கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, May 26, 2011

ஐ.மு.கூட்டணி அரசு அறிக்கை வெளியீடு


ஊழலை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2 ஆண்டுகளை முடித்து, 3வது ஆண்டில் 22.05.2011 அன்று அடியெடுத்து வைத்தது.
இதை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மன்மோகன் இல்லத்தில் ஐ.மு கூட்டணி தலைவர்கள் கூட்டம் 22.05.2011 அன்று நடந்தது. அப்போது, கடந்த 2 ஆண்டு ஐ.மு.கூட்டணி அரசின் செயல்பாடுகள், அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் ஐ.மு.கூட்டணியின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை மன்மோகன், சோனியா ஆகியோர் வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:
நாட்டில் ஊழலால் ஐ.மு கூட்டணி அரசுக்கு களங்கம் ஏற்பட்டது. இதை நிச்சயம் தடுப்போம். ஊழல் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுப்போம். ஊழலால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த பிரச்னையை சரியான முறையில் கையாண்டு குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
ஊழலை தடுத்து நிர்வாகத்தை மேம்படுத்த ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை ஐ.மு.கூட்டணி அரசு எடுத்துள்ளது. அந்த நடவடிக்கைகளுக்கு விரைவில் பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம். தூய்மையான, பலனுள்ள நிர்வாகத்துக்கு குறுக்கே எந்த தடை வந்தாலும், அதை பொறுத்து கொள்ள மாட்டோம். அரசு பணியில் உள்ளவர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்போம்.
ஊழல் புகார் கூறுபவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வகை செய்யும் மசோதா ஏற்கனவே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விரைவில் ஒப்புதல் கிடைக்க முயற்சி எடுப்போம்.

இவ்வாறு ஐ.மு.கூட்டணி அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு திமுக சார்பில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment