கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, August 4, 2010

சமுதாயத்தில் ஏற்பட்ட புரட்சி:ஸ்டாலின் பேச்சு


கோவையில் அவினாசி ரோட்டில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே 380 கோடி செலவில் டைடல் பார்க்அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கருணாநிதி இந்த பூங்காவை திறந்து வைத்தார்.

துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மத்திய தொலை தொடர்புத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை மந்திரி ராசா, அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, பூங்கோதை, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்டாலின் பேசும்போது, ‘’ கோயம்புத்தூரில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா தமிழக முதல்வர் தலைவர் கலைஞரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப பூங்காவைப் பற்றி இதனுடைய நன்மைகள் இந்த நாட்டினுடைய வளர்ச்சி மட்டுமல்ல இந்த சமூதாயத்தில் ஏற்படக்கூடிய புரட்சி இவற்றை அத்தனையும் உரையாற்றி இருக்கக்கூடிய பலர் உங்களிடத்திலே குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள்.

இன்றைக்கு இந்தியாவிலே ஒரு சிறந்த தொழில் நகரங்களின் ஒன்றாக விளங்கிகொண்டிருக்கக்கூடிய ஒரு சிறப்பிற்குரிய நகரமாக விளங்கிக்கொண்டிருக்கக் கூடிய நகரம்தான் இந்த கோவை மாநகரம் என்பதை யாரும் மறுத்திட மறைத்திட முடியாது. இதைவிட பெருமையோடு சொல்லவேண்டும் என்றால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு சிறப்பிற்குரிய புகழைப்பெற்ற மாநகரமாக இந்த கோவை மாநகரம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

ஆக அப்படிப்பட்ட இந்த கோவைக்கு இன்னும் பெருமை சேர்க்கக்கூடிய வகையிலே இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் இங்கே அமைந்திருக்கிறது.

அதனுடைய திறப்பு விழா நிகழ்ச்சி இன்றைக்கு எல்லோரும் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆக இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவைப் பொறுத்தவரையில் 2007 ஆம் ஆண்டு நம்முடைய தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள்தான் இதற்குரிய அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி வைத்தார்கள்.

இப்பொழுது அதனுடைய திறப்பு விழா நிகழ்ச்சியையும் ஏறக்குறைய ரூபாய் 380 கோடி மதிப்பீட்டிலே உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த பூங்காவை நம்முடைய முதல்வர் அவர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே தமிழகத்திலே தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பில் இருந்த இந்த காலகட்டத்திலே தான் 2000 ஆம் ஆண்டுலே முதன் முதலில் தமிழகத்திலே முதல் தகவல் தொழில் நுட்ப பூங்கா தரமணி டைடல் பூங்கா என்கிற இந்த பூங்கா அன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டது. அப்படி தொடங்கி வைக்கப்பட்ட காரணத்தால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறக்கூடிய ஒரு சூழ்நிலையை பெற்றார்கள்.

இன்னும் திறமையோடு சொல்லவேண்டும் என்று சொன்னால் சென்னைக்கு அருகில் அமைந்திருக்கக் கூடிய தரமணி டைடல் பூங்காவை பொறுத்தவரையில் தொடர்ந்து 10 ஆண்டுகாலமாக லாபத்தை ஈட்டக்கூடிய வகையிலே அந்த பூங்கா இன்றைக்கு சிறப்பு பெற்றுவந்து கொண்டிருக்கிறது என்பதை நான் இங்கு மகிழ்ச்சியோடு குறிப்பிட்டுகாட்ட விரும்புகிறேன்.


அதனைத் தொடர்ந்துதான் நம்முடைய தமிழகத்திலே முக்கிய நகரங்களாக விளங்கிக்கொண்டிருக்கக்கூடிய கோவை, திருச்சி, சேலம், மதுரை, நெல்லை போன்ற மாநகரங்களில் இப்படிப்பட்ட பூங்காக்கள் உருவாக்க வேண்டும் என்று நம்முடைய தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் முடிவு எடுத்து அந்த வகையிலே இன்றைக்கு அந்த தொழிற்சாலைகள் எல்லாம் சிறப்பு பொருளாதார மண்டலங்களாக இன்றைக்கு உருவாக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவையை பொறுத்த வரையிலே ஜவுளி உற்பத்தி, நுhல் உற்பத்தி, மோட்டார் பம்புகள் தயாரிக்கப்படும் அந்த தொழிற்சாலைகள் ஆனாலும் சரி, கனரக, லகுரக எந்திர உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யக்கூடிய அந்த தொழிற்சாலைகள் ஆனாலும் சரி அல்லது வேளாண்மை வணிகத்துறை வர்த்தக சம்மந்தமான அந்த தொழிலாக இருந்தாலும் சரி, இப்படி பல்வேறு தொழில்கள் மூலமாக இந்த கோவை பல சிறப்புகளை தொடர்ந்து பெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக சமீபகாலமாக மின்ணணு துறையிலும் இந்த கோவை ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வந்து கொண்டிருக்கிறது. நான் ஆதாரத்தோடு குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 5 மின்ணணு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இந்த கோவையிலே அமைந்திருக்கிறது.

அதன்மூலமாக 2008 – 2009 ஆம் ஆண்டு ஏறக்குறைய 260 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு அந்த சிறப்பை அவைகள் பெற்றிருக்கிறது. எனவே இன்று துவக்கி வைக்கப்படக்கூடிய இந்த கோவை டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவை பொறுத்த வரையிலே எல்காட் நிறுவனம், டிட்கோ, சிப்காட், சிட்கோ, டைடல் பூங்கா மற்ற எஸ்.டி.பி.ஐ. இவைகள் ஒன்று சேர்ந்து இணைந்து 380 கோடி ரூபாய் மதிப்பீட்டிலே இந்த பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படி உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த பூங்காவின் மூலமாக ஏறக்குறைய 12000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது.


அதுமட்டுமல்ல 2000 தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், சார்பு பணியாளர்களுக்கும் வேலைவாய்ப்பு இந்த பூங்காவின் மூலமாக வழங்கப்பட இருக்கிறது. ஆகவே தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சியை பொறுத்தவரையிலே இன்றைக்கு இந்தியாவிலேயே இருக்கக்கூடிய மாநிலங்களையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கிறபோது நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு ஒரு முன்னிலை பெற்ற மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் நான் இந்த நேரத்திலே பெருமையோடு உங்களிடத்திலே குறிப்பிட்டு காட்டி,


2001 – 2002 ஆம் ஆண்டு மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையின் மூலமாக நமக்கு கிடைத்திருக்கக்கூடிய வருவாய் எவ்வளவு என்று கேட்டால் 10.2 மில்லியன் டாலர் 2008 – 2009 ஆம் ஆண்டு அது 58.7 மில்லியன் டாலராக உயர்ந்து வரக்கூடிய 2010 இல் 73.1 மில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

அதுமட்டுமல்ல தமிழகத்திலே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை பொறுத்தவரையில் 2009 – 2010 ஆம் ஆண்டில் 8 மில்லியன் அமெரிக்கா டாலர் அதாவது சுமார் 4000 கோடி ரூபாய்க்கு தொழில் வர்த்தகத்தை செய்து ஒரு உன்னதமான இடத்தை இன்றைக்கு நாம் வகித்துவருகிறோம். ஆக இதுவே இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டினுடைய பங்கு 25 சதவீதமாக உயர வாய்ப்பிருக்கிறது.

அதற்கான முயற்சிகளிலே கலைஞர் அரசு இன்றைக்கு தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆக இப்படிப்பட்ட வளர்ச்சியை அடைவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் நம்முடைய மாநிலத்திலே உள்கட்டமைப்பு வசதி, கல்வி வசதி தரமான மனித வளம், அதையும் தாண்டி பெருமையோடு குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று சொன்னால்ம்

நம்முடைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுடைய போற்றுதலுக்குரிய வழிகாட்டுதல்தான் என்பதை நான் இந்த நேரத்திலே அழுத்தத்தோடு உறுதியோடு பெருமையோடு எடுத்துச் சொல்லி இன்னும் பல சிறப்புக்களை பெற வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான வகையிலே பயன்பட வேண்டும். தமிழ்மாநிலத்தின் வளர்ச்சி மட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய வகையிலே சிறப்புக்களை பெற வேண்டும் என்று எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.


No comments:

Post a Comment