திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் 01.05.2011 அன்று திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன்,
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள இணக்கமான உறவு காரணமாக தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் பெருமளவு செயல்படுத்தப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. தமிழகத்தில் திமுக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று சொன்னதுபோல, இன்றைக்கு தமிழகத்தினுடைய நல்ல வளர்ச்சி, வருகின்ற காலங்களிலே தமிழகத்துக்கு கிடைக்க போகிற தொடர் வளர்ச்சி. சிறந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக, இந்த தேர்தலிலே ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment