திமுக தலைவர் கலைஞரை காங்கிரஸ் மூத்த தலைவர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான குலாம் நபி ஆஸாத் 23.05.2011 அன்று காலை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் தமிழக விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் ஆஸாத், கலைஞரை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்று சந்தித்தார்.
அதன்பின், ஆசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைகளால், காங்கிரஸ் & திமுக உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எதிர்காலத்திலும் இந்த கூட்டணி நீடித்திருக்கும். கனிமொழி ஒரு பெண் என்ற வகையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதில், சோனியா கவலை கொண்டுள்ளார். ஆனாலும், இவ்விஷயத்தில் காங்கிரஸ் எதுவும் செய்ய இயலாது.
ஸ்பெக்ட்ரம் வழக்கை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருகிறது. கல்மாடி வழக்கு உள்பட எந்த வழக்கு விசாரணையிலும் மத்திய அரசு குறுக்கிட விரும்பவில்லை என்பதையும், தற்போதுள்ள சூழ்நிலைகளையும் கருணாநிதி உணர்ந்துள்ளார். வழக்கை சட்டரீதியாக சந்திப்பதாக திமுகவும் கூறியுள்ளது. எனினும் தற்போதைய நிகழ்வுகள் திமுக காங்கிரஸ் உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எதிர்காலத்தில் இந்த உறவில் எந்த பாதிப்பும் இல்லை
இவ்வாறு ஆசாத் கூறினார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும், கருணாநிதியை சந்தித்து பேசினார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும், கருணாநிதியை சந்தித்து பேசினார்.
கலைஞரை 23.05.2011 அன்று இரவு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோரும் சந்தித்தனர்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ஆ.ராசா, சரத்குமார் ஆகியோரை சந்திப்பதற்காக கலைஞர் நேற்று டெல்லி சென்றார் என்பது குறிப்பிடத்தகக்து.
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த திமுக தலைவர் கலைஞர் 24.05.2011 அன்று மாலை சென்னை திரும்பினார். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வந்தனர். முன்னதாக மாலை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
No comments:
Post a Comment