கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, May 14, 2011

திரைப்பட தொழிலாளர்களுக்கு நன்மைகள் செய்ய முடியுமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டு இருக்கிறது: வி.சி.குகநாதன்


தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் பதவியில் இருந்து வி.சி.குகநாதன் ராஜினாமா செய்தார்.


இதுகுறித்து, வி.சி.குகநாதன் கூறியதாவது:


திரைப்பட தொழிலாளர்களுக்காக கடந்த 2 வருடங்களாக அரசின் உதவியை பெற்று, என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். தொடர்ந்து அதை செய்ய முடியுமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டு இருக்கிறது. எனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன்.


என் ராஜினாமா கடிதத்தை செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோரிடம் கொடுத்து விட்டேன்.


இவ்வாறு வி.சி.குகநாதன் கூறினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராம.நாராயணன் ராஜினாமா :

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராம.நாராயணன் ராஜினாமா செய்து இருக்கிறார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் சொந்த வேலை காரணமாகவும், புதிய பட வேலையில் ஈடுபட இருப்பதாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்து கொள்கிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த பட அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்

பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் பதவியில் இருந்து குமரி அனந்தன் ராஜினாமா :

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் நேற்று அரசு செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:


சுதேசியத்தில் பற்றுக் கொண்டவன் என்ற வகையில் பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் என்ற பொறுப்பை அளித்த தமிழக அரசுக்கு நன்றி செலுத்துகிறேன். ஒரு லிட்டர் ரூ.3.50 என்று விற்ற பதநீருக்கு பத்து ரூபாய் என்று விலையை உயர்த்தித் தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பனைமரத் தொழிலாளி, தான் மட்டுமே எடுத்துச் செல்லும் வகையில் கருவியொன்றை கனமற்ற உலோகத்தில் செய்ய வேண்டும்.

பனைச் செல்வம் பெருஞ்செல்வம். உடல் நலம் தரும் செல்வம். அதை வளர்க்கவும் நிற்கின்ற பனைகளைச் சிறந்த முறையில் பயன்படுத்தவும் மேற்கொண்டு பல திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்த வேண்டும். ஊதியம் இல்லாத வேலையினாலும் எளியோர்க்கும் நாட்டிற்கும் செய்யும் தொண்டாக மனநிறைவோடு அரசு தந்த பொறுப்பில் இருந்து பணியாற்றினேன். நான் பணியாற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்த அரசுக்கும், நான் பதவியில் இருந்த போது ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று அந்தப் பொறுப்பில் இருந்து விலக்கிக் கொள்கிறேன் என்பதையும், பணிமனை வருவதற்கு தந்திருந்த அரசு காரையும் ஒப்படைக்கிறேன்.


இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ராஜினாமா

சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, திமுக வக்கீல்கள் அரசு வக்கீல்கள் பணியிலிருந்து ராஜினாமா செய்தனர்.
தமிழக அரசின் தலை மை வக்கீல் பி.எஸ்.ராமன், ஆளுனர் பர்னாலாவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்து வந்த நானும் மரபு நடவடிக்கையாக எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கிறேன். கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், குற்றவியல் தலைமை வக்கீல் (பி.பி), அரசு பிளீடர் உள்ளிட்ட மற்ற அரசு வக்கீல்களும் ஏற்கனவே தங்களின் ராஜினாமா கடிதங்களை தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ளனர்.
பொதுமக்களுக்காக நீதிமன்ற நிர்வாகத்தில் என்னை பணியாற்றுவதற்காக பணித்ததை அடுத்து, பல்வேறு துறைகள், அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும், உள்ளாட்சி மன்றங் களின் ஒத்துழைப்புடனும, எனது அலுவலக ஊழியர்களின் உதவியுடனும் எனது பணியைச் செய்துள்ளேன். அரசியலமைப்பு விதிகளின்படி அடுத்த அட்வகேட் ஜெனரல் பதவி வகிக்கும்வரை எனது பணியை தொடர்ந்து செய்வேன்” என்றார்.
இதேபோல், செஷன்ஸ் நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களில் அரசு சார்பில் ஆஜராகி வந்த வக்கீல்களும் அரசிடம் தங்களின் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.

தமிழ்நாடு காலணி, தோல் பொருள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரிய தலைவர் வலசை ரவிச்சந்திரன் ராஜினாமா :

தமிழ்நாடு காலணி, தோல் பொருள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரிய தலைவர் வலசை ரவிச்சந்திரன் ராஜினாமா செய்துள்ளார்.
வலசை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த வாரிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து, சாலை ஓரம் செருப்பு தைக்கும் 1000 தொழிலாளர்களுக்கு காலணிகள் கருவிகள் கொண்ட கலப்பெட்டிகள் வழங்கப்பட்டன.
இந்த தொழிலாளர்கள் முன்னேற்றம் அடைய இலவச காலணி கூடம் வழங்கப்பட்டு ^௫௦ ஆயிரம் மானியம் வழங்க வேண்டும்.
நம்நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஏற்படுத்தி தரும் இந்த தொழி லாளர்களுக்கு மேலும் பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு பொறுப்பு - சுப.வீரபாண்டியன் விலகல் :

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் சமூக சீர்திருத்தக்குழு பொதுக்குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்றத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய அரசு பதவி ஏற்பு - வாரியத்தலைவர்கள் ராஜினாமா :

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து இருப்பதாக, இதுவரையில் அந்தப் பொறுப்பில் இருந்த எஸ்.பி.சற்குணபாண்டியன் அறிவித்துள்ளார்.

இதேபோல், அறிவியல் தமிழ் மன்றம் துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், சமூக நலவாரியத்தலைவர் பதவியில் இருந்து கவிஞர் சல்மா, வக்பு வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

வக்பு வாரிய உறுப்பினர்கள் விலகல் :

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் வெளியிட்ட அறிக்கையில், �இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கலிலூர் ரகுமான், திருப்பூர் அல்தாப் உசேன் ஆகியோர், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளனர். தமிழ்நாடு அரசு சமூக நீதிக்குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் திருப்பூர் அல்தாப் விலகினார். இதற்கான கடிதத்தை தமிழக அரசுக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர், என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment