
ஈழத்திற்கு இந்திய அர சின் சார்பில் பிரதிநிதி அனுப்பி வைக்கப்பட உள்ளார் என்ற தகவலை மத்திய உள்துறை அமைச் சர் தமிழ்நாடு முதல மைச்சரிடம் தெரிவித் துள்ளார். இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர் களில் ஒரு பகுதியினர் இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள் ளனர். போர் முடிந்ததும் அவர்கள் சொந்த இடங் களில் குடியமர்த்தப்படு வார்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அறி வித்து இருந்தார். ஆனால் அதன்படி நடக்க வில்லை. சமீபத்தில் சென் னைக்கு வந்த இலங்கை தமிழ் எம்.பி.க்கள் முதல மைச்சர் கலைஞரைச் சந் தித்து இலங்கை தமிழர் களின் நிலைமையை விளக்கினார்கள். முகாம் களில் அடைப்பட்டு கிடக்கும் தமிழர்களை சொந்த இடங்களுக்கு இலங்கை அரசு அனுப்ப வில்லை. அதற்கு பதி லாக தமிழர்கள் வசிக் கும் பகுதிகளில் சிங்க ளர்களை குடியமர்த்தி வருகிறது என்று தெரி வித்தனர். இதையடுத்து முதல மைச்சர் கலைஞர், பிர தமர் மன்மோகன் சிங் குக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி மறுவாழ்வு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தி இருந்தார். கலை ஞரின் கோரிக்கையை ஏற்று விரைவில் ஒரு சிறப்பு பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார். இந்த நிலை யில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் 01.08.2010 அன்று காலை 9.30 மணிக்கு கோபாலபுரம் சென்று முதலமைச்சர் கலைஞ ரைச் சந்தித்தார். முதல மைச்சரிடம் ஒரு நல்ல செய்தி சொல்ல வந்தேன். இலங்கையில் போரி னால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியில் மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆய்வு செய்ய இந்திய வெளியுறவுத் துறையில் இருந்து ஓர் அதிகாரி விரைவில் வரும் வாரத் திலேயே இலங்கை செல்ல இருக்கிறார். அங்கு தமி ழர் பகுதியில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்ய வும் மத்திய அரசு அங் குள்ள தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுக்க இருக்கும் பணிகள் எந்த அளவுக்கு நடந்து இருக் கிறது என்பதையும் அதி காரி கண்டறிவார். |
No comments:
Post a Comment