் என்னுடைய குலத் தொழிலைச் செய்ய வேண்டு மென்று என்னுடைய வீட்டார் சொன்ன போது குலத் தொழிலை செய்ய வேண்டு மென்றால், இடுப்பிலே வேட்டியை எடுத்துக்கட்டிக் கொள்ள வேண்டும், தோளிலே துண்டைப் போடக் கூடாது என்ற நெறி முறைகள் எல்லாம் இருந்த காரணத்தால் நான் என் அப்பா, அம்மாவைப் பார்த்து, நான் சுயமரி யாதையோடு வாழ விரும்புகிறேன், நான் துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொள்வேனே தவிர, இடுப்பிலே கட்டிக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி, அந்தத் தொழிலே வேண்டாமென்று வந்தவன் நான். அப்படி சுயமரியாதைக் காரனாக இருந்த காரணத்தால் தான் இன்றைக்கு உங்களுக்கெல்லாம் தலை வனாக இருக்கிறேன் என்பதை மறந்து விடக் கூடாது.

நான் சுயமரியாதையை இழந்து விட் டவனாக அன்றைக்கு இருந்திருந்தால் நீங்கள் யாரோ, நான் யாரோ கோவைக்கு நான் தப்பித் தவறி வந்து ரோட்டிலே போய்க் கொண்டிருந்தால் நீங்கள் யாரும் என்னைப் பார்க்கவும் மாட்டீர்கள், நானும் உங்களோடு பேச வும் மாட்டேன்.

இன்றைக்கு நீங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்கிற அளவிற்கு தலைவனாக ஆகியிருக்கிறேன் என்றால், சுயமரியாதை உணர்வு தான். நான் பெரியாரின் பிள்ளை அண்ணாவின் தம்பி. பத்திரிகைகளில் கூட நாளைக்கு இந்தக் கூட்டத்தைப் பற்றி என்ன எழுதுவார்கள் என்று தெரியும். என்ன எழுதினார்கள்? கருணாநிதி கோவைக்கு வந்தால் வழக்கமாக பேசுகின்ற இடம் சிவானந்தா காலனி 100 அடி சாலை. அங்கே தான் எப்போதும் பேசுவார். திடீரென்று இடத்தை மாற்றிக் கொண்டு, வ.உ.சி. பூங்காவிற்கு வந்தத தற்கு காரணம் என்ன? நான் கோவையிலே இந்தப் பத் திரிகைக்காரர்கள் பிறக்காததற்கு முன்பே கூட்டம் பேசியவன். (கைதட்டல்) ஒரு வேளை இவர்கள் பிறந்து பாலாடையில் பால் குடித்துக் கொண்டிருந்தார்களோ என்னவோ? அப்பவே கூட்டம் பேசி னேன்.

இன்னும் சொல்லப் போனால் கோவையில் வ.உ.சி. மைதானத்திலே கூட்டம் போட எல்லா கட்சிகளும் பயந்த போது பிரதமர் ராஜிவ் காந்தி ஒருவர் தான் இந்த மேடையிலே பேசினார் இதற்கு அப்போதே 5000 ரூபாய் வாடகை என்று சொன்னார்கள் இந்த மேடையிலே முதன் முதலாகப் பேசியவன் இந்தக் கருணாநிதி தான். (கைதட்டல்) அதற்குப் பிறகு பல முறை இந்த மேடையிலே நான் பேசி யிருக் கிறேன்.

இன்றைக்கும் பேசுகிறேன். நான் சிவானந்தா காலனியில் தான் பேசுவேன், ஏனென்றால் அந்த அம்மையாருக்குப் பயந்து கொண்டு கூட்டம் சேருமோ, சேராதோ என்று பயந்து கொண்டு அவர் வ.உ.சி. மைதானத்திற்கே வர மாட் டார் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏன்? வ.உ.சி. எனக்கு பிடிக்காதா? வ.உ.சி. இழுத்த செக்கை அது எங்கே இருக்கிறது என்றுகூட தேடாமல் விட்டுவிட்டார் கள்.

நான் ஆட்சிக்கு வந்த பிறகு அதைத் தேடிப்பிடித்து கோயம்புத்தூர் சிறைச் சாலையிலே இருந்த செக்கை இழுத்து வந்து கிண்டியிலே கண்காட்சியில் வைத்தது நான்தான். நீ என்னைப்பார்த்து மைனாரிட்டி என்று சொல்லுகிறாய். நான் அதைப் பற்றிக் கவலைப்பட வில்லை. கவலைப்பட வேண்டியது நீங்கள் தான். எங்களைப்பார்த்தா மைனா ரிட்டி என்கிறாய். கருணாநிதியை இவ் வளவுப்பேர் ஆதரிக்கும் போது கழ கத்தை ஆதரிக்கும்போது எங்களைப் பார்த்தா மைனாரிட்டி என்கிறாய், பார்! பார்! நாங்கள் மெஜாரிட்டி ஆகிக் காட்டுகிறோம்.

எங்களுடைய மெஜா ரிட்டியிலே நீ எங்கே போய் விழுவாய் என்று தெரியாது என்று அம்மையா ருக்கு பாடம் போதிக்கின்ற வகையிலே இந்த கூட்டத்திலே இருக்கின்ற உண் மைத் தமிழர்கள், உண்மையான திரா விடர்கள், சூளுரை மேற்கொண்டு அதை நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக் கொண்டு மீண்டும் மீண்டும் உங்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு ஏற்படும் என்ற நம்பிக்கையோடு விடை பெறு கிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர் கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment