கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, May 27, 2011

உளமாற என உறுதி கூறி மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்


சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை அரங்கு புதுப்பிக்கப்பட்ட பின்னர் முதல் நிகழ்ச்சியாக 14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 23.05.2011 அன்று பகல் 12.30 மணிக்கு துவங்கியது.

பகல் 12.25 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் பேரவைக்குள் வந்தனர். உட்கார இடம் இன்றி தவித்த அவர்கள் 5 நிமிடம் கழித்து 6ம் வரிசை இருக்கையில் அமர்ந்தனர். சுப தங்கவேலன், மைதீன்கான் ஆகியோர் இருக்கை கிடைக்காமல் நீண்ட நேரம் தவித்தனர்.

தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 23.05.2011 அன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாகயர் செ.கு.தமிழரசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர், 23.05.2011 அன்று மதியம் 1.10 மணிக்கு பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவி ஏற்கும் முன்பு, வெற்றி சான்றிதழை பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் கொடுத்தார். பின்னர், “உளமாற” என்று கூறி பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்தார்.
பேரவை உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்திட்ட அவர், தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசனுடன் கை குலுக்கி மரியாதை செலுத்தினார். இருக்கைக்கு செல்லும் போது விஜயகாந்த் உள்பட பேரவையில் இருந்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மு.க.ஸ்டாலின் வணக்கம் தெரிவித்தார். ஸ்டாலின் இருக்கைக்கு இடது பக்கம் எ.வ.வேலு, வலது பக்கம் ஐ.பெரியசாமி அமர்ந்திருந்தனர்.

No comments:

Post a Comment