கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 8, 2010

தண்ணீர் தர மறுக்கிறீர்களே! - கேரள அரசுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி


டில்லி மாநிலங்களவையில் கலப்படம் தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது மாநிலங்கள வைத் தலைவர் இருக்கையில் துணைத் தலைவர் பேராசிரியர் பி.ஜே.குரியன் அமர்ந்திருந்தார். இந்த விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:

ஆக்டோசின் என்ற ரசாயன பொருள் மனித ஆரோக்கியத் திற்கு கேடு விளைவிக்கிறது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் கூறுகிறார். ஆனால், நான் உறுதியாக கூறுகிறேன். பெண்கள் பிரசவத்தின்போது வலியை ஏற்படுத்துவதற்காக பயன் படுத்தப்படும் இது, குழந்தை களுக்கோ அல்லது மற்றவர் களுக்கோ தொடர்ந்து கொடுத் தால் நிச்சயமாக பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.

கால்சியம் கார்பைடு, ஆக்சி டோசின், காப்பர் சல்பேட் போன்ற ரசாயனப் பொருள்கள் காய்கறி, பழங்களுக்கு நிறங்களை கொடுப்பதற்காக பயன்படுத்தப் படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை உடனடியாக காண முடியாது. காலப்போக்கில் மனித உடலில் இது மோசமான விளைவு களை ஏற்படுத்தும்.

இப்போதெல்லாம் புற்றுநோய் அதிகமாக வருகிறது. நாம் உட்கொள்ளும் கலப்படப் பொருட்களால்தான் புற்றுநோய் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மரணத்தை விளைவிக்கும் இதுபோன்ற காரணங்கள் என்ன?, எது எது கலப்பட பொருள் என்பதை நாம் எப்படி கண்டுபிடிக்கப் போகி றோம்?, இதற்காக என்னென்ன அமைப்புகள் இருக்கிறது?, கலப்பட பொருட்கள் குறித்து ஏதாவது ஆய்வு நடந்திருக்கிறதா?.

எல்லோரும் காய்கறிகளை பற்றியே கவலைப்படுகிறோம். கோழி மற்றும் கால்நடைகளை பொறுத்த மட்டில் கால்நடை களுக்கும் ஊசிகளை போடுகி றார்கள். அது எல்லோருக்கும் மோசமான விளைவுகளை ஏற் படுத்துகிறது. இதுகுறித்து ஏதா வது ஆய்வுகள் நடந்தது உண்டா?. மனித உடலுக்கு கேடு விளை விக்கும் என்ற வகையில் எது எது அனுமதிக்கப்பட்டுள்ளது?, எது எது அனுமதிக்கப்பட வில்லை? என்று ஏதாவது கட்டுப்பாடுகள் உண்டா?.

கலப்படத்திற்கு குறைந்தபட்ச தண்டனை 6 மாதம் சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் என்கிறார். இது மரணத்தையோ அல்லது கடுமையான உடல் நலக்கேட்டையோ விளைவித்தால் அபராதம் ரூ.5 ஆயிரம் வரை போகும். விலைவாசி உயர்வு பற்றி நாம் பேசுகிறோம். ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என்றால் என்ன வந்துவிடப்போகிறது.

எனவே, கலப்படத்திற்கான அபராதத்தை கடுமையாக்க வேண்டும். அது கேலிக்கூத்தாகி விடக் கூடாது. மக்களால் மிக எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இப்போதெல்லாம் ஒரு மாநிலத்தில் விளையும் காய்கறி என்றாலும் சரி, பழங்கள் என்றா லும் சரி, உணவு தானியங்கள் என்றாலும் சரி, அடுத்த மாநிலத் திற்கு அனுப்பப்படுகிறது.

இமாச்சலப்பிரதேசத்தில் உற் பத்தி செய்யப்படும் பொருள்கள் கன்னியாகுமரியில் வாங்கப் படுகின்றன.

துணைத் தலைவர் அவர்களே உங்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாடு கேரளாவுக்கு நிறைய காய்கறிகளை அனுப்புகிறது. துணைத்தலைவர் பி.ஜே.குரியன் (இடைமறித்து): ஆமாம் தமிழ் நாடு கேரளாவுக்கு காய்கறிகளை அனுப்புகிறது. அதற்காக உங்க ளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக் கிறோம்''.

கனிமொழி (தொடர்ந்து): ஆனாலும் நீங்கள் எங்களுக்கு தண்ணீர் தரமாட்டேன் என்கி றீர்கள்''.

(இந்த நேரத்தில் பல உறுப்பி னர்கள் இடைமறித்து பேசினர்). நாங்கள் தொடர்ந்து அதை செய்வோம்''. துணை தலைவர் (இடைமறித்து): ஆமாம் ஆமாம் நாங்கள் மிக மகிழ்ச்சியோடு கொடுக்கிறோம்''.

கனிமொழி (தொடர்ந்து): மாநில அரசாங்கத் திற்குத்தான் கலப்படத்தை கட்டுப் படுத்தும் பொறுப்பு இருக்கிறது என்று கூறிவிட முடியாது. மத்திய அரசும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை மாநில அரசு மேல் சுமத்திவிடக்கூடாது.''

மேற்கண்டவாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

No comments:

Post a Comment