கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, May 5, 2011

28வது வணிகர் தின விழா : முதல்வர் வாழ்த்து செய்தி


வணிகர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் கருணாநிதி 04.05.2011 அன்று வெளியிட்ட வணிகர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 28ம் வணிகர் தின விழா, 5&5&2011ல் சென்னையில் கொண்டாடப்படுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மக்கள் அனைவருக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும், அவர்கள் வாழும் இடங்களின் அருகிலேயே கிடைக்கச் செய்திடும் முயற்சியில், அல்லும் பகலும் அயராமல் பாடுபடும் வணிகப் பெருமக்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்ற நோக்கில், 25&9&1989ல் வணிகர் நல வாரியத்தை உருவாக்கி அதன் மூலம் வணிகர் சமுதாய மக்களுக்கு தொடர்ந்து பயன் கிடைக்க ஆவன செய்த நிகழ்வை இவ்வேளையில் நினைவு கூர்கிறேன்.
2006ம் ஆண்டில் இந்த அரசு அமைந்த பிறகு வணிகர் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வந்த குடும்ப நல உதவித்தொகை ரூ.20 ஆயிரம் என்பது ரூ.50 ஆயிரமாகவும், வாரிய உறுப்பினர்கள் வாரிசுகளின் கல்லூரிப் படிப்புக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தியதுடன், தொழிற்கல்வி பயிலும் ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கிடவும் ஆவன செய்துள்ளது இந்த அரசு என்பதை சுட்டிக்காட்டி, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெறும் வணிகர் தின விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நிகழவும், மேன்மேலும் தொழில் செழித்து வணிகப் பெருமக்களும் அவர் தம் குடும்பத்தாரும், வளமாகவும், நலமாக வாழவும் என் உளமார்ந்த வணிகர் தின நல வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வணிகர் தினம் - ஸ்டாலின் வாழ்த்து :
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வணிகர் சங் களின் பேரமைப்பின் சார் பில் மே 5ம் தேதி 28வது வணிகர் தின விழா நடைபெறுவது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய திருநாட்டில் முதன்முதலாக வணிகர் நல வாரியம் அமைத்து தந்து, வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகளையும், நலத்திட்டங்களையும் நிறைவேற்றியது திமுக அரசு தான். இதை வணிகப் பெருமக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு நினைவு கொள்வார்கள் என் பதை நம்புகிறேன்என்றார் .

No comments:

Post a Comment