யார் ஆட்சி அமைக்கப் போகிறார்? என்ற வினாவை நெஞ்சத்தில் ஏந்திக்கொண்டு, மே 13ஆம் நாள் வரைக் காத்துக் கொண்டிருக் கிறார்கள் வாக்களித்த தமிழக மக்கள்
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க.அரசு மக்களுக்குச் செய்த நலத்திட்டங்கள், அதன் பயன்கள், தொடர்ந்து மக்களுக்குச் செய்ய இருக்கின்ற மக்கள் நலத்திட்டங்கள் ஆகியனவற்றை மக்கள் முன் வைத்துத் தேர்தல்களம் கண்டது தி.மு.க.
இதற்கு மாறாகத் தொடக்கம் முதல் அனைத்துத் தேர்தல் பிரச்சாரத்திலும் குழப்பங்களை முன்னிறுத்தியே எதிர்க்கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன.
மக்களைப் பற்றியோ, அவர்களின் வாழ்வாதாரங்களைப் பற்றியோ பேசாமல், கலைஞரையும், அவரின் குடும்பத்தினரையும் தூற்றிப் பேசியும், தனிநபர் விமர்சனம் செய்தும் தேர்தல் களத்தில் தள்ளாடிப் போனார்கள் அவர்கள். “ அவாள் ”களின் ஊடகங்களும் அவர்களுக்குத் துணைபோயின.
தேர்தலை நடத்தி முடித்த இந்தியத் தேர்தல் ஆணையம், இதுவரை இல்லாத அளவுக்கு சட்டாம் பிள்ளைத் தனத்தை இத்தேர்தலில் காட்டி முடித்துவிட்டது.
தமிழகத்தில் காட்டிய கெடுபிடியை ஏனைய தேர்தல் நடந்த மாநிலங்களில் காட்டியதாகத் தெரியவில்லை. மக்கள் பட்ட வேதனை நீதிமன்றம் வரை சென்று விட்டது.
ஆனாலும் தேர்தலில் தீர்ப்பு வழங்க வேண்டியவர்கள் மக்கள். ஆணையமோ கட்சிகளோ அல்ல.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல், மக்களுக்குச் சென்றடைந்துள்ளன என்பதை அவர்களே நன்றியுணர்வுடன் கூறுகிறார்கள்.
மக்கள் காட்டும் நன்றிப் பெருக்கு, அவர்களின் தேர்தல் தீர்ப்பு எப்படி இருக்கப்போகிறது என்பதற்கான அடையாளம்.
நல்ல தீர்ப்பு நாளை வரும்!
கலைஞர் தோளில் மாலை விழும்!!
நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்
No comments:
Post a Comment