கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, May 6, 2011

கருணாநிதி முதல்வராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் - தங்கபாலு பேட்டிதமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய குறிக்கோள். அதற்குதான் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு 06.05.2011 அன்று காலை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு தங்கபாலு அளித்த பேட்டி:

முதலமைச்சர் கலைஞரை வழக்கமாக மரியாதை நிமித்தமாகச் சந்திப்பேன். அந்த அடிப்படையில் தான் இன்றைக்கும் சந்திருக்கிறேன்.

நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தலைவர் கலைஞர் தலைமையிலான கூட்டணி, தமிழக மெங்கும் மிகச் சிறப்பாக பணியாற்றியது, மத்திய மற்றும் மாநில அரசு வழங்கியுள்ள திட்டங்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் திருப்திகரமான முறையில் செயலாக்கத்தில் உள்ளன.

ஆகவே தமிழகத்தில் வரும் தேர்தல் முடிவுகள் தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு ஆற்றி வரும் பணிகளுக்கு -மத்தியில் அன்னை சோனியா காந்தி வழி காட்டுதலின் பேரில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆற்றி வரும் அரும் பணிகளுக்கு தமிழக மக்கள் சிறந்த வெற்றியைக் கொடுப்பார்கள்.

அரசின் சாதனைகளுக்காக தமிழக மக்கள் வாக்களித்திருப்பது மிகச் சிறந்த பாக்கியம், தமிழக முதல்-அமைச்சராக கலைஞர் 6-வது முறையாக பதவியேற்பார்
இவ்வாறு தங்கபாலு கூறினார்.
‘சமீபத்தில் வெளியான ஒரு கருத்துக்கணிப்பில் திமுக தலைமையிலான கூட்டணி 130&க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையில் கூட்டணி அரசு அமைந்தால், அதில் காங்கிரஸ் பங்கேற்குமா?’ என்று நிருபர்கள் கேட்டபோது, “தமிழகத்தில் மீண்டும் கருணாநிதி தலைமையிலான அரசு அமைய வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய குறிக்கோள். அதுதான் எங்களுடைய வேண்டுகோள். அதற்குதான் மக்கள் வாக்களித்துள்ளனர். மற்ற விஷயங்களைப் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது” என்றார் தங்கபாலு.

No comments:

Post a Comment