கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, May 27, 2011

அவதூறான பொய்ச் செய்தி வெளியிட்ட இந்து நாளிதழுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்


இந்து நாளிதழில் தன்னை பற்றி வெளியிடப்பட்ட செய்தி அவதூறானது, உண்மைக்கு மாறானது எனக்கூறி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்து 23.05.2011 அன்றைய இதழின் முதல் மற்றும் 11ம் பக்கங்களில் தமிழக மற்றும் தேசிய அரசியல் குறித்து 2008ம் ஆண்டில் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் சில கருத்துக்களை கூறியதாக கற்பனை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் இணைய தளம் அம்பலப்படுத்தி வரும் ரகசிய கேபிள்களில் இருந்து இந்த தகவலை திரட்டி பிரசுரிப்பதாக இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது, அவதூறானது, கற்பனையானது, தவறான உள்நோக்கம் கொண்டது என தயாநிதி மாறன் தனது நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். சுய லாப நோக்கங்களுக்காக தனக்கு எதிராக செயல்படும் ஒரு லாபியின் அங்கமாகிவிட்ட இந்து நாளிதழ், சமுதாயத்தில் தனக்கு இருக்கும் மரியாதையையும் நல்ல பெயரையும் கெடுப்பதற்காக திட்டமிட்டு இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது என்றும் தயாநிதி கூறியுள்ளார். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால், அது உண்மையானதுதானா என்று சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்து அதன் பின்னர் பிரசுரிப்பதுதான் பத்திரிகை தர்மம். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்கப்படும் கண்ணியமான எந்த பத்திரிகையும் அதைத்தான் செய்யும். இந்து நாளிதழ் அந்த குறைந்தபட்ச கடமையைக்கூட செய்யத் தவறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என தயாநிதி மாறன் கண்டித்துள்ளார்.
விற்பனை சரிந்து வருவதை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் சமீபகாலமாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் ரகசியங்கள் என்ற பெயரில் ஆதாரமற்ற செய்திகளை மலிவான விளம்பரம் தேடுவதற்காக இந்து நாளிதழ் வெளியிட்டு வருவது கண்கூடாக தெரிகிறது. அதிகம் விற்பதற்காக ஒழுக்க நியதிகளில் இருந்து இந்து நாளிதழ் தடம் புரண்டு செல்கிறது என்று தயாநிதி மாறன் மேலும் கூறியுள்ளார்.
மேற்கண்ட செய்திகளை உடனடியாக திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிப்பதுடன் ஐந்து கோடி ரூபாய் இழப்பீடாக தரவும் இந்து முதன்மை ஆசிரியர் என்.ராமுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவ்வாறு செய்யத் தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment