
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பி. சி.பி.ஐ.போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கனிமொழியை பார்ப்பதற்காக முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 23.05.2011 அன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார் .
டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ தனி நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு 24.05.2011 அன்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி உள்ளிட்டோரை போலீசார் அழைத்து வந்தனர். கனிமொழி, ராசா ஆகிய இருவரையும் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவர்கள் 50 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
வழக்கு நிலவரம் பற்றி ஸ்டாலினிடம் வக்கீல் சண்முகசுந்தரம் விளக்கினார். நீதிமன்றத்துக்கு வந்திருந்த திமுக முக்கியப் பிரமுகர்களும், கனிமொழியை சந்தித்து பேசினர். மாலை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
கனிமொழி ஜாமீன் மனு - விசாரணை ஒத்திவைப்பு :
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, 23.05.2011 அன்று டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி மனுதாக்கல் செய்தார்.
இதேபோல் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் மனுதாக்கல் செய்தார். இந்த மனு 24.05.2011 அன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை வருகிற 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் இது குறித்து விளக்கம் கேட்டு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment