கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

மாற்றுத் திறனாளிகளுக்கு தி.மு.க அரசின் உதவிகள் - முதல்வர் கலைஞர் விளக்கம்


தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்காக தி.மு.க. அரசு செய்த உதவிகளை பட்டிய லிட்டுக் காட்டியுள்ளார் முதலமைச்சர் கலைஞர்.

இரு குறித்து முரசொலியில் முதலமைச்சர் எழுதியி ருப்பதாவது:

கேள்வி: மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், வாரியக் கூட் டங்கள் நடத்தப்பட வில்லை என்றும் ஒரு சில தலைவர்கள் என் போர் அறிக்கை விடுத் துள்ளார்களே?.

பதில்: இன்றைய தினம் மாற்றுத்திறனாளி கள் தினம். என்னை நேரில் சந்தித்து வாழ்த் துத் தெரிவிக்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் சார்பில் பலரும் என்னி டம் நேரம் கேட்டு, அவர்களையெல்லாம் கோட்டையில் சந்திப் பதாகக் கூறியிருக் கிறேன். நேரில் சந்திக்க இயலாத மாற்றுத் திற னாளிகள் அனைவருக் கும் இந்த நாளில் என் னுடைய வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகளுக்காக தி.மு.க. அரசு என்ன செய்தது என்பதை அந்த அரசியல் தலைவர் களுக்கு இந்த நேரத்தில் எடுத்துக் கூறிட விரும்பு கிறேன்.

காது கேளாதவராய் - கண் தெரியாதவராய் - வாய் பேச முடியாத வராய் - கைகால்களைப் பயன்படுத்த இயலாத வராய் - மன நோயாளி யாய் இருந்தவர்களை யெல்லாம் ஊனமுற் றோர் என்று அழைப் பதற்குப் பதிலாக - அவர்களின் ஓர் அவயம் செயல்பாட்டுக் குறை யால் பாதிக்கப்பட்டா லும், அவர்களின் மற் றைய திறன் மேலும் சிறப்புறுகிறது என்ற அடிப்படையில் அவர் களை "மாற்றுத் திறனா ளிகள்'' என்று அழைக் கின்ற முறை 2007-ஆம் ஆண்டு அய்க்கிய நாடு கள் சபையில் விவாதிக் கப்பட்டதை மனதிலே கொண்டு தமிழகத்திலே இனி "ஊனமுற்றோர்'' என்று அழைக்கக் கூடாது, அவர்களை "மாற்றுத் திறனாளிகள்'' என்றுதான் அழைக்க வேண்டுமென்று முடி வெடுத்து அறிவித்ததே தி.மு.க அரசுதான்.

2010-11 நிதி நிலை அறிக்கை

2010-2011 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக் கையில், மாற்றுத் திற னாளிகளுக்கான தனித் துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என்று அறி விக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் பிறப்பிக் கப்பட்டது. 27-3-2010 அன்று மாற்றுத் திற னாளிகள் நலத்துறை'' தலைமைச் செயலகத் தில் ஒரு மூத்த அதிகாரி சோ.சு.ஜவஹர் தலைமை யில் உருவாகி திறமை யாகச் செயல்பட்டு வரு கிறது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2005 ஆம் ஆண்டில் சுமார் 30 கோடி ரூபாய் அளவில் தான் இந்தத் துறைக்காக நிதி ஒதுக்கப்பட்டது என்பதற்கு மாறாக கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 2010-2011 இல் 113 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டது என்பதிலி ருந்தே மாற்றுத் திற னாளிகளிடம் இந்த அரசு எந்த அளவிற்கு ஈடுபாடு கொண்டுள் ளது என்பதை தற்போது அறிக்கை விடுவோர் புரிந்துகொள்ளலாம்.

60 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மன வளர்ச்சி குன்றியோ ருக்கு மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் உதவித் தொகையாக அளிக்கும் திட்டத்தின்கீழ் கடந்த மூன்றாண்டுகளில் 90,609 பயனாளிகளுக்கு 51 கோடியே 85 லட்சம் ரூபாய் பராமரிப்பு உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியிலே தான் 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாற்றுத் திற னாளிகள் நல வாரியம் அமைக்க சட்டம் இயற் றப்பட்டது. இந்த வாரி யத்தில் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினர்க ளாகச் சேர்ந்துள்ளனர். இந்த வாரியக் கூட்டங் கள் ஒன்றுகூட நடை பெறவில்லை என்று மற்றுமொரு பிரகஸ் பதி'' தன் அறிக்கை யிலே தெரிவித்துள் ளார்.

நலவாரிய கூட்டங்கள்

இதுவரை நல வாரியக் கூட்டங்கள் 9 முறை நடைபெற்றுள் ளது. மொத்தம் 4904 பேருக்கு நலவாரியத் தின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் 261 லட்ச ரூபாய் நிதி உதவி, மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாரிய உறுப்பினர் களுக்கு பின்வரும் சலு கைகள் வழங்கப்படு கின்றன. விபத்து நேரிட் டால் ஏற்படும் இழப் பிற்கான உதவித் தொகை அதிகப்பட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளி கள் மகன் அல்லது மகள் ஆகியோரின் பயி லும் கல்விக்கு ஏற்ற வாறு உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் இயற்கை மரணமடைந் தால் வாரிசுதாரருக்கு 15 ஆயிரம் ரூபாயும், ஈமச் சடங்கிற்காக உதவித் தொகை 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படு கிறது.

வேலைவாய்ப்புகளில் 3 சதவிகிதம் என்று ஆணையிருந்தும், அமலாக்கப்படவில்லை என்று குறை கூறப்படு கிறது. வேலைவாய்ப்பு களில் மாற்றுத் திறனா ளிகளுக்கு 3 சதவிகித இடஒதுக்கீட்டினை வழங்கும் கொள் கையை இந்த அரசு முக்கியமாக கருது கிறது என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கென கண்டறியப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள அனைத்துக் காலிப் பணி இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளை நியமிக்க சிறப்பு நியமன நடவடிக் கைகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது என்றும் இந்த ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பிலே பக்கம் 3-இல் குறிப்பிடப்பட்டுள் ளது.

பக்கம் 17-இல், "அரசுத் துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங் களில் மாற்றுத் திற னாளிகளுக்கான 3 சதவிகித பணி இடங் களை நிரப்பும்போது, மத்திய அரசு கடைப் பிடிக்கும் இடச்சுழற்சி முறையினை இம்மா நிலம் பின்பற்றுகிறது. மேலும் மாற்றுத் திற னாளிகளுக்கெனக் கண்டறியப்பட்ட பணி இடங்கள், தக்க மாற் றுத்திறனாளிகள் அந்த ஆண்டில் இல்லாதபட் சத்தில், அப்பணி இடங் களை 3 ஆண்டுகள் முன்கொணர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

3 சதவிகிதம்

மாற்றுத் திறனாளிக ளுக்காக அரசுத் துறை களில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டினைக் கண் காணிக்கும் பொருட்டு ஓர் உயர் மட்டக் குழு அமைக் கப்பட்டுள்ளது'' என்று வெளியிடப்பட் டுள்ளது. பேரவையிலே கூறியவாறே, இந்த உயர் மட்டக்குழு சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைக்கப்பட்டு மாற் றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பினை ஒழுங்காகப் பெற்றுத்தந்த வகையில் இதுவரை 3169 பேர் பயன் பெற்றிருக் கிறார்கள். அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக் கான சிறப்புப் பள்ளி களில் பயிற்றுவிக்கும் சிறப் பாசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சி யாளர்கள் அனைவரை யும் தொடர்ந்து ஊக்கப் படுத்தும் வகையில் அரசு அவர்களுக்கு ஏற் கெனவே வழங்கி வந்த மதிப்பூதியத் தொகை ரூ.3 ஆயிரம் என்பதை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி யுள் ளது.

மாற்றுத் திறனாளி கள் 72 பேர் உண்ணா விரதம் இருந்து சென்னை அரசுப் பொது மருத்துவ மனை யிலே நலிவுற்ற நிலையில் சேர்க்கப் பட்ட செய்தி யினை காலை நானே நேரடி யாக மருத்துவ மனைக்குச் சென்று அந்த மாற்றுத் திறனா ளிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப் படும் என்று உறுதி கூறி அவர் களின் கோரிக்கை களை நிறைவேற்றி வைத்தேன்.

ரூபாய் 45 லட்சம் நன்கொடை

நான் தற்போது எழு திக் கொண்டிருக்கின்ற இளைஞன்'' திரைப் படத் திற்காக வருமான வரித் தொகை போக எனக் களிக்கப் பட்ட 45 லட்சம் ரூபாயை மாற்றுத்திறனாளி களின் நல் வாழ் விற்காக செலவிட வேண்டுமென் பதற்காகவே அந்த வாரி யத்திடம் ஒப் படைக் கப்பட்டது என்ப தையும் நான் ஏற்கெ னவே தெரிவித்திருக்கி றேன்.

எனவே, மாற்றுத் திறனாளிகளை நான் ஏமாற்றுவதாக எத்தனை பேர் அறிக்கை கொடுத் தாலும், அதை தமிழ் நாட்டிலே உள்ள எந்த மாற்றுத்திறனா ளியும் நம்புவதற்கு தயாராக இல்லை என்ப தையும், வயிற்றெரிச்சல், உள் நோக்கம் காரண மாகத்தான் அந்த ஒரு சிலர் அறிக்கைகள் விடுகிறார்கள் என்பதை யும் நான் நன்றாக அறி வேன்.

-இவ்வாறு முதல மைச்சர் கலைஞர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment