கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 12, 2010

கன்னியாகுமரி மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் இல்லை - ஜெ புகாருக்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில்


அமைச்சர் எம்.ஆர்.கே. பன் னீர்செல்வம் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கன்னியா குமரி மாவட்டத்தில் ஏதோ மர்ம காய்ச்சல் பரவியிருப் பதாக ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பது போல அங்கே எந்தவிதமான மர்மக் காய்ச்சலும் இல் லை. எதையாவது அன்றா டம் அறிக்கை என்ற பெய ரால் எழுதி, நாளிதழ் களிலே வெளியிடச் செய்கி றார். பருவநிலை மாற்றத் தால் மக்களுக்கு சாதாரண காய்ச்சல் அவ்வப்போது ஏற்படுகிறது.

அதனை உடனுக்குடன் குணப்படுத்த சிகிச்சைப் பணிகள் துரிதமாக நடை பெறுகின்றன.அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகா தார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளி லும் சாதாரணக் காய்ச்சல் கண்டவர்களுக்குக் கூட உடனடி பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

மலேரி யா காய்ச்சல் என சந்தேகித் தால் அதற்கான பரிசோத னையும் செய்யப்படுகிறது. நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைகளில் நோய் களுக்குப் பரிசோதனை செய்யும் வசதிகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத் தில் ஏற்கெனவே வந்த பன்றிக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக் கப்பட்டு வருகிறது. நோயாளிகள் இருபது நாட்கள் வரை காத்திருக் கிறார்கள் என்று ஜெய லலிதா தெரிவித் திருப்பது தவறான தகவலாகும்.

கன் னியாகுமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் சிகிச் சைக்குத் தேவையான மருந்துகள் போதிய அள வில் அனைத்து அரசு மருத் துவமனைகளிலும் இருப் பில் வைக்கப்பட் டுள்ளன. கன்னியாகுமரி மருத் துவ மனையில் எம்.ஆர். அய். ஸ்கேன் தேவைப்ப டுபவர்களுக்கு பக்கத்தில் திருநெல்வேலி மருத்துவ மனையில் ஸ்கேன் எடுக்கப் படுகிறது. அய்ந்தாண்டு காலம் ஆட்சி செய்த ஜெய லலிதாவின் ஆட்சியில் ஒரு எம்.ஆர்.அய். ஸ்கேன் கூட வாங்கப்படவில்லை. இவர்தான் கன்னியாகுமரி மருத்துவமனையில் எம்.ஆர்.அய். மருத்துவ வசதி இல்லை என்று இன்று குறை சொல்லு கிறார்.

அ.தி.மு.க. ஆட்சி முடிவடையும் தருவாயில் கன்னியா குமரி மாவட் டத்தில் ஆயுர் வேத மருத் துவக்கல்லூரியைத் தொடங்க ஓர் அரசாணை யை 23.01.2006 அன்று ஜெயலலிதாவால் வெளி யிடப்பட்டது. ஆனால் இந்த ஆயுர் வேத மருத்துவக் கல்லூரி யைத் தொடங்க டாக்டர் கலைஞர் அவர்கள் தலை மையிலான அரசு தான் தொடர் நடவடிக்கை எடுத்தது.

இக்கல்லூரியில் 100 உள்நோயாளிகள் கொண்ட படுக்கை வசதி யுடன் அனைத்து ரத்தப் பரிசோதனைக்கூடம், பஞ்சகர்மா மருத்துவப் பிரிவு வசதிகள் உள்ளன. மேலும் இம்மருத்துவ மனைக்கு வரும் உள் நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்குச் சிறப்பான வகையில் அனைத்து வித ஆயுர்வேத சிகிச்சைகளும் வழங்கப் பட்டு வருகின்றன. மருத் துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை என்றெல் லாம் ஜெயலலிதா தனது அறிக்கையிலே புலம்பி யிருக்கிறார்.

தி.மு.கழக ஆட்சி பொறுப்பேற்ற பின்னரே பணியாளர்கள் எல்லா மருத்துவமனை யிலும் நிரப்பப் பட்டுள் ளனர். கடந்த நான்காண்டு களில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளனர். இதுவரை 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மருத்து வர்களும், 11,941 செவிலியர் களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

முதலமைச்சர் கலை ஞரின் ஆட்சியில் அவசர ஆம்புலன்ஸ் 108 சேவைத் திட்டம், கலைஞர் காப் பீட்டுத் திட்டம், இளம் சிறார் பாதுகாப்புத் திட்டம், பள்ளிச்சிறார் கண்ணொளிப் பாது காப்புத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை செயல்படுத்தி, இந்திய அளவில் சிறந்த மாநில மாகத் தமிழகம் விளங்கி வருகிறது.

இதனை பொறுக்க முடியாமல் ஜெயலலிதா ஆர்ப்பாட் டம் நடத்தப் போவதாக அறிக்கை விடுத்துள்ளார். அதற்கு கன்னியாகுமரி மாவட்ட மக்களே நல்ல பாடம் கற்பிப்பார்கள். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment