திமுக தலைவரும், முதல் அமைச்சருமான கலைஞர் 10.05.2011 அன்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி' பன்னிரெண்டாம் மடலத்தினை வெளியிட, நிதியமைச்சர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்ககத்தின் மதிப்புறு இயக்குநர் மதிவாணன் உடனிருந்தார்.
தமிழக அரசு 10.05.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
செம்மொழியாம் தமிழ் மொழியின் தனித் தன்மையையும், தொன்மையையும, மேன்மையையும் புலப்படுத்தும் நோக்கில் ‘செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி’ ஒன்றை உருவாக்கும் திட்டம், 8.5.1974 அன்று திமுக அரசு பொறுப்பிலே இருந்தபோது திட்டமிடப்பட்டது.
‘மொழி ஞாயிறு’ ஞா.தேவநேய பாவாணர் இயக்குனராகக் கொண்டு தொடங்கப்பட்டு, அந்த பணியை முனைவர் இரா.மதிவாணன் பின்னர் பொறுப்பேற்று தொடர்ந்து பணியாற்றினார். அகர முதலியின் மடலங்களை வரிசையாக அச்சியற்றி வெளியிட்டதோடு, அதன் இறுதி மடலமாகிய பன்னிரெண்டாம் மடலத்தை, திட்டத்தின் 31வது வெளியீடாக தயாரித்தது.
அதை முதல்வர் கருணாநிதி வெளியிட, அதன் முதல் பிரதியை நிதியமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார். 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மாபெரும் பணி இத்துடன் முடிவுறுகிறது. இந்த பன்னிரண்டாம் மடலம் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்ககத்தின் மடலம், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதை வெளியிடும்போது இதன் மதிப்புறு இயக்குனர் முனைவர் இரா.மதிவாணன் உடன் இருந்தார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment