கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, May 5, 2011

யார் புழுதிவாரி தூற்றினாலும் ஓய்வில்லா உழைப்பு இன்று போல் என்றும் தொடரும் - முதல்வர் கருணாநிதி அறிக்கை


யார் புழுதிவாரி தூற்றினாலும் லட்சியப் பயணமும் ஓய்வில்லா உழைப்பும் இன்று போல் என் றும் தொடரும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மக்களுக்கான மகத்தான பணிகளில் நாம் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டிருக்கும்போது நமது மனதைச் சோர்வடையச் செய்து, கவனத்தை திசை திருப்பிடும் தீயநோக்கத் தோடு ஆதிக்க சக்திகள் சில, நமது பணிகளின் சிறப்பையும், சாதனைகளின் தரத்தையும் வேண்டுமென்றே குறைத்தும், திரித்தும் மதிப்பிட்டு விமர்சனம் என்ற பெயரில், ஏடுகளிலும், ஊடகங்களிலும் வெளியிட்டு வருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான், இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ் நாளேடு ஒன்றில் ரிவர்ஸ் கியரில் போகிறது தமிழ்நாடு என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை.
இந்தியாவிலேயே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுவது கழக ஆட்சியில்தான் தமிழகத்திலே மட்டும்தான். க ரூ 50க்கு 10 சமையல் பொருள்கள், மாதந்தோறும் குறைந்த விலையில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, கோதுமை மாவு வழங்கப்பட்டு வருகின்றன.
மருத்துவப் பாதுகாப்புக்கு உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அழைத்ததும் வந்து அவசர சிகிச்சைக்கு ஆவன செய்திடும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் வருமுன் காப்போம் திட்டம் இளம்சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உறையுள் பாதுகாப்புக்கு மத்திய அரசின் இந்திராகாந்தி நினைவு குடியிருப்புத் திட்டம் குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்கிடும் நோக்கில் கலைஞர் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ், 6 ஆண்டுகளில் அனைத்துக் கிராமங்களிலும் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள், விவசாயத் தொழிலாளர் நலவாரியம் உட்பட, 33 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு 20 லட்சத்து 3 ஆயிரம் அமைப்பு சாரா தொழி லாளர் குடும்பங்களுக்கு, ரூ. 957 கோடியே 48 லட்சம் உதவித் தொகை.
73 லட்சம் குழந்தைகள், மாணவ, மாணவியர்க்கு சத்துணவுடன் வாரம் ஐந்து நாட்களும் முட்டைகள், வாழைப்பழங்கள். பள்ளிக் கல்வியிலும், கல்லூரிக் கல்வியிலும் ஏராளமான சலுகைகள்.
ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் நிதியுதவித் திட்டத்தின்கீழ், 20 லட்சத்து 75 ஆயிரம் ஏழை மகளிர்க்கு, ரூ. 1052 கோடியே 83 லட்சம் நிதி உதவி. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 2 லட்சத்து 56 ஆயிரம் ஏழை மக்களுக்கு, ரூ 667 கோடி செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள்.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ரூ. 11 ஆயிரத்து 93 கோடி நிலுவைத் தொகை. இப்படி இந்த ஐந்தாண்டு காலத்தில் எண்ண எண்ண இனித்திடும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி, சாதனைகள் படைத்திருக்கிறோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் காரணமாகத்தான் 9&4&2011ல் கோவையில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், தமிழகம் முன்னோடியாக இருப்பதாக பாராட்டியிருக்கிறார்.
தமிழகத்தின் நிதிநிலை குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கிச் சொல்லியிருப்பது நம் அனைவருக்கும் நிறைவளிப்பது மட்டுமல்ல நினைவிலே கொள்ளத்தக்கதுமாகும்.
இந்த மதிப்பீடுகளையெல்லாம் கண்ட பிறகாவது, ஏனோ தானோ என்று விமர்சனம் செய்து, கழக அரசின் செயல்திறனையும், மக்கள் நலப் பணிகளையும், சாதனைகளையும் இன்னமும் குறைத்து மதிப்பிடுவோர் தமது அணுகுமுறையைத் திருத்திக் கொண்டு, ஆத்திரத்தையும், அலட்சியத்தையும் குறைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
எவர் போற்றினாலும், புகழ்ந்தாலும் புழுதிவாரித் தூற்றினாலும், பொ ருள்படுத்தாமல் போ னாலும் நமது லட் சியப் பயணமும், தமி ழகத்துக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்குமான நமது பணிகளும், ஓய்வில்லா உழைப்பும், இன்றுபோல் என்றும் தொடரும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment