நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது இந்த பிரச்சினை குறித்து பேசிய தம்பிதுரை (அ.தி.மு.க.), 3ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசையை ஏல முறையில் ஒதுக்கீடு செய்ததில் ரூ.70 ஆயிரம் கோடி வசூ லாகி இருப்பதன் மூலம், 2ஜி ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டை குறைந்த விலைக்கு அனுமதித்ததன் மூலம் அரசுக்கு ரூ.ஒரு லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாற்றினார்.
இந்த பிரச்சினை குறித்து விவாதம் நடத்த அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார்.
உடனே தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.இராசா குறுக்கிட்டு, பொது வாழ்க்கையில் குற்றச்சாற்றுகளும் பதில் குற்றச்சாற்றுகளும் பொதுவானதுதான் என்று உரத்த குரலில் கூறினார். தம்பி துரையின் குற்றச்சாற்றை மறுத்து ஆ.ராசா கூறியதாவது: பா.ஜனதா ஆட்சி நடைபெற்ற கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்தே 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஏல முறையில் நடைபெறவில்லை. தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரை அடிப்படையில்தான் ஒதுக்கீடு நடை பெற்றது. டிராய் அமைப்பின் சமீபத்திய பரிந்துரையில்கூட ஏல முறையை பரிந்துரைக்கவில்லை.
3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஏல நடைமுறைகள், கடந்த மே மாதம் 19 ஆம் தேதியுடன் முடிவ டைந்தது. பொதுத்துறை நிறுவனங் களான பி.எஸ்.என்.எல்., எம்.டி. என்.எல். ஆகியவற்றுக்கு அதிகபட்ச ஏலத்தொகைக்கு சமமாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்கூட்டியே ஒதுக்கீடு வழங்கப் பட்டது.
அதன்படி எம்.டி.என்.எல். நிறு வனம் டில்லி மற்றும் மும்பை 3ஜி சேவையை ஏற்கனவே தொடங்கி விட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் 463 நகரங்களில் தனது சேவையை தொடங்கி உள்ளது. ஏலத்தில் எடுத்த நிறுவனங்கள், தங்கள் சேவையை தொடங்கியதும் 3ஜி சேவை கட்ட ணமும் குறையத்தொடங்கும்.
இரண்டு அலைவரிசைகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன வென்றால், 2ஜி அலைவரிசை குரல் சேவைக்கும், 3ஜி அலைவரிசை வீடியோ மற்றும் புள்ளிவிவர பரி மாற்ற சேவைக்கும் பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு ஆ.இராசா கூறி னார். அவர் மேலும் கூறியதாவது: சேவை நிறுவனங்கள் சார்பில் செல்போன் கோபுரங்கள் அமைக் கப்படும் இடங்களை தொலைத் தொடர்பு துறையின் உரிய அனு மதியை பெற்றபின்தான் அமைக்கப் பட்டு வருகின்றன. அது தொடர் பான விதிமுறைகளை மீறியதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. இந்த கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நகரசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனு மதியை அந்த நிறுவனங்கள் பெற வேண்டும்.
சில உள்ளாட்சி அமைப்புகளி டம் இருந்து சேவை நிறுவனங்கள் விதிமுறைகளை சரிவர பின்பற்ற வில்லை என்று புகார்கள் வந்துள் ளன. இது தொடர்பாக நீதிமன்ற களில் வழக்குகள் தொடரப்பட்டுள் ளன. இந்த கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் சுகா தாரக்கேடு ஏற்படுவதாகவும் அர சுக்கு புகார்கள் வந்துள்ளன. அதைத் தடுப்பதற்காக, சர்வதேச விதிமுறை களின்படி கோபுரங்களை அமைக் கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு ஆ.இராசா கூறினார்.
No comments:
Post a Comment