கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, May 5, 2011

ஒரே மாதிரியான சட்டத் திட்டங்களை தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும்: திருநாவுக்கரசர்


தேர்தல் ஆணையத்திற்கான நடவடிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. ஒரே மாதிரியான கொள்கையை, ஒரே மாதிரியான சட்டத் திட்டங்களை தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

முதல் அமைச்சர் கலைஞரை 04.05.2011 அன்று முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,


தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற பிறகு வாக்களிப்பு நடைபெற்றதற்குப் பிறகு முதல் அமைச்சர் கலைஞரை நான் மரியாதை நிமித்தமாக இன்றைக்குச் சந்தித்திருக்கிறேன். கலைஞர் 6வது முறையாக மீண்டும் முதல் அமைச்சராக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அதற்கான வாழ்த்தை அவருக்குத் தெரிவித்தேன்.

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று கலைஞர் தலைமையில் ஆட்சி மீண்டும் ஏற்படும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன் என்றார்.


தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் கமிஷனுடைய கெடுபிடிகள் அதிகமான இருக்கிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த திருநாவுக்கரசர்,


இதுகுறித்து முதல் அமைச்சர் கலைஞர் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார். பொதுவாக 5 மாநிலத் தேர்தல்களைப் பார்க்கும் போது தமிழகத்தில் கொஞ்சம் அதிகமாகவே கெடுபிடிகள் இருக்கின்றன. பொதுமக்களுடைய கருத்தும், என்னுடைய கருத்தும் இதுதான்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று ப.சிதம்பரம் அவர்களும், கலைஞர் அவர்களும் கூறியிருப்பதைப் போல இதுகுறித்து விளக்கமாக நாடாளுமன்றத்திலே விவாதித்து தேர்தல் ஆணையத்திற்கான அதிகாரங்களை வரையறுக்க வேண்டும். ஏனெனில் அவர்களது நடவடிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே ஒரே மாதிரியான கொள்கையை, ஒரே மாதிரியான சட்டத் திட்டங்களை தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து என்றார்.

No comments:

Post a Comment