இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது.
தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழி எம்.பி.பேசிய தாவது: தமிழ்நாட்டில் மீன் பிடி தொழிலில் 2 லட் சத்து 60 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். இன் றைய தினம் அவர்கள் உயிருக்கும், நன்மதிப் பிற்கும் அச்சுறுத்தல் ஏற் பட்டுள்ளது. மீனவர்கள் குடும்பத்தினர், அவர் களது எதிர்கால சந்ததி யினர் எல்லோரும், கட லுக்கு செல்லும் மீன வர்கள் தாக்கப்படுவதால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி யிருக்கிறார்கள். குழம்பிய குட்டை யில் மீன்பிடிப்பது என்று ஒரு பழ மொழியை கேள்விப்பட்டிருக் கிறோம். ஆனால் இங்கு நம்மில் சிலர் இந்த சூழ்நிலையின் கோரத்தை புரியாமல், மீனவர்கள் மீது இழைக் கப்படும் தாக்குதலால் பலர் காயமடைந்து, அவர்களது குடும்பத்தி னர் எல்லாம் சீரழிந்து கொண்டிருக்கும் நிலை யில், இந்த விவாதத்தில் இருந்து அரசியல் லாபம் காண விரும்புகிறார்கள். குற்றம் சாட்டுவதிலே அவர்கள் குறியாக இருக் கிறார்கள் என்பது மிக வும் வருத்தமளிக்கிறது. (அப்போது கனி மொழிக்கும் அ,தி.மு.க. உறுப்பினர் மைத்ரேய னுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது) நான், ராஜா முன்பு பேசிய பேச்சை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சில மாதங்களுக்கு முன்பு அவர் தெளிவாகச் சொன்னார். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக் கூடாது என்று தமிழக அரசு ஆட்சேபித்தது. சட்டசபையில் தீர்மா னமும் நிறைவேற்றப் பட்டது. ஆனால், மாநில அரசைப் பொருத்த மட்டில் எல்லோருக்கும் சில சங்கடங்கள் இருக் கின்றன. இந்த நாட்டைப் பொருத்தமட்டில் மத்திய அரசு எடுக்கும் முடிவு தான் எல்லாம். நாமெல் லாம் அதன்படிதான் நடக்க வேண்டியுள்ளது. நான், கடந்த பல ஆண்டுகளாக பத்திரி கைகள் படிப்பதை வழக் கமாக கொண்டிருக் கிறேன். இலங்கையிலோ அல்லது நமது கடல் பகுதியிலோ இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டோ, பாதிக்கப்பட்டோ வாடும் நமது மீனவர் களைக் காப்பாற்ற எந்த கடற்படையும் தமிழக கடற்பகுதியில் இருந்து ஜான்சிராணி யாரும் இலங்கைக்கு அனுப்பிய தாக எனது நினைவில் இல்லை. (அ.தி.மு.க. உறுப் பினர் டாக்டர் மைத் ரேயன் வெளியிட்ட ஒரு கருத்துக்கு பதில் அளித்து பேசுகையில் கவிஞர் கனிமொழி எம்.பி. மேற் கண்டவாறு குறிப்பிட் டார்). ஒவ்வொரு நேரத்தி லும் ஒரு சம்பவம் நடக் கும் போது, நமது மீன வர்கள் தாக்கப்பட்டும், காயப்பட்டும், கொல் லப்பட்டும் வருகி றார் கள். பல நேரங்களில் பிணமாகத்தான் திரும்பு கிறார்கள். ஆனால், இலங்கை அரசு பல நேரங்களில் அவர்க ளுக்கு எதிரான குற்றச் சாற்றுகளை மறுக்கிறது. இலங்கை அமைச்சராக இருந்தாலும் சரி, செய்தித் தொடர்பா ளராக இருந்தாலும் சரி, இதுபோன்ற குற்றச் சாட்டு இந்தியாஇலங் கைக்கு இடையேயான நல்லெண்ணத்தை குலைக்கும் சதி என்று கூறுகிறார்கள். இதே கதையைத்தான் ஒவ்வொரு தடவையும் திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள். நாம் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென் றால், நமது மீனவர்களை இலங்கை படையினர் தாக்கவில்லை என்றால், யார் அதைச் செய்கிறார் கள்? நம் மீனவர்கள் என்ன, அவர்களுக்குள்ளே ஒருவருக்கு ஒருவர் சுட் டுக் கொள்கிறார்களா? யார் இதை செய்கி றார்கள்? நம்மிடம் செயற்கைகோள் இருக் கிறது. அதை வைத்து நமது மீனவர்களை தாக் கும் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். நமது மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் பல சமயங்களில் நடந் துள்ளது. செல்லப்பன் என்ற மீனவர் தாக்குத லுக்கு ஆளாகி இறந்தார். ஒரு சமயம், மகனை இழந்த தாய் ஒருவரை சந்தித்தேன். 17 ஆண்டு களாக அவர் மகனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது போன்ற சம்பவங்கள் நம்மை பெரிதும் கவலை யடையச் செய்கிறது. சென்னையில் மீனவ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தை பள்ளி யில் படிக்கிறது. அந்தக் குழந்தையின் அப்பா, சித் தப்பா, சகோதரர் ஆகி யோர் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டனர். இது போல பல குடும் பங்கள் பாதிப்பிற்கு ஆளாகி யுள்ளன. இதற்கு நாம் இதுவரை தீர்வு எதையும் காணவில்லை. இலங்கை மீனவர்கள் அவர்கள் எல்லையை தாண்டி, நமது எல் லைக்கு வரும் போது கைது செய்து, விசாரணை மட்டும் செய்கிறார்கள். பின்னர் பத்திரமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு சில நேரங் களைத் தவிர, நமது மீனவர்கள் இதுபோல திருப்பி அனுப்பப்படு வதில்லை. ஏன் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக் கின்றன? தமிழக மீனவர் களின் துயரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க மத்திய அரசு உண்மையிலே என்ன நடவடிக்கை எடுத் திருக்கிறது?. இவ்வாறு கவிஞர் கனிமொழி எம்.பி. பேசினார். |
திமுக எம்பி சிவா பேசும்போது, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய நாட்டுக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்குகின்றனர் என்றால், இந்த அரசு தமிழக மீனவர்களுக்கு என்ன பாதுகாப்பு தருகிறது என்றுதான் கேள்வி எழுகிறது.
இந்தியாவும் இலங்கையும் கண்ணுக்குத் தெரியாத எல்லைக்கோடு பிரிப்பதாக சொல்கிறீர்களே, அந்த எல்லைக்கோடு இரு நாடுகளின் எல்லையை பிரிக்கிறதா? அல்லது தமிழக மீனவர்களின் வாழ்வையும் சாவையும் பிரிக்கிறதா? தயவு செய்து சொல்லுங்கள். தொடர்ந்து நீடிக்கிற இந்த அவலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். என் வேண்டுகோள் அதுதான்.
இது இந்திய அரசுக்கு உட்பட்ட ஒரு பிரச்சனை என்பதால்தான் நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து மன்றாடுகிறோம். தமிழக அரசு தீர்ப்பதாக இருந்திருந்தால், எங்கள் ஆற்றல் மிக்க முதல்வர் கருணாநிதி என்றைக்கோ இந்த பிரச்சனையை முடித்து வைத்திருப்பதார் என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் பேசுகை
இதேபோல் பாஜக உறுப்பினர்கள் வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா ஆகியோரும், தமிழக மீனவர்களை பாதுகாப்பது குறித்து வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment